ஒரு எக்காளம் விளங்காத சத்தமிடுகிறது Phoenix, Arizona, USA 63-0114 1சகோதரன்‌ டீமாஸ்‌. உங்களுக்கு மிக்க நன்றி. இந்த பனிமயமான தேசத்தில்‌ இங்கே. இன்றிரவு இந்த கிறிஸ்தவ சபையில்‌ இங்கு இருப்பது ஒரு மகத்தான சிலாக்கியமாக இருக்கிறது. சற்று முன்‌. நான்‌ வீட்டிற்கு தொலைபேசியில்‌ பேசினேன்‌. இங்கு இருப்பதை காட்டிலும்‌ அங்கே வடக்கில்‌ சுமார்‌ இருபது பாகைகள்‌ வெப்பமாக இருக்கிறதாம்‌. நான்‌ அதை என்னோடு கொண்டு வந்திருக்க வேண்டும்‌. நான்‌ துரிதமாக வெளியேறி மீண்டும்‌ உடனடியாக. திரும்பிச்‌ செல்வேன்‌. எல்லா தாவரங்களும்‌ உறைந்து கொண்டிருக்கின்றன. கிரீச்சி. நீங்கள்‌ அதைக்‌ குறித்து என்ன நினைக்கிறீர்கள்‌? அது ஒரு...[அந்த சகோதரன்‌. “குளிராக உள்ளது”என்கிறார்‌—ஆசி.] அது நிச்சயமாகவே குளிராக உள்ளது. மேலும்‌ இன்றிரவு இந்த அருமையான போதகரை சந்திப்பதிலும்‌ ஜனங்களாகிய உங்களைக்‌ காண்பதிலும்‌ மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்‌. நான்‌ சற்று முன்புதான்‌ அங்கிருந்து வந்தேன்‌. இன்றைக்கு நான்‌ செல்லவேண்டியிருந்த. டூசானிலிருந்து வருகிறேன்‌. நேற்றிரவு வாகனத்தை ஓட்டிவிட்டு. இன்று காலை சுமார்‌ இரண்டரை மணிக்கு. டூசானில்‌ இறங்கினேன்‌. அதன் பின்னர்‌ நாள்‌ முழுவதும்‌ அங்கேயே இருந்தேன்‌. மேலும்‌ ஒரு சில நிமிடங்கள்‌ கழித்து….பாருங்கள்‌. நான்‌ உள்ளே நுழைந்து. சுமார்‌ ஒன்றரை மணி நேரமாக. அதுபோன்று. இங்கே. இருந்து வருகிறேன்‌ என்று. நான்‌ நினைக்கிறேன்‌. எனவே நான்‌ மிக அதிகமாக உறங்கவில்லை. ஆனால்‌ நான்‌ இங்கு உறங்க செல்லாதிருக்க முயற்சிப்பேன்‌. ஆனால்‌ நாங்கள்‌—நாங்கள்‌ இங்கிருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறோம்‌. இந்த சிறு பையன்‌. இங்கே இந்த ஒலிபெருக்கிகளோடு சுற்றி விளையாடுகிறான்‌. நான்‌ பின்னால்‌ அங்கே. அந்த...அந்த சிறு பிள்ளைகளுடைய இருக்கைகள்‌ ஒன்றில்‌ அமர்ந்தேன்‌.குட்டி பையன்‌ வந்து. என்னை உண்மையாகவே வினோதமாகப்‌ பார்த்தான்‌. அப்பொழுது. “நான்‌ குழந்தைகளாகிய நாம்‌ எல்லோரும்‌ ஒன்றுசேர்ந்து அமரலாம்‌. நான்‌ அமரலாமா?” என்று கேட்டேன்‌.இப்பொழுது. அந்த குட்டி நபர்களை நான்‌ நிச்சயமாகவே நேசிக்கிறேன்‌. 2மேலும்‌ இது. ஓ. இன்றிரவு இங்கிருப்பதும்‌. சுற்றி நின்றுகொண்டிருக்கிற இந்த அருமையான ஜனக்கூட்டத்தை உடையதாயிருப்பதும்‌ அருமையாக உள்ளது. வரவிருக்கும்‌ கூட்டத்தைப்‌ பற்றி, சகோதரன்‌ வில்லியம்ஸ்‌. மற்றும்‌ சகோதரன்‌ரோஸ்‌. உங்கள்‌ யாவருக்கும்‌. அதைக்குறித்து கூறியிருக்கிறார்கள்‌ என்று இப்பொழுது நான்‌ நம்புகிறேன். உங்களுக்கு நன்றாகத்‌ தெரிந்திருக்கும்‌ என்று நான்‌ யூகிக்கிறேன்‌. உடனே. வர்த்தக புருஷருடைய கூட்டத்தில்‌ ராமதாவில்‌ இருக்க வேண்டும்‌. நாம்‌ அங்கே ஒரு மகத்தான நேரத்தை எதிர்பார்த்துக்‌ கொண்டிருக்கிறோம்‌. சகோதரன்‌ வெல்மர்‌ கார்ட்னர்‌. ஒரு அற்புதமான. ஆற்றல்‌ வாய்ந்த பேச்சாளர்‌: மேலும்‌ மற்ற ஊழியக்காரர்களும்‌. ஓரல்‌ ராபர்ட்ஸ்‌ மற்றும்‌ அநேகர்‌ அங்கிருப்பர்‌. மேலும்‌ நாம்‌ கர்த்தருக்குள்‌ ஒரு மகத்தான நேரத்தை எதிர்பார்த்துக்‌ கொண்டிருக்கிறோம்‌. இந்த நேரங்கள்‌ சிலவற்றில்‌. நாம்‌ அந்த இடத்தில்‌ ஒரு சுகமளிக்கும்‌ ஆராதனையை நடத்துவோம்‌ என்று. நான்‌ நினைக்கிறேன்‌. ஹு-ஹூ, நான்‌ சகோதரன்‌ ஓரலை அழைக்க விரும்புகிறேன்‌. மேலும்‌ நாம்‌ ஒன்று சேர்வோம்‌. ஆம்‌. ஐயா.அது அருமையானதாக இருக்காதா? அது அதற்கான ஒரு— ஒரு உண்மையான விடியலாய்‌ இருக்கும்‌. அது இருக்காதா? ராமதாவில்‌ நடக்கும்‌. ஒரு சுகமளிக்கும்‌ ஆராதனை. அது அருமையாக இருக்கும்‌. நாம்‌...எனவே நாம்‌ அதைச்‌ செய்யலாம்‌ என்பதை. நீங்கள்‌ அறிவீர்கள்‌. கர்த்தர்‌ நமக்காக. ஒரு சுகமளிக்கும்‌ ஆராதனையை அருளுவார்‌. எனவே நாம்‌...இப்பொழுதிலிருந்து நற்செய்திகளை பரப்ப முயற்ச்சிப்பதற்கு. ஒருவரோடு ஒருவர்‌ தொடர்பு கொள்வதற்கும்‌. பல்வேறுபட்ட எல்லா சபைகளிலும்‌ ஐக்கியப்‌ கொள்ளவும்‌ சபை சபையாய்‌ செல்வோம்‌. அந்த விதமாகத்தான்‌ நாம்‌ கிறிஸ்துவில்‌ ஒன்றாக இருக்கிறோம்‌ என்று நாம்‌ விசுவாசிக்கிறோம்‌. 3நான்‌ அன்றொரு நாள்‌ ஒரு மருத்துவரிடத்தில்‌ பேசிக் கொண்டிருந்தேன்‌. நான்‌ வெளிநாடுகளுக்கு செல்ல ஆயத்தமாகிக்‌ கொண்டிருக்கிறேன்‌. அப்படியானால்‌ நீங்கள்‌ ஒரு சரீரப்‌ பிரகாரமான பரிசோதனையை செய்ய வேண்டும்‌. எனவே நான்‌ பரிசோதனைக்காக உள்ளே இருந்தேன்‌. அவர்‌ எனக்கு அந்த அதிர்வலைகளைக் கொண்ட படமொன்றை எடுத்து...நான்‌...அது என்னவென்று என்னைக்‌ கேட்காதீர்கள்‌. மேலும்‌ அவர்‌ வினோதமான ஏதோ ஒரு காரியத்தைக்‌ கண்டறிந்தார்‌. மேலும்‌ அவரால்‌ திரும்பி வந்து அதைக்‌ கூற முடியவில்லை. அவர்‌ ஒரு மருத்துவர்களின்‌ ஆலோசனைக்‌ குழுவை வைத்துள்ளார்‌. ஆனாலும்‌ அவரால்‌ அதை புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்‌. “இதற்கு முன்பு நான்‌ அதை ஒருபோதும்‌ கண்டதேயில்லை” என்றார்‌. மேலும்‌ அவர்‌ பொதுவாக எப்படி அங்கே உணர்வு. மற்றும்‌ ஒரு அரை உணர்வு உள்ளது என்பதைக்‌ குறித்த புகைபடத்தை காண்பித்த போது. அவை ஒன்றுக்கொன்று நெருக்கமாயில் லாதிருக்கிறது. ஆனால்‌ எனக்கு அவை இரண்டும்‌ ஒன்றாயிருந்ததை அவர்‌ கவனித்தார்‌. எனவே “உண்மையாகவே நீர்‌ ஒரு வினோதமான நபராக இருக்கிறீர்‌ என்றார்‌. நான்‌. ”நான்‌ அதை எப்பொழுதுமே அறிந்துள்ளேன்‌. ஒவ்வொருவரும்‌ அறிந்திருக்கிறார்கள்‌“ என்றேன்‌. அவரோ “நாங்கள்‌ அதை இதற்கு முன்பு ஒரு போதும்‌ கண்டதில்லை” என்றார்‌. எனவே அவர்‌ அதைக்‌ குறித்து என்னிடத்தில்‌ கூற வேண்டியதாயிருந்தது. நான்‌. “சரி” என்றேன்‌. மேலும்‌ நான்‌. “உங்களுக்குத்‌ தெரியும்‌. நல்ல கர்த்தர்‌. அவர்‌ நம்மை உருவாக்கும்போது. அவர்‌ நமக்கு ஒரு சிறு வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறார்‌ என்று நான்‌ நினைக்கிறேன்‌. நாம்‌ ஒருவரையொருவர் போல தோற்றமளிப்பதில்லை. எனவே சில சமயங்களில்‌ நாம்‌ ஒருவரை ஒருவர்‌ போல செயல்புரிவது கூட இல்லை. ஆனால்‌—ஆனால்‌ அவர்‌ அதை அவருக்கு செய்கிறார்‌...அவருடைய சொந்த வழியில்‌ அதை உருவாக்குகிறார்‌. நாம்‌ பெரிய வடிவமைக்கும்‌ இயந்திரத்திற்குள்ளாகச்‌ செல்கிறோம்‌. மேலும்‌ நான்‌ அப்படியே இருக்க. அவர்‌ நம்மை விரும்பும்‌ விதத்தில்‌ அவர்‌ நம்மை வடிவமைப்பார்‌” என்றேன்‌. மேலும்‌ நீங்கள்‌ என்னவாக இருக்கிறீர்கள்‌ என்பதைத் தவிர வேறு ஏதாவதாக இருக்க நீங்கள்‌ விரும்ப மாட்டீர்கள்‌ என்பதை நான்‌ அறிவேன்‌. நாம்‌ யாவரும்‌ விரும்பக்கூடிய ஒரே காரியம்‌...நாம்‌ இரட்சிக்கப்பட்டப்‌ பிறகு தேவனுடைய பிள்ளைகளாகிறோம்‌. ஒவ்வொரு நாளும்‌ சற்று நெருக்கமாக நடக்க வேண்டும்‌ என்பதே நாம்‌ விரும்புகிற ஒரே காரியமாயிருக்கிறது. அந்த மகத்தான ஐக்கியத்திற்காகவே. அதற்காகவே நாம்‌ ஏங்குகிறோம்‌. அது எவ்வளவு அற்புதமாக இருக்கிறதே! நாம்‌ அதைப்‌ பெற்றிருக்கவில்லையென்றால்‌ நாம்‌ என்ன செய்வோம்‌ என்றுநீங்கள்‌ எப்போதாவது யோசித்துள்ளீர்களா? என்ன—என்ன...அந்த மகத்தான நம்பிக்கை நமக்குள்‌ தங்கியிருக்கவில்லையென்றால்‌. நாம்‌ என்ன செய்வோம்‌? 4நான்‌ சபைகளில்‌ ஒன்றில்‌. கூறிக்‌ கொண்டிருந்தேன்‌. நான்‌... முதலாவது. ஓரு இடத்தில்‌. அதன்பின்னர்‌ மற்றொன்று. தேசத்தை சுற்றிலும்‌ நான்‌ சில நேரத்தில்‌ ஒரு கருத்தைக்‌ கூறுகிறேன்‌. அதே சபையில்‌ நான்‌ அதைக்‌ கூறலாம்‌ என்று நினைக்கிறேன்‌. ஆனால்‌ நான்‌ கட்டிடத்தைவிட்டு வெளியேறிக்‌ கொண்டிருந்தேன்‌. ஏனென்றால்‌ அங்கே நான்‌ இதனால்‌ ஒரு விதமாகப்‌ பாரமாக இருந்தேன்‌. இந்த ஜனங்கள்‌ தாங்கள்‌ தெரிந்துள்ள புதிய நடனத்தை இங்கே இன்றைக்கு கிட்டத்தட்ட ஆடிக்‌ கொண்டிருக்கின்றனர்‌. அவர்கள்‌ அதை நெளிந்தாடுதல்‌. அல்லது ஏதோ ஒன்றாக அழைக்கிறார்கள்‌. மேலும்‌ நான்‌. “உலகம்‌ என்னவென்று எனக்குத்‌ தெரியாது மேலும்‌—மேலும்‌ அந்தவிதமாக நடனமாட ஜனங்கள்‌ தங்களுடைய கால்களை உடைத்துக்கொள்ள விரும்புகின்றனர்‌” என்று கூறினேன்‌. எனவே சுமார்‌ இருபத்தியாறு. இருபத்தியேழு வயது கொண்ட ஒரு நபர்‌ அங்கே பின்னால்‌ என்னை சந்தித்தார்‌. “திரு. பிரான்ஹாம்‌ ஒரு நிமிடம்‌” என்றார்‌. மேலும்‌ நான்‌. “என்ன. ஐயா?” என்றேன்‌. அதற்கு அவர்‌. “உங்களுக்குத்‌ தெரியுமா உங்களுக்கு புரியவில்லை” என்றார்‌. அப்பொழுது நான்‌ “எனக்கு புரியவேயில்லை என்று நான்‌ நினைக்கிறேன்” என்றேன்‌. எனவே அவர்‌. “நீங்கள்‌ புரிந்து கொள்ளுங்கள்‌” என்றார்‌. மேலும்‌ அவர்‌“என்னால்‌ உங்களுடைய கருத்தை புரிந்து கொள்ள முடிகிறது” என்றார்‌. தொடர்ந்து. “நீங்கள்‌ ஐம்பது வயது நிரம்பிய ஒரு மனிதனாய்‌ இருக்கிறீர்‌. ஆனால்‌ நீங்கள்‌ என்‌ வயதில்‌ இருந்தால்‌ அது வித்தியாசமாக இருக்கும்‌” என்றார்‌. அப்பொழுது நான்‌. “ஒரு நிமிடம்‌ பொறுங்கள்‌” என்றேன்‌. மேலும்‌ நான்‌“நான்‌ உன்னைவிட பத்து வயது இளையவனாக இருந்தபோதே சுவிசேஷத்தை பிரசங்கித்துக்‌ கொண்டிருந்தேன்‌.நான்‌ இன்னமும்‌ அதே சுவிசேஷத்தை விசுவாசிக்கிறேன்‌. நான்‌ ஏதோ ஒரு காரியம்‌ சம்பவிக்கிறதைக்‌ கண்டேன்‌. எங்கும்‌ பிசாசு உருவாக்கக்‌ கூடிய எல்லா காரியங்களை காட்டிலும்‌ கர்த்தருக்கு சேவை செய்வதிலேயே அதிக சந்தோஷம்‌” என்று கூறினேன்‌. அது ஒரு...அது ஒரு திருப்தியை அளிக்கிறது. 5தாவீது ஒரு முறை “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக்‌ கதறுவது போல தேவனே என்‌ ஆத்துமா உம்மை வாஞ்சித்துக்‌ கதறுகிறது” என்று கூறினான்‌ என்பதை நீங்கள்‌ அறிவீர்கள்‌. காயப்படிருக்கும்‌ அந்த—அந்த இளம்‌ மான்களில்‌ ஒன்றை, நீங்கள்‌எப்போதாவது கண்டறிந்தால்‌: ஒருவேளை நாய்கள்‌ அதைப்‌ பற்றிப்‌ பிடிக்கும்பொழுது அதனுடைய பக்கவாட்டிலிருந்து ஒரு பெரிய மாமிசத்‌ துண்டை அல்லது வேறெங்கிருந்தாவது கடித்து இழுத்துவிடுகிறது. அப்பொழுது அதற்கு இரத்தம்‌ சொட்டிக்கொண்டே இருக்கிறது. மேலும்‌ அதனை. நாய்‌ அதனைப்‌ பின்தொடர முடியும்‌. அது ஒரு மனிதனைப்‌ போன்றல்ல. அதற்கு இரத்தம்‌ சொட்டிக்கொண்டிருந்தாலும்‌ அல்லது இல்லையென்றாலும்‌ அதனால்‌ அந்த மானை வேட்டையாட முடியும்‌. எனவே இந்த ஒரே வழியில்‌...அந்த மானுக்கு இரத்தம்‌ சொட்டிக்‌ கொண்டிருக்குமானால்‌ அந்த மான்‌ உயிர்‌ வாழக்கூடிய ஒரே வழி தண்ணீர்‌ உள்ள இடத்திற்கு சென்றடைவதேயாகும்‌. மேலும்‌ அந்த மான்‌ தண்ணீர்‌ உள்ள இடத்தை சென்றடையக்‌ கூடுமானால்‌. அது அந்த தண்ணீரைப்‌ பருகும்‌. அப்பொழுது அதற்கு இரத்தம்‌ சொட்டுதல்‌ நின்றுபோகும்‌. மேலும்‌— மேலும்‌ அது தப்பிக்க முடியும்‌. அது மிகவும்‌ புத்திசாலியாக இருக்கிறது. 6ஆனால்‌ இப்பொழுது உங்களால்‌ யூகித்துப்‌ பார்க்க முடியும்‌. அந்த இளம்‌ மான்களில்‌ ஒன்று காயம்பட்டு இரத்தம்‌ வடிந்து கொண்டிருக்கையில்‌ அது எப்படி தனது சிறிய தலையை உயர்த்துகிறது என்று பாருங்கள்‌. மேலும்‌ தண்ணீர்‌ எங்கு உள்ளது என்பதை மூக்கினால்‌ கண்டறிவதற்கான எல்லா புலனும்‌ அதற்கு உள்ளது. அது தண்ணீரைக்‌ கண்டடைய வேண்டும்‌. அல்லது மடிந்து போக வேண்டும்‌. மேலும்‌ இப்போது அதற்கு அது மரணமும்‌ ஜீவனுமாய்‌ உள்ளது. அது அதற்கு இருக்கின்ற ஒவ்வொரு—ஒவ்வொரு—ஒவ்வொரு மோப்ப சக்தியினாலும்‌ அது முயற்சித்துக் கொண்டும்‌ ஏங்கிக்‌ கொண்டுமிருக்கிறது. அது அதனை கண்டறிய வேண்டும்‌. இப்பொழுது. அந்த விதமாகவே நாம்‌ தேவனுக்காக தாகம்‌ கொண்டிருக்க வேண்டும்‌. புரிகிறதா? “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக்‌ கதறுவதுபோல தேவனே என்‌ ஆத்துமா உம்மை வாஞ்சித்துக்‌ கதறுகிறது.” எங்காவது அவரோடு மறைந்து கொள்ளுங்கள்‌ என்பதே என்னுடைய இதயத்தின்‌ வாஞ்சையாய்‌ இருக்கிறது. இன்றரவு இங்குள்ள எல்லோருடைய வாஞ்சையும்‌ அதுவே என்றே நான்‌ நம்புகிறேன்‌. 7மேலும்‌ இப்பொழுது ஒவ்வொரு இரவும்‌ நான்‌ இதைக்‌ காண விரும்புகிறேன்‌. நீங்கள்‌ ஒரு இடத்தில்‌ காணும்‌ முகங்களை நீங்கள்‌ அவர்களை மற்றொரு இடத்திலும்‌ பார்க்கிறீர்கள்‌. எனக்கு— எனக்கு அது பிடிக்கும்‌. நாம்‌ எதற்காக இங்கே இருக்கிறோம்‌ என்ற உங்களுடைய ஐக்கியத்தையும்‌ மற்றும்‌ வெளிப்படுத்தல்களையும்‌ நீங்கள்‌ காண்பித்துக்‌ கொண்டிருக்கிறீர்கள்‌. மேலும்‌. ஓ. நான்‌ ஃபீனிக்ஸில்‌ ஒரு பண்டைய-மாதிரியான எழுப்புதலைக்‌ காண நிச்சயம்‌ விரும்புகிறேன்‌. ஓ. என்னே! ஃபீனிக்ஸ்‌ என்ற வார்த்தையை முதல்‌ முறையாக நான்‌ படித்தபோது. அதைக்‌ குறித்து. அது என்னை சிலிர்க்க வைத்தது. ஃபீனிக்ஸ்‌ அரிசோனா என்னே. சிறு பையனாயயிருக்கையிலே நான்‌ “என்னால்‌ அந்த இடத்திற்கு எப்போதாவது செல்ல முடிந்தால்‌ நலமாயிருக்குமே! என்னால்‌ எப்போதாவது அங்கே ஃபீனிக்ஸ்க்கு. செல்ல முடிந்தால்‌ நலமாகயிருக்குமே!” என்று எண்ணியிருந்தேன்‌. இப்பொழுது அதைப்‌ பார்க்கும்போது நாம்‌ இங்கே இருக்கும்போது மற்ற எல்லா இடங்களையும்‌ போலவே அது முழுவதும்‌ பாவத்தின்‌ ஆழத்தில்‌ இருப்பதை, சுற்றுலா பயணிகள்‌ உள்ளே விழுவது, குடிப்பது, கேலி, ஒழுக்கக்கேடு ஒவ்வொரு காரியமும்‌ உள்ளதை நாம்‌ கண்டறிகிறோம்‌. ஆனால்‌ அதே சமயத்தில்‌ இவை எல்லாவற்றின்‌ மத்தியிலும்‌. தேவன்‌ இங்கே இந்த பாலைவனத்திலிருந்து சலித்தெடுத்த அசலான இரத்தினங்கள்‌தேவனுடைய மகிமையான ஜனங்களின்‌ கிரீடத்தில்‌ பிரகாசித்துக்‌ கொண்டிருக்கிறதை நீங்கள்‌ கண்டறிகிறீர்கள்‌. அதற்காகத்தான்‌ நான்‌ இங்கே இன்றிரவு இந்தப்‌ பெரும்‌ கொந்தளிப்பில்‌கூட, அவர்கள்‌ கண்டறியும்படியாய்‌ மற்றவர்களுக்கு கர்த்தராகிய இயேசுவின்‌ வெளிச்சத்தை பிரகாசிக்க முயற்சிக்கிற சகோதரர்களாகிய உங்களோடும்‌ மற்றும்‌ சகோதரிகளாகிய உங்களோடும்‌ என்னையும்‌ இணைத்துக்‌ கொள்ள இங்கிருக்கிறேன்‌. அதேசமயத்தில்‌ அவர்களில்‌ அனேகர்‌ அங்கே வெளியே இருக்கிறார்கள்‌. நான்‌ அதைக்‌ குறித்து திருப்தியடைகின்றேன்‌. இன்னும்‌ உள்ளே வர வேண்டியவர்கள்‌ அநேகர்‌ உள்ளனர்‌. அவர்களை அங்கே கொண்டு வர நம்மால்‌ முடிந்த ஒவ்வொரு காரியத்தையும்‌ நாம்‌ செய்து, கிறிஸ்துவை பிரதிபலிக்கும்‌ ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும்‌. 8இப்பொழுது நாம்‌ ஒரு சிறு வேத பாடத்தை வாசிப்பதற்கு சற்று முன்பு...நான்‌ மிகவும்‌ தாமதமாக உள்ளே வந்த சுமார்‌ ஐந்து நிமிடங்களில்‌நான்‌ ஒரு சில குறிப்புகளை எழுதினேன்‌. மேலும்‌ மத்திய வருமானத்‌ வரித்துறை எனக்கு சில வருமான வரி விண்ணப்பங்களை அனுப்பியுள்ளது. நான்‌ உடனடியாக சென்று அதை அஞ்சல்‌ முத்திரையோடு பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. அதேசமயத்தில்‌ இன்றைக்கு அதைப்‌ பெற்றுக்கொள்ளலாம்‌ என்று நான்‌ நினைக்கிறேன்‌. எனவே நான்‌ அதைப்‌ பெற்றுக்கொள்ள தபால்‌ நிலையத்துக்கு வந்தேன்‌. நான்‌ உள்ளே வந்ததும்‌ பில்லி “நீங்கள்‌ விரைந்து செல்வது நல்லது” என்று கூறினான்‌. எனவே இங்கே... நான்‌ அந்த நபர்களையே திரும்ப திரும்ப பார்க்க வேண்டியதாயிருந்தது. என்னே. ஓ. என்னே! அவர்கள்‌ நீதிமன்ற வாசல்களில்‌ நீதியைக்‌ குறித்து பேசுகிறார்கள்‌. ஆனால்‌ அது எங்கே இருக்கிறது என்று நான்‌ வியப்புறுகிறேன்‌. ஆம்‌ நான்‌ அப்படிப்பட்டதை ஒருபோதும்‌ கண்டதேயில்லை. கூட்டத்தின்‌ கடன்களை அடைக்க, அதன்பேரிலான குற்றத்தோடு கடந்த ஐம்பது ஆண்டுகளில்‌ எனக்கு கொடுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு காசோலையின்‌ பேரிலும்‌ நான்‌ வருமான வரி செலுத்த வேண்டும்‌ என்று அவர்கள்‌ விரும்பினர்‌. பாருங்கள்‌. மூன்று இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம்‌ டாலர்கள்‌. அப்பொழுது நான்‌ “என்னை சுட்டுத்‌ தள்ளிவிடுங்கள்‌” என்றேன்‌. நான்‌ அதை எப்படி செலுத்துவேன்‌? நான்‌. “ஐம்பத்தைந்து சென்டுகளுக்கு மேல்‌ கூட நான்‌ பெற்றிருக்கவில்லையே” என்றேன்‌. எனவே நான்‌ “நான்‌ அதை எப்படி செலுத்துவேன்‌?” என்றேன்‌. மேலும்‌ அவர்கள்‌ என்னை ஐந்து ஆண்டு காலமாக படாதபாடு படுத்தியுள்ளனர்‌. 9ஜனங்கள்‌. அவ்விதமாக அளிக்கிறார்கள்‌. உதாரணமாக, நாங்களும்‌ தொடர்‌ கூட்ட முகாமை நடத்தும்போது மேலும்‌—மேலும்‌ ஜனங்கள்‌ என்னுடைய பெயர்‌ வில்லியம்‌ பிரான்ஹாம்‌ என்பதை மாத்திரமே அவர்கள்‌ அறிவார்கள்‌. அவர்கள்‌ செலவுகளுக்காக மட்டுமே ஒரு காசோலையை பயன்படுத்துகிறார்கள்‌. ஊழியக்காரர்கள்‌ அதைக்‌ குறித்து கவனித்துக்‌ கொள்கிறார்கள்‌. நான்‌ என்னுடைய வாழ்க்கையில்‌ ஒருபோதும்‌ காணிக்கை எடுத்ததேயில்லை. எனவே அவர்கள்‌ அதை எடுக்கையில்‌...ஒரு வாரத்திற்கு நூறு டாலர்கள்‌ என்று நான்‌ என்னுடைய சபையிலிருந்து ஒரு—ஒரு சம்பளத்தை பெற்றுக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ இந்த காணிக்கை...ஆனால்‌ ஒவ்வொருவரும்‌. பாருங்கள்‌ அதாவது அவர்கள்‌ அதைப்‌ போடுகிறார்கள்‌...அடுத்த நாள்‌ காலை அந்த—அந்த—அந்த—அந்த நிதிக்‌ குழுவின்‌ தலைவராக இருந்த ஒருவர்‌, அவர்‌ வந்து “சகோதரன்‌ பிரான்ஹாம்‌ நீங்கள்‌ இந்த காசோலைகளில்‌ கையொப்பமிட வேண்டும்‌” என்று கூறுவார்‌. மேலும்‌ஏன்‌, நான்‌ அவைகளில்‌ கையொப்பமிடுவேன்‌. அவர்‌ அவைகளை உள்ளே வைத்துக்‌ கொள்வார்‌. மேலும்‌ அதன்பின்னர்‌ அவர்கள்‌ அவை யாவற்றையும்‌ சரி பார்த்தனர்‌. அதில்‌ ஒரு சென்டு காசு கூட எனக்காக செலவிடப்படவேயில்லை. ஆனால்‌ நான்‌ அந்த காசோலையில்‌ கையொப்பமிட்டபோது அது என்னுடையதாக இருந்தது என்று அவர்கள்‌ கூறினர்‌. ஜனங்கள்‌ அதை எனக்குக்‌ கொடுக்கிறார்கள்‌. அதன்பின்னர்‌ நான்‌ அதை சபைக்குக்‌ கொடுக்கிறேன்‌. ஓ என்னே! 10முதலில்‌ நாம்‌ உண்மையாகவே மோசமாக உணர்ந்தேன்‌.அதன் பின்னர்‌ நான்‌ நம்புகிறேன்‌. வேதாகமத்தில்‌ தேவனுக்காக ஒரு ஆவிக்குரிய உத்தியோகத்தை கொண்டிருந்த ஒவ்வொரு மனிதனும்‌ மத்திய அரசாங்கங்களோடு தொடர்பு கொள்ளப்பட்டிருந்தான்‌ என்பதை நான்‌ கண்டறிகிறேன்‌. அதைத்‌ திரும்பவும்‌ சரிபார்த்து அதைக்‌ கண்டறியுங்கள்‌. அது உண்மை, மோசே, தானியேல்‌, யோவான்‌ ஸ்நானகன்‌, இயேசு கிறிஸ்து மரண தண்டனையின்‌ கீழ்‌ மத்திய அரசின்‌ கையால்‌ மரித்தார்‌. பேதுரு, யாக்கோபு, யோவான்‌ திவ்விய வாசகனாகிய யோவான்‌ எல்லோரும்‌ ஒவ்வொரு... எல்லோரும்‌ உபத்திரவத்தில்‌ பாடுபட்டனர்‌. ஏன்‌? அது சாத்தானின்‌ சிங்காசனமாயிருக்கிறது. உங்களுக்கு அது தெரியுமா? சாத்தான்‌ இயேசுவைக்‌ கொண்டு சென்று அவருக்கு எல்லா இராஜ்ஜியங்களையும்‌ உலகத்தையே ஒரு நொடியில்‌ காண்பித்தான்‌ என்பதை நீங்கள்‌ அறிவீர்களா? மேலும்‌ அவன்‌ “அவைகள்‌ என்னுடையவை நான்‌ விரும்புகிற எதை வேண்டுமானாலும்‌ அவர்களோடு செய்கிறேன்‌. புரிகிறதா? நீர்‌ என்னை விழுந்து பணிந்துகொண்டால்‌ நான்‌ அவைகளை உமக்குத்‌ தருவேன்‌” என்றான்‌. அப்படியானால்‌ அவர்கள்‌ யாரைச்‌ சேர்ந்தவர்கள்‌ என்பது உங்களுக்குப்‌ புரிகிறதா? நாம்‌ நமக்கு சொந்தமானதைக்‌ குறித்து நினைப்பதையே வெறுக்கிறோம்‌. ஆனால்‌ அதுவோ அவ்வாறுள்ளது. எனவே அவர்‌ கூறினார்‌. இயேசு “அப்பாலே போ. சாத்தானே” என்றார்‌. ஆயிர வருட அரசாட்சியில்‌ அவர்‌ அவைகளுக்கு சுதந்திரவாளியாவார்‌ என்பதை அவர்‌ அறிந்திருந்தார்‌. ஆயிரம்‌ வருடம்‌ அரசாட்சியில்‌ எப்பொழுது...எப்பொழுது. அவைகள்‌ அவருடையதாயிருக்கும்‌ என்பதை அவர்‌ அறிந்திருந்தார்‌. இந்த தேசங்கள்‌ தேவனால்‌ ஆளுகை செய்யப்பட்டிருந்ததானால்‌ நலமாயிருக்கும்‌. ஆனால்‌ ஒரு நேரம்‌ இருக்கும்‌. 11அவர்கள்‌ பெற்றுள்ள ஐக்கிய நாடுகள்‌ மற்றும்‌ தேசங்களின்‌ சங்கங்கள்‌ மற்றுமுள்ள ஒவ்வொன்றும்‌ சமாதானத்தைக்‌ கொண்டு வர முயற்சிக்கின்றன. ஆனால்‌ அதனுடைய உச்சியிலும்‌ மற்றும்‌ அரசியலிலும்‌ சாத்தான்‌ இருக்கும்‌ வரையில்‌ என்ன சம்பவிக்கப்போகிறது? அவர்கள்‌ நிச்சயமாக சண்டையிட்டுக்‌ கொள்வார்கள்‌. ஆனால்‌ எல்லா ஆயுதங்களும்‌ அடுக்கி வைக்கப்படும்‌ ஒரு நேரம்‌ உண்டாகும்‌. மணியோசை தொனிக்கும்‌. காலை நித்தியமாகவும்‌ பிரகாசமாகவும்‌ தெளிவாகவும்‌ விடியும்‌. நம்முடைய இராஜா அவருடைய சிங்காசனத்தை எடுத்துக்‌ கொள்வார்‌. ஓ! பாடுதல்‌ இருக்கும்‌ஆரவாரமிடுதல்‌ இருக்கும்‌. மேலும்‌ ஒரே கொடியும்‌, ஒரே ஜனங்களும்‌, ஒரே தேசமும்‌, ஒரே பாஷை பேசுதலும்‌ பரலோகத்தில்‌ இருக்கும்‌. ஆமென்‌அந்த நேரத்துக்காகவே நான்‌ ஏங்குகிறேன்‌. அந்த இலக்கை நோக்கியே நான்‌ தொடர்ந்து கொண்டு தேவனை நம்பிக்‌ கொண்டிருக்கிறேன்‌. என்றோ ஒரு நாள்‌ அது முடிவுறும்போது என்னால்‌ கூற முடியும்‌...“மேலே வா” என்று அவர்‌ என்னிடத்தில்‌ கூறுவதை என்னால்‌ கேட்க முடியும்‌. 12நான்‌ கர்த்தருடைய நாமத்தில்‌ இன்றிரவு இங்கே ஃபீனிக்ஸ்‌ இருக்கிறேன்.‌என்ன சம்பவித்துள்ளது என்பதை நான்‌ விளக்கிக்‌ கூற விரும்பமாட்டேன்‌-விரும்பமாட்டேன்‌. ஜனங்களாகிய உங்களில்‌ அநேகர்‌ அந்த ஒலி நாடாக்களைக்‌ கொண்டு செல்கிறீர்கள்‌. ஐயா, இது என்ன சமயம்‌? என்ற அந்த ஒன்றை நிச்சயமாக பெற்றுக்‌ கொள்ளுங்கள்‌. நான்‌ வீட்டை விட்டுப்‌ புறப்படும்‌ முன்னர்‌ அதை அளித்தாகும்‌. ஒரு தரிசனம்‌ என்னை இங்கு அனுப்பியது: அது என்னவென்று எனக்குத்‌ தெரியாததாய்‌உள்ளது...எனக்குத்‌ தெரியாது....நான்‌ ஒலிநாடாவை விற்கும்‌ ஒருவனல்ல. மேலும்‌ நான்‌ அந்தக்‌ காரியங்களை வலியுறுத்துகிறதில்லை. நாங்கள்‌ அவைகளைப்‌ பெற்றுக்கொள்கிறோம்‌. நாங்கள்‌ உலகம்‌ முழுவதிலும்‌ ஒரு ஒலிநாடா விநியோகத்தை வைத்துள்ளோம்‌. காடுகளுக்குள்ளும்‌ மற்றும்‌ எங்கும்‌அவர்கள்‌ காதுகளில்‌ ஒரு சிறிய பொருளை வைத்து அவர்கள்‌ கேட்கின்றனர்‌. மேலும்‌ அதை ஒலிநாடாவிலிருந்து ஒலிநாடாவில்‌ பதிவு செய்து மற்றும்‌ அங்கே நின்று மற்ற மொழியில்‌ அதை மொழிபெயர்கின்றனர்‌. அது உலகம்‌ முழுவதும்‌ செல்கிறது. 13மேலும்‌. ஆனால்‌ என்னிடம்‌ இருந்த ஒன்று. ஐயா, இது என்ன சமயம்‌? அல்லது ஐயா, இது தான்‌ அந்த சமயமா? என்பதே. சில... நான்‌...மூன்று வாரங்களுக்கு முன்பு சனிக்கிழமை இரவு சபையிலே அளித்தேன்‌. என்னுடைய வாழ்நாள்‌ முழுவதும்‌ தரிசனங்களைக்‌ கண்டப்‌ பிறகு என்னுடைய ஜீவியத்தில்‌ இதற்கு முன்பு இதைப்‌ போன்று எந்த ஒரு காரியத்திலும்‌ நான்‌ ஒருபோதும்‌ கண்டதில்லை. மேலும்‌ அது என்னவென்று எனக்குத்‌ தெரியவில்லை. நான்‌ இங்கே இருக்கிறேன்‌. ஆனால்‌ அவர்‌ என்னை இங்கே அனுப்பினார்‌. அது எதைப்‌ பொருட்படுத்துகிறது என்று எனக்குத்‌ தெரியவில்லை. நான்‌... நான்‌ இங்கே இருக்கிறேன்‌. நான்‌ நேர்மையாகவும்‌ மற்றும்‌ உத்தமமாகவும்‌ இருக்க வேண்டும். மேலும்‌ அதுவே நாம்‌ தேவனிடத்திலிருந்து எப்போதும்‌ எங்கிருந்தாலும்‌ எதையாவது பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி உத்தமமாய்‌ இருப்பதேயாகும்‌. காரணம்‌. மனிதர்‌ அறிந்து கொள்வார்கள்‌. தேவன்‌ அறிந்திருக்கிறார்‌. துவக்கத்தில்‌ நீங்கள்‌ இல்லை. நீங்கள்‌ இருக்கிறீர்களோ அல்லது இல்லையோ, மேலும்‌ அந்த மனிதர்‌ அறிந்து கொள்வார்கள்‌. ஏனென்றால்‌ ஒரு சமயம்‌ ஒரு மனிதன்‌ தீர்க்கதரிசனம்‌ உரைக்க முயற்சித்துக்‌ கொண்டிருந்தான்‌. மேலும்‌ தேவன்‌ கூறினார்‌...இல்லை. அந்த உண்மையான தீர்க்கதரிசி அவனிடத்தில்‌ கூறினான்‌. “நாம்‌ நினைவில்‌ கொள்வோமாக. நமக்கு முன்பாக தீர்க்கதரிசிகள்‌ இருந்து வந்துள்ளனர்‌. ஒரு தீர்க்கதரிசியினுடைய தீர்க்கதரிசனம்‌ நிறைவேறும்போது மாத்திரமே அவன்‌ அறிந்து கொள்ளப்படுகிறான்‌” என்றான்‌. எனவே நாம்‌ எந்த ஒரு காரியத்தை குறித்தாவது கூறுவதற்கு முன்பு தேவன்‌ அவ்வண்ணமாய்க்‌ கூறினார்‌ என்பதை நாம்‌ அறிந்திருக்கிறோம்‌ என்ற நிச்சயமுடையவர்களாக இருப்பது நமக்கு மேலானதாகும்‌. நேர்மையாயும்‌ உத்தமமாயும்‌ இருங்கள்‌. 14இப்பொழுது நாம்‌ நம்முடைய தலைகளை சற்று நேரம்‌ ஜெபத்திற்காக வணங்குவோமாக. இப்பொழுது அடுத்த சில நிமிடங்களுக்காக. நாம்‌ ஒவ்வொரு கவலைகளையும்‌ இப்பொழுது ஒருபுறம்‌ தள்ளி வைப்போமாக, நான்‌ எதிர்பார்கிறேன்‌...இன்றிரவு இங்குள்ள இந்த அருமையான சிறு கூட்ட ஜனங்களில்‌. என்றோ ஒரு நாளில்‌ இயேசுவானவர்‌ வந்து மண்ணிலிருந்து எழுப்பி. பெற்றுக்கொள்ளக்கூடிய அந்த இரத்தினங்கள்‌ இங்கே அமர்ந்துகொண்டிருக்கிறார்கள்‌ என்பதை நான்‌ அறிவேன்‌. அவர்கள்‌ அங்கே இருப்பார்களா அல்லது இல்லையா என்ற நிச்சயம்‌ கூட இல்லாத சிலர்‌ இங்கே இருக்கலாம்‌. உங்களுக்கு மற்ற காரியங்கள்‌ தேவைப்படலாம்‌, உங்களுடைய வாழ்க்கையில்‌ ஒரு தேவை இருக்குமானால்‌. நீங்கள்‌ உங்களுடைய கரத்தை உயர்த்துவதனால்‌ அது தேவனுக்கு தெரியப்படுத்தப்படட்டும்‌. தேவனே இப்பொழுது நான்‌ என்ன பொருட்படுத்துகிறேன்‌ என்பதை நீர்‌ அறிந்திருக்கிறீர்‌, என்னை ஆசீர்வதியும்‌. நான்‌—நான்‌ சுகவீனமாக இருக்கிறேன்‌. எனக்கு சுகமளித்தல்‌ தேவை. நான்‌— நான்‌ வழிதவறியிருக்கிறேன்‌. நான்‌ ஒரு ஐக்கியத்திற்கு திரும்பி வர வேண்டும்‌. நான்‌—நான்‌ திரும்பி வர வேண்டும்‌. நான்‌—நான்‌ தவறியுள்ளேன்‌. நான்‌ திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்‌. இன்றிரவு திரும்பி வருவதற்கு எனக்கு நீர்‌ உதவி செய்ய வேண்டும்‌ என்று நான்‌ விரும்புகிறேன்‌“ என்று கூறுங்கள்‌. தேவன்‌ உங்களை ஆசீர்வதிப்பாராக. 15பரலோகப்‌ பிதாவே நாங்கள்‌ இரத்தத்தின்‌ வழியின்‌ மூலமாக இப்பொழுது சிங்காசனத்தை அணுகிக்கொண்டிருக்கிறோம்‌. ஏனென்றால்‌...ஆரோன்‌ அந்த—அந்த கிருபாசனத்திற்கு முன்பாக உள்ளே சென்றபோது, அவன்‌ தன்னுடையை கரத்தில்‌ முதலில்‌ இரத்தத்தை எடுத்துக்கொண்டு முன்னோக்கி சென்றான்‌. நாங்கள்‌ இன்றிரவு விசுவாசத்தினாலே கர்த்தராகிய இயேசுவின்‌ இரத்தத்தை ஏற்றுக்‌ கொண்டு தேவனுடைய சிங்காசனத்தை நோக்கி தைரியமாக நடந்து செல்கிறோம்‌. எங்களுடைய சொந்த நீதியில்‌ அல்ல, ஆனால்‌ அவருடைய நீதியில்‌ வருவதற்கு எங்களுக்கு ஒரு உரிமை உண்டு என்பதை அறிந்திருக்கிறோம்‌. இரத்தம்‌ எங்களுடைய சுத்திகரிப்பைக்‌ குறிக்கிறது. பரலோகப்‌ பிதாவே நீர்‌ எங்களுடைய விண்ணப்பத்திற்கு பதிலளிக்க வேண்டுமென்று நான்‌ ஜெபிக்கிறேன்‌. முதலாவது நாங்கள்‌ எங்களுடைய தவறுகளையும்‌ எங்களுடைய சிறிய பிழைகளையும்‌. எங்களுடைய இரகசிய பாவங்களையும்‌எங்களுடைய அறியப்படாத பாவங்களையும்‌ அறிக்கை செய்கையில்‌ நீர்‌ எங்களுடைய எல்லா மீறுதல்களையும்‌ எங்களுக்கு மன்னித்து எங்களிடத்தில்‌ இரக்கமாயிருக்க வேண்டும்‌ என்று நாங்கள்‌ வேண்டிக்‌ கொள்கிறோம்‌. மேலும்‌ நாங்களும்‌ கூட ஊழியர்கள்‌ என்ற முறையில்‌ ஆசாரியர்களாக இருந்து ஜனங்களுடைய பாவங்களை அறிக்கை செய்கிறோம்‌. கர்த்தாவே நாங்கள்‌ ஒன்றுசேர்ந்து நிற்கிறோம்‌. நாங்கள்‌ ஜனங்களை நேசிக்கிறோம்‌. தேவனுடைய கோபாக்கினையை ஜனங்களுக்கு தடுக்க மோசே தன்னையே திறப்பின்‌ வாயிலில்‌ கிடத்தினதுபோல நாங்கள்‌ உணருகிறோம்‌. ஜனங்களை இரட்சிக்க கிறிஸ்துதாமே திறப்பின்‌ வாயிலே தன்னைக்‌ கிடத்தினபோது, அது கிறிஸ்துவின்‌ நீதியை குறித்த என்ன ஒரு வெளிப்பாடாக இருந்தது. 16மேலும்‌ பிதாவே எங்களுக்குள்ளாக இருக்கிற அவருடைய ஆவியோடு நாங்கள்‌ அவருடைய ஊழியக்காரராக இருக்கிறபடியால்,‌இன்றிரவு இங்குள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும்‌ பாவிக்கு முன்பாக தன்னை நிறுத்தி “தேவனே அவர்களிடத்தில்‌ இரக்கமாயிரும்‌” என்பானாக. சுகவீனமும்‌ தேவையுமுள்ளவர்களுக்காக நாங்கள்‌ கதறுகிறோம்‌. ஏனென்றால்‌ அந்த விலையேறப்பெற்ற கரங்களை அவர்களில்‌ சிலர்‌ முதியோராய்‌, சிலர்‌ வாலிபராய்‌, சிலர்‌ நடுத்தர வயதுள்ளவர்களாய்‌ தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள்‌. கர்த்தாவே அதை குறித்த எல்லாவற்றையும்‌ நீர்‌ அறிந்திருக்கிறீர்‌. மகிமையில்‌ உள்ள உம்முடைய ஐசுவரியத்தின்படியே நீர்‌ பதிலளிக்க வேண்டும்‌ என்று நாங்கள்‌ ஜெபிக்கிறோம்‌. கர்த்தாவே இன்றிரவு சுகவீனமாய்‌ உள்ள வந்த அநேகர்‌ இங்கிருந்து வெளியே செல்லும்‌ போது அவர்கள்‌ நலமுடனும்‌ சுகத்துடனும்‌ வெளியே செல்வார்களாக. ஏதோ‌ காரியம்‌ சம்பவிக்கிறதை அவர்களால்‌ அதை விளக்கிக்‌ கூறக்‌ கூட முடியாது. ஆனால்‌ அவர்கள்‌ சுகமாயிருக்கிறார்கள்‌ என்பதை அவர்கள்‌ அறிவார்கள்‌. கர்த்தாவே வழி தப்பிப்‌ போயிருக்கிறவர்கள்‌ நீதிமான்களாக்கப்பட்டு செல்வார்களாக. அவர்கள்‌ கிறிஸ்துவை எங்கே விட்டார்களோ. அங்கேயே திரும்பி வந்து அவரைத்‌ தெரிந்து கொண்டார்கள்‌ என்பதை அறிந்துகொள்வார்களாக. அவர்கள்‌ திரும்பளித்தல்களை செலுத்தும்படி. செல்வார்களாக. கர்த்தாவே. ஒருபோதும்‌ வராதிருக்கிறவர்கள்‌ கூண்டில்‌ இருந்து வெளியேற்றப்பட்டு. சுதந்திரமாயிருப்பதற்கான விலையேறப்பற்ற சுதந்திரத்தையும்‌. உலகத்தின்‌ காரியங்களினாலும்‌. இந்த உலகத்தின்‌ கவலைகளினாலும்‌ ஒருபோதும்‌ கட்டப்படாமல்‌. கிறிஸ்துவுக்குள்‌ விடுதலையாக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து கொள்ள அருள்புரியும்‌. பிதாவே. இதை அருளும்‌. இப்போது எங்களுக்கு தேவையான அனைத்தையும்‌ ஆசீர்வதித்து உம்முடைய வார்த்தையையும்‌. உம்முடையஊழியக்காரனையும்‌ ஆசீர்வதியும்‌. மேலும்‌ நாங்கள்‌ உமக்கு துதி செலுத்துவோம்‌. நாங்கள்‌ இதை இயேசுவின்‌ நாமத்தில்‌ வேண்டிக்‌ கொள்கிறோம்‌. ஆமென்‌. 17இப்பொழுது. நாம்‌ ஒரு பாடப்‌ பகுதிக்கான வேத வாக்கியத்தை. இல்லை. சரியாகக்‌ கூறினால்‌. ஒரு பாடத்திற்கான ஒரு வேத வாக்கியத்தை நாம்‌ வாசிக்க வேண்டுமென்றால்‌. முதலாம்‌ கொரிந்தியர்‌ 14-ம்‌ அதிகாரம்‌. 8-ம்‌ வசனத்தை. முதலாம்‌ கொரிந்தியர்‌ 14:8. இந்தவிதமாக வாசிக்கிறோம்‌. அந்தப்படி எக்காளமும்‌ விளங்காத சத்தமிட்டால்‌ எவன்‌ யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்‌? நாம்‌ இதன்‌ பேரில்‌ இப்பொழுதிலிருந்து இன்னும்‌ இரண்டு வாரங்களுக்கு பிரசங்கிக்கூடிய போதுமான பாடப்பகுதியாய்‌ இது இருக்கும்‌. மேலும்‌ அதே சமயத்தில்‌ அதனுடைய விளிம்புகளைக்‌ கூட ஒருபோதும்‌ தொட முடியாது. ஆவியினால்‌ ஏவப்பட்டுள்ள வார்த்தையைக்‌ குறித்த ஏதோ ஒரு காரியம்‌ உண்டு. நீங்கள்‌ அந்த ஒரு பாடப்‌ பகுதியின்‌ பெயரிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும்‌. நீங்கள்‌ அதனோடு முழு வேதாகமத்தையும்‌ இணைக்க முடியும்‌. அது சரியாயுள்ளது. 18ஒரு நாள்‌ ஒரு நபர்‌ என்னிடத்தில்‌ கேட்டார்‌. “நீ எப்படி அதே பாடப்பகுதியை எடுக்க முடியும்‌?” என்று கேட்டார்‌. அப்பொழுது நான்‌. “ஓ. என்னே! நீங்கள்‌ அதிலிருந்து எந்த ஒரு சூழலையும்‌ எடுக்க முடியும்‌” என்றேன்‌. நான்‌ தரையில்‌ கிடந்த ஒரு சிறிய மூன்று இலைகள்‌ உள்ள மணல்‌ புல்லை எடுத்து. அதை உயர்த்திப்‌ பிடித்தேன்‌. அந்த மனிதன்‌ டூசானிலிருந்து வந்து. இன்றிரவு இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார்‌. நாங்கள்‌ கலிபோர்னியாவில்‌ உள்ள. பசடேனோவில்‌ இருந்தோம்‌. மேலும்‌ நான்‌. “இந்த மூன்று இலைகளைக்‌ கொண்ட மணல்‌ புல்லை நான்‌ எடுத்து. அதன்‌ பேரில்‌ இருபத்தைந்து வருடங்கள்‌ பிரங்கிக்க முடியும்‌: அதில்‌ எப்படி ஒரு ஜீவன்‌ உள்ளது என்றும்‌. அது அதனுள்‌ உள்ளது என்றும்‌: எப்படி. மூன்று இதழ்களும்‌. ஒன்றில்‌ திரித்துவமாய்‌இருக்கின்றன. மேலும்‌. ஓ. ஓ. நாம்‌ அதைக்‌ குறித்து இன்னும்‌ பல காரியங்களைக்‌ கூற முடியும்‌” என்றேன்‌. 19அப்படியானால்‌ ஒரு வேத வாக்கியத்தைக்‌ குறித்து என்ன? அது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. அது நித்தியமானது. அதற்கு—அதற்கு...அதற்கு முடிவே இல்லை. அது தொடர்ந்து போய்க்கொண்டே. போய்க்கொண்டே. போய்க்கொண்டேயிருக்கிறது. அது நமக்கு ஒரு அடைக்கலமாக இருக்கிறது. இப்பொழுது இதன்‌ பேரில்‌ நான்‌ இன்றிரவு பேச விரும்புகிறேன்‌: ஒரு எக்காளம்‌ விளங்காத சத்தமிடுகிறது. நான்‌ அந்த வருமான வரி விவகாரத்தின்‌ பேரில்‌...சிந்தித்துக்‌ கொண்டிருந்தபோது. ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக. அதைக்‌ குறித்து சிந்தித்துக்‌ கொண்டிருக்கையில்‌. அப்பொழுது நான்‌. “இன்றைக்கு நிச்சயமாய்‌ இருக்கிற எந்த ஒரு காரியமும்‌ இல்லை. ஒவ்வொரு காரியமும்‌ அதற்கு நிச்சயமில்லாத அத்தகைய தன்மையையே பெற்றுள்ளது” என்று எண்ணினேன்‌. மேலும்‌ நிச்சயமற்றதாய்‌ இருக்கிற எந்தக்‌ காரியமும்‌ நம்பப்பட முடியாது. நிச்சயமற்றதாய்‌ இருக்கிற எந்த காரியமும்‌ நம்பப்பட முடியாது. அது நிச்சயமாயில்லையென்றால்‌ அதிலிருந்து நீங்கள்‌ விலகியிருங்கள்‌. நீங்கள்‌ ஒரு வியாபாரத்தை உடையவராயிருந்தால்‌. மேலும்‌. அது. நாம்‌ தற்பொழுது வர்த்தக புருஷர்களை உடையவர்களாயிருக்கிறோம்‌ அவர்களில்‌ பலர்‌ அவ்வாறிருக்கலாம்‌. நீங்கள்‌ நிச்சயமில்லாத ஒரு வியாபாரத்தை செய்து கொண்டிருந்தால்‌. நீங்கள்‌ அதில்‌ மிக அதிகமான முதலீட்டை செலுத்த போகிறதில்லை. ஏனென்றால்‌ அந்த—அந்த பங்காதாயம்‌ நிச்சயமற்றது. மேலும்‌ நீங்கள்‌ அதில்‌ மிக அதிகமான முதலீடு செய்ய மாட்டீர்கள்‌. அல்லது. நீங்கள்‌ ஒரு நல்ல. புத்திசாலித்தனமான வர்த்தக புருஷனாயிருந்தால்‌. நீங்கள்‌ முதலீடு செய்ய கொஞ்சம்‌ பணத்தை வைத்திருந்தால்‌. நிச்சயமாய்‌ இருக்கிற ஒரு காரியத்தை நம்பகமான ஒரு காரியத்தை. நீங்கள்‌ சார்ந்து இருக்கக்கூடிய ஒரு காரியத்தை. நீங்கள்‌ கண்டறியும்‌ வரை காத்திருந்து ஆராய்ந்துப்‌ பார்ப்பீர்கள்‌. ஏனென்றால்‌. நீங்கள்‌ சேமித்து வைத்துள்ள கொஞ்சம்‌ பணத்தையும்‌ நீங்கள்‌ இழக்க விரும்புகிறதில்லை. ஏனென்றால்‌ அதனைக்‌ கொண்டே நீங்கள்‌ உங்களுடைய ஜீவியத்தை நடத்த வேண்டும்‌. இந்த முதலீட்டின்‌ பேரில்‌ பெற்றுக்கொள்ளக்‌ கூடிய ஊதிய தொகையிலிருந்து பங்காதாயங்களிலிருந்து. ஏன்‌. நீங்கள்‌ வாழ்வதற்கு ஏதாவது அதன்‌ மூலம்‌—பெற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. 20மேலும்‌ நீங்கள்‌ சேமித்து வைத்துள்ள இந்த சிறிய பணம்‌. அதை உங்களுடைய சட்டைப்பையில்‌ வைத்துவிட்டு. அங்கேயே விட்டு விடாதீர்கள்‌. ஏனென்றால்‌ திருடர்கள்‌ திருடிவிடுவார்கள்‌. புரிகிறதா? வேண்டாம்‌. அதை செய்யாதீர்கள்‌. நீங்கள்‌ அதை வைத்திருந்தால்‌. அதை ஏதாவது ஒன்றில்‌ முதலீடு செய்யுங்கள்‌. மேலும்‌ அதன்‌ பின்னர்‌ நீங்கள்‌ உங்களுடைய முதலீட்டின்‌ உறுதியைக்‌ குறித்த நிச்சயத்தை செய்ய வேண்டும்‌. நீங்கள்‌ அதை செய்யாவிடில்‌. ஏன்‌. அதை ஒருபோதும்‌. முதலீடே செய்ய வேண்டாம்‌. எனவே. இன்றிரவு வியாபாரமானது ஒரு நடுங்கும்‌ நிலையில்‌ உள்ளது. நடைமுறையில்‌ உள்ள. எந்த வியாபாரமும்‌. ஒரு நடுங்கும்‌ நிலையிலேயே உள்ளது. ஏனெனில்‌ உலகம்‌ ஒரு நடுங்கும்‌ நிலையில்‌ உள்ளது. நீங்கள்‌ உங்களை அனுமதிக்க முடியாது. “இப்பொழுது, நான்‌ எங்காவது ஒரு அருமையான, சிறிய வீட்டை எனக்கு கட்ட, இவ்வளவு பணத்தைச்‌ சேமிக்கப்‌ போகிறேன்‌.” அது. அது மிகவும்‌ நடுக்கமானது. நான்‌ அதை உங்களுக்கு சொல்லுவேன்‌. ஏனெனில்‌ அரசாங்கமானது . அதை. ஒரே இரவில்‌ எடுத்துக்‌ கொள்ளக்‌ கூடும்‌. 21ஓ! நம்முடைய ஜனநாயகம்‌ கொண்டுள்ள காரியங்கள்‌ உண்மையாகவே நடுங்குமளவிற்கு அவ்வளவாய்‌ சீர்கெட்டுப்‌ போயுள்ளதே! நம்முடைய ஜனநாயகத்தில்‌ அதிகமான நம்பிக்கையை நாம்‌ வழக்கமாக வைக்க முடியும்‌. மேலும்‌. இது இது அரசாங்கத்தின்‌ சிறந்த முறைமை என்று நான்‌ நினைக்கிறேன்‌. ஆனால்‌ இன்னமும்‌ நம்முடைய ஜனநாயகம்‌ நிலைகுலைந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால்‌. நாம்‌. இந்த தேசத்தில்‌. நம்முடைய ஜனங்கள்‌. நமக்கு ஒரு அரசியல்‌ அமைப்பு உள்ளது. இந்த அரசியலமைப்பே— நம்முடைய கடைமுடிவானதாயுள்ளது. ஆனால்‌. அதே சமயத்தில்‌. அதில்‌. நம்முடைய அரசியலமைப்பு நிலை குலைந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால்‌ அது ஏற்கனவே பல சமயங்களில்‌ சீர்குலைந்து காணப்படுகிறது. மறைந்த திரு. ரூஸ்வெல்ட்‌ அதை நாசம்‌ செய்தார்‌. எனவே. பாருங்கள்‌. அது தகர்வுறக்‌ கூடியதை நீங்கள்‌ காண்கிறீர்கள்‌. நீங்கள்‌ அதற்குள்‌ அதிக நம்பிக்கையை வைக்கக்‌ கூடியதாக இல்லை. அரசியல்‌. ஓ. என்னே. எப்படி நிலைகுலைந்து உள்ளதே! ஜனங்கள்‌ அரசியலைக்‌ குறித்து, வாதிடுகிறார்கள்‌. மேலும்‌ வாதிடுகிறார்கள்‌. மேலும்‌ வாதிடுகிறார்கள்‌. மேலும்‌ அண்டை வீட்டாரும்‌ மற்றும்‌ ஒரு காலத்தில்‌ நல்ல நண்பர்களாய்‌ இருந்தவர்களும்‌. அதைக்‌ குறித்து. வம்பிட்டுப்‌ பிரிவார்கள்‌. சில ஜனாதிபதிகள்‌ எழும்புவர்‌. அல்லது வேறு யாராவது மாவட்ட உயர்‌ அதிகாரி பதவிக்காக அல்லது வேறு எதற்காவது மற்றும்‌ மற்ற நபர்‌ அரசியல்‌ பாதுகாப்பின்‌ மற்றொரு பக்கத்தின்‌ பேரில்‌ போட்டியிடுவார். மேலும்‌ அரசியல்‌. அவர்கள்‌ அதைக்‌ குறித்து வாதிடுமளவிற்கு ஒருவரோடு ஒருவர்‌ அவர்கள்‌ சண்டையிடுவார்கள்‌. மேலும்‌ நான்‌ அல்ல...நான்‌ எவருடைய உணர்வுகளையும்‌ புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன்‌. ஆனால்‌ முழு காரியமும்‌ அழுகிப்போய்விட்டது என்றே நான்‌ கருதுகிறேன்‌. புரிகிறதா? ஆம்‌. ஐயா. அப்படியென்றால்‌ எப்படியும்‌ நல்லதல்லாத ஒன்றைப்‌ பற்றி நீங்கள்‌ ஏன்‌ வம்பிட்டு வாதிடுகிறீர்கள்‌? அது சரி. அது மிகவும்‌ மோசமானது. 22யாரோ ஒருவர்‌ ஒரு நாள்‌ என்னிடம்‌ கூறினார்‌. அவர்‌. நீங்கள்‌.“இந்த தேர்தலில்‌ வாக்களிக்கப்‌ போகிறீர்களா?” என்று கேட்டார்‌. அதற்கு நான்‌. “நான்‌ வாக்களித்து விட்டேன்‌” என்றேன்‌. அதற்கு, “ஓ. இந்தத்‌ தேர்தலிலா?” என்றார்‌. அப்பொழுது நான்‌. “நான்‌ இயேசுவுக்காக வாக்களித்தேன்‌” என்றேன்‌. நான்‌. “நான்‌ உங்களுக்கு சொல்லுவேன்‌. இரண்டு பேர்‌ எனக்காக வாக்களித்தனர்‌” என்றேன்‌. நான்‌. “தேவன்‌ எனக்காக வாக்களித்தார்‌. பிசாசு எனக்கு எதிராக வாக்களித்தான்‌. நான்‌ தேவனுக்காக வாக்களித்தேன்‌. எனவே நான்‌ என்னுடைய வாக்கை சரியாகப்‌ பெற்றுக்கொள்கிறேன்‌” என்றேன்‌. நீங்கள்‌ உங்களுடைய வாக்கை எங்கே அளிக்கிறீர்கள்‌. எப்படி வெளியே வரப்‌ போகிறீர்கள்‌ என்பதைப்‌ பொறுத்தது. ஆகையால்‌. அண்மையில்‌. உங்களுக்கு ஒரு சிறு இடத்தை காட்டுவதைக்‌ கவனியுங்கள்‌. அதன்‌ பின்னர்‌ நாம்‌ அதை விட்டுவிடுவோம்‌. இந்த கடந்த ஜனாதிபதித்‌ தேர்தலில்‌. அது முற்றிலுமாக சிக்காக்கோ மற்றும்‌ பல இடங்களில்‌ நிரூபிக்கப்பட்டபோது அவர்கள்‌ வாக்களிக்க கிடைத்த இயந்திரங்கள். அவை ஜனநாயக கட்சியால்‌ அமைக்கப்பட்டவை அதாவது ஒவ்வொரு முறையும்‌ நீங்கள்‌ திரு.நிக்சனுக்காக வாக்களித்தபோது. அதே சமயத்தில்‌ நீங்கள்‌ கென்னடிக்காகவும்‌ வாக்களித்ததாயிருந்தது. எனவே உங்களுக்கு ஒரு வாய்ப்பு இல்லை. மேலும்‌ அது நிரூபிக்கப்பட்டுவிட்டதே! 23நீங்கள்‌ மற்றொரு இரவு மானிட்டர்‌ செய்தியில்‌ கூறியதைக்‌ கேட்டீர்கள்‌. மேலும்‌ அவர்கள்‌ கிழக்கு. மிசிசிப்பியிலிருந்து தேசம்‌ முழுவதும்‌ ஒரு—ஒரு கணக்கெடுப்பு நடத்தியபோது திரு. நிக்சன்‌ நான்கிற்கு ஒன்று என்றே. இந்த வாக்கெடுப்பைப்‌ பெற்றிருந்தார்‌. ஒரு மனிதன்‌ எப்படி வெற்றி பெற முடியும்‌? அது திரு. கென்னடிக்கானதாய்‌ இருந்திருந்தால்‌. அது அந்த விதமாகவே இருந்திருக்கும்‌. நான்‌ எந்தக்‌ கட்சியும்‌ இல்லை. என்னுடைய கட்சி பரலோகத்தில்‌ இருக்கிறது. இன்றிரவு நான்‌ அவர்களோடு இங்கே இருக்கிறேன்‌. நாம்‌ உன்னதங்களிலே உட்கார்ந்து கொண்டு நம்முடைய இராஜாவைக்‌ குறித்துப்‌ பேசிக்‌ கொண்டிருக்கிறோம்‌. ஆனால்‌ நீங்கள்‌ பாருங்கள்‌. பூமிக்குரிய இந்த காரியங்கள்‌ நடுங்கிக்கொண்டிருக்கின்றன என்று. நான்‌ உங்களுக்கு கூற முயற்சித்துக்‌ கொண்டிருக்கிறேன்‌. அங்கு இல்லை...அவைகளில்‌ எந்த நம்பிக்கையும்‌ வைக்க முடியாது. அவை நிச்சயமற்றவை. மேலும்‌ நிச்சயமற்ற எந்தக்‌ காரியத்திலிருந்தும்‌. நான்‌ அதிலிருந்து விலகி விடுவேன்‌. அந்த எதிர்மறையான காரியத்தை நான்‌ விரும்புகிறதில்லை. எதிர்மறையான பக்கத்தில்‌ நான்‌ கலந்து கொள்ள விரும்புகிறதில்லை. நான்‌ நேர்மறையான, நேர்மறையான பக்கத்தில்‌ இருக்கவே விரும்புகிறேன்‌. 24இப்பொழுது. இல்லற வாழ்க்கை நிச்சயமற்றதாகியுள்ளது. உங்களுக்குத்‌ தெரியும்‌. நான்‌ அன்றொரு நாள்‌ எங்கோ பத்திரிக்கைகளில்‌ ஒன்றில்‌. அமெரிக்க விவாகரத்து விகிதம்‌ உலகத்தில்‌ உள்ள வேறெந்த நாட்டைக்‌ காட்டிலும்‌ அதிகமாக உள்ளது என்ற ஒரு பகுதியைக்‌ கண்டேன்‌. மேலும்‌ நாம்‌ ஒரு மத சம்பந்தமான தேசமாக இருக்க வேண்டும்‌. ஆம்‌. அது மதம்‌சார்ந்ததாக இருக்கலாம்‌. சரி. ஆனால்‌ சரியான விதத்தில்‌ இல்லை. புரிகிறதா? மதம்‌ ஒரு போர்வையாக இருக்கிறது. நாம்‌ எதிலிருந்து நம்முடைய போர்வையை உருவாக்குகிறோம்‌ என்று கூறுவது கடினமாக உள்ளது. ஆதாம்‌ அத்தி இலைகளிலிருந்து சிலவற்றை செய்ய முயன்றான்‌. அது கிரியை செய்யவில்லை. அவன்‌ தேவனை சந்திக்க வெளியே வந்தபோது அது மிகவும்‌ நடுக்கம்‌ கொண்டது. எனவே மதம்‌ அதை சந்திப்பதில்லை. ஆனால்‌ நம்முடைய விவாகரத்து விகிதம்‌. நம்முடைய விவாகரத்து விகிதம்‌ மற்ற எல்லா நாடுகளைக்‌ காட்டிலும்‌—காட்டிலும்‌ அதிகமாயுள்ளது என்பதை உங்களால்‌ நினைத்துப்‌ பார்க்க முடிகிறதா? நம்முடைய வீடுகளில்‌ ஒழுக்கக்கேடு நடமாடுவதை நாம்‌ கண்டறிகிறோம்‌. 25அது தேசத்தின்‌ கணக்கெடுப்பில்‌ ஒரு பெரும்‌ சதவிகிதம்‌ என்று. கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியூட்டுதலாய்‌ இருந்தது மற்றும்‌...ஏஹையோவில்‌ தான்‌. கிறிஸ்தவம்‌ பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்று நான்‌ நினைக்கிறேன்‌. மேலும்‌ ஒரு சதவிகிதம்கூட சபைக்கு செல்லவில்லை என்பது கவலைக்கிடமானதாய்‌ இருந்தது. மேலும்‌ அதன்பின்னர்‌ சபைக்கு சென்ற சுமார்‌ எண்பது சதவிகிதத்தினர்‌. அவர்கள்‌ ஏன்‌ சென்றார்கள்‌ என்றே தெரியவில்லை. அவர்கள்‌ ஏன்‌ செல்கிறார்கள்‌ என்று அவர்களுக்குத்‌ தெரியவில்லை. அவர்கள்‌ வெறுமனே சபைக்கு செல்கிறார்கள்‌. “நீங்கள்‌ ஏன்‌ செல்கிறீர்கள்‌?” “பாருங்கள்‌. நாங்கள்‌ ஒரு குழந்தையாய்‌ இருந்த போது தாயார்‌ எங்களை அழைத்துச்‌ சென்றார்‌. எனவே நாங்கள்‌ தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறோம்‌.” மேலும்‌—மேலும்‌ அதன் பின்னர்‌. இப்பொழுது. அதைக்‌ குறித்த மற்றொரு சதவீதத்தினர்‌, அவர்கள்‌ சென்றதோ. ஓ அவர்களுடைய அண்டை வீட்டாரை சந்தித்து சிறிது நேரம்‌ பேசவே என்றனர்‌. பார்த்தீர்களா? ஏன்‌. அது ஆபத்தானதாயுள்ளதே! இல்லற வாழ்க்கை போய்விட்டதில்‌ வியப்பொன்றுமில்லையே. பாருங்கள்‌. எந்த இல்லற வாழ்க்கையும்‌ நிலையானதாக இல்லை. ஒரு மனிதனை மணக்கப்போகிற எந்தப்‌ பெண்ணும்‌. அவள்‌ அந்த மனிதனைக்‌ குறித்து நிச்சயமுடையவளாயில்லையென்றால்‌. அவள்‌ அவனை அப்படியே விட்டுவிடுவது நல்லது. மேலும்‌ ஒரு ஸ்திரீயை மணக்கப் போகிற எந்த மனிதனும்‌. நிச்சயமற்றவனாயிருந்தால்‌. நீங்கள்‌“ அவளை அப்படியே விட்டுவிடுவது நல்லது. தேவன்‌ உங்களுக்கு பதிலளிக்கும்‌ வரையில்‌. அதன்‌ பேரில்‌. நீங்கள்‌ ஜெபிப்பது நல்லது. அதன்பின்னர்‌ தேவன்‌ இணைத்ததை மனிதன்‌ பிரிக்காதிருக்கடவன்‌, ஆனால்‌ நாம்‌—நாம்‌ முதலில்‌. அதன்‌ பேரில்‌. நாம்‌ ஜெபிக்கவேண்டும்‌. ஆம்‌. 26இப்பொழுது. ஒரு கல்வித்‌ திட்டத்தின்‌ மூலம்‌ நாம்‌ உலகை மாற்ற முயற்சித்து்ள்ளோம்‌ என்பதை நாம்‌ கண்டறிகிறோம்‌. மேலும்‌ நாம்‌ உண்மையாகவே அதிலிருந்து. நிச்சயமாகவே போதுமான ஒரு குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறோம்‌. கல்வியின்‌ மூலமாக நீங்கள்‌ உலகத்தை கிறிஸ்துவுக்கு மாற்ற முடியாது. கல்வி தேவனிடத்திலிருந்து அவனை விலக்குகிறது. அது அவனை தேவனிடத்தில்‌ சேர்ப்பதைக்‌ காட்டிலும்‌ அதிகமாக விலக்குகிறது ஏனென்றால்‌ அவன்‌ புத்திசாலி என்றும்‌ மற்றும்‌ மற்றவர்களைவிட அதிகம்‌ அறிந்தவன்‌ என்றும்‌ அவன்‌ நினைக்க முயற்சிக்கிறான்‌. கல்வி எவ்வளவு நல்லதாக இருந்தாலும்‌. கிறிஸ்து தனது சபையை உலகிற்கு கல்வி கற்க ஒருபோதும்‌ கட்டளையிடவில்லை. கருத்தரங்குகளை உருவாக்க. அவர்களுக்கு அவர்‌ ஒருபோதும்‌ கல்வி கற்பிக்கவில்லை. அவர்‌ ஒருபோதும்‌ கல்‌-.... அவை நல்லவை. அவர்கள்‌ போய்‌ மருத்துவமனைகளைக்‌ கட்டும்படி அவர்‌ ஒருபோதும்‌ சொல்லவில்லை. ஆனால்‌ அது பரவாயில்லை. 27ஆனால்‌ சபையினுடைய வேலை சுவிசேஷத்தைப்‌ பிரசங்கிப்பதாகும்‌. “நீங்கள்‌ உலகமெங்கும்‌ போய்‌. சர்வ சிருஷ்டிக்கும்‌ சுவிசேஷத்தைப்‌ பிரசங்கியுங்கள்‌.” புரிகிறதா? ஆனால்‌ அதிலிருந்து வேறுபட்ட எந்த காரியமும்‌. நடுங்குகிறது. ஏனென்றால்‌ அது தேவனுடைய திட்டத்திற்கு புறம்பேயுள்ளது. தேசிய வாழ்க்கை நிச்சயமற்றதாயிருக்கிறது. பாருங்கள்‌. உலகம்‌ நிச்சயமற்றதாயிருக்கிறது. முழு உலகமே ஒரு பதட்டமாகப்‌ பணிந்து எல்லாவற்றையுமே உலுக்கிப்‌ பார்ப்பது போன்று காணப்படுகிற. ஒரு இடத்தில்‌ தான்‌ நாம்‌ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்‌. ஒவ்வொரு தேசமும்‌. ஒவ்வொருவரும்‌. ஒருவர்‌ மற்றவரைக்‌ குறித்து பயப்படுகின்றனர்‌. ஆனால்‌ அவர்கள்‌ சமாதானத்தை பேசுகின்றனர்‌. அவர்கள்‌. ஒரு முறை. அவர்கள்‌. “ஓ. நாம்‌ முதலாம்‌ உலகப்போரில்‌ போரிடும்போது, நம்முடைய பையன்கள்‌ யாவரும்‌ அங்கே போக வேண்டும்‌. மேலும்‌ அது யுத்தங்களை தீர்த்துவைக்கும்‌” என்று கூறினர்‌. ஏன்‌. அவர்கள்‌ பீரங்கிப்‌ புகையைக்‌ கூட காற்றிலிருந்து வெளியேற்றவில்லை. அதற்குள்‌ அவர்கள்‌ மற்றொன்றில்‌ இருந்தனர்‌. 28அதன் பின்னர்‌ அவர்கள்‌ உலக நாடுகளின்‌ சங்கத்தை உடையவர்களாய்‌ இருந்தனர்‌. மேலும்‌ அது உலகத்தை கட்டுப்படுத்தபோவதாக இருந்தது. அது விழுந்துபோனது. இப்பொழுது அவர்களுக்கு ஐ.நா... கிடைத்துள்ளது. அதுவும்‌ அதே காரியமாகத்தான்‌ உள்ளது. அதுவும்‌ முடிந்துவிட்டது. அதில்‌ஒன்றுமே இல்லை. ஒவ்வொரு காரியமும்‌ நடுங்குகிறது: தேசிய வாழ்க்கை அரசியல்‌ வாழ்க்கை. வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌. ஓ. என்னே! அவைகள்‌ அப்படியே...ஒவ்வொரு காரியமும்‌. முழு காரியமும்‌ ஆட்டங்கண்டுள்ளது. இப்பொழுது நான்‌ அதை சற்று உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்‌. புரிகிறதா? சபை வாழ்க்கை ஆட்டங்கண்டு நிச்சயமற்றதாயுள்ளது. இப்பொழுது. அதைக்குறித்து தான்‌ பவுல்‌ பேசிக்கொண்டிருந்தான்‌. புரிகிறதா? அவன்‌.“ஒரு எக்காளம்‌ விளங்காத சத்தமிட்டால்‌” என்று அதைத்தான்‌ பொருட்படுத்தினான்‌. சபை வாழ்க்கை ஆட்டம்‌ கண்டுள்ளது. ஜனங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்ககள்‌ போய்‌. சரியான காரியத்தைக்‌ கண்டறிய முயற்சித்து. ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு அலைந்து திரிகிறார்கள்‌: எது சரி என்றும்‌. எங்கே சரியான உபதேசம்‌ உள்ளது என்றும்‌ கண்டறிய முயற்சித்து இங்குமங்கும்‌ அலைந்து திரிகிறார்கள்‌. மேலும்‌ யாரோ ஒருவர்‌ வருவார்‌. அவர்கள்‌ தங்களுடைய கோட்பாட்டின்‌ ஒவ்வொரு முக்கிய அம்சமும்‌ கிட்டத்தட்ட சரியாக இருக்கிறது. என்றே. அதை விளக்கிக்‌ கூற முடியும்‌. அதன் பின்னர்‌. நீங்கள்‌ அறிந்துகொள்ளுகிற முதல்‌ காரியம்‌. அவர்கள்‌ அதில்‌ அதிகமான சீர்கேட்டை கண்டறிகிறார்கள்‌. அவர்கள்‌ மற்றொரு சபைக்கு சென்று. அவர்களுடைய கோட்பாடு. உபதேசம்‌ என்னவென்பதைக்‌ கண்டறிய முயற்சிக்கிறார்கள்‌. ஓ. இவை யாவற்றிலும்‌. இந்தக்‌ காரியங்களினால்‌. சபையின்‌ நூற்றுக்கணக்கான வித்தியாசமான கட்டளைகளுக்கு. நாம்‌ நம்மையே நிலைகுலைத்துக்‌ கொண்டோம்‌ என்பதை நாம்‌ கண்டறிகிறோம்‌. இப்பொழுது. அதற்கு விரோதமாக ஒன்றுமில்லை. அதாவது அவர்களால்‌ மற்ற காரியங்களைச்‌ செய்ய முடியும்‌. அப்படியானால்‌ அவர்கள்‌ செய்கிறதையே செய்கிறார்கள்‌. அதிலிருந்து எங்காவது. ஏதோ நல்லது நடக்க வேண்டும்‌. 29ஆனால்‌ நீங்கள்‌ பாருங்கள்‌. “நான்‌ மெதொடிஸ்ட்‌ சபைகளின்‌ சங்கத்தை சேர்ந்தவன்‌. மற்றும்‌ நான்‌ அதைச்‌ சேர்ந்தவனாக இருக்கிறபடியால்‌ நான்‌—நான்‌ சரியாக இருக்கிறேன்‌” என்று கூறுவதில்‌ நீங்கள்‌ உங்களுடைய நம்பிக்கையை வைக்க முடியாது. “நான்‌—நான்‌—நான்‌ பாப்டிஸ்ட்‌ சங்கத்தை சேர்ந்தவன்‌. நான்‌ சரியாய்‌ இருக்கிறேன்‌.” உங்களால்‌ அதைச்‌ செய்ய முடியாது. நீங்கள்‌ “பெந்தேகோஸ்தே சபைகளின்‌ சங்கத்தைச்‌ சேர்ந்தவன்‌” என்று நீங்கள்‌ கூறும்‌ போதும்‌ உங்களால்‌ அதையும்‌ கூட செய்ய முடியாது. உங்களால்‌ அதை செய்ய முடியாது. நீங்கள்‌ அதை செய்ய வேண்டாம்‌. ஏனென்றால்‌ அதுவல்ல. நம்முடைய முதல்‌ பெந்தேகோஸ்தே சங்கம்‌. பொதுவான சபை. ஒழுங்கில்‌ அமைக்கப்பட்டிருந்தபோது. அவர்கள்‌ அங்கிருந்து பிரியத்‌ தொடங்கி. இங்கிருந்து பிரிந்து. பிரச்சனைகள்‌. மற்றும்‌ கோட்பாடுகள்‌ என்று ஏற்படுத்திக்கொண்டு மிக நீண்ட காலம்‌ நீடிக்கவில்லை என்பதை நாம்‌ கண்டறிகிறோம்‌. மேலும்‌ இப்பொழுது அதை. எங்கும்‌ சற்று நோக்கிப்‌ பாருங்கள்‌. புரிகிறதா? அது நிச்சயமற்றதாயுள்ளது என்பதையே அது காண்பிக்கப்‌ போகிறது. வெறுமன ஸ்தாபன அமைப்பில்‌ மாத்திரமே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்‌. அது— அது நிச்சயமற்றதாக இருக்கிறது. 30இப்பொழுது. நீங்கள்‌ “சகோதரன்‌ பிரான்ஹாம்‌. நீங்கள்‌ எங்களை இங்கிருந்து வெளியே ஒரு பெரிய கிளைக்கு அழைத்துச்‌ செல்கிறீர்கள்‌. நீங்கள்‌ ஒரு பயங்கரமான இருண்ட படத்திற்கு வர்ணம்‌ தீட்டிக்‌ கொண்டிருக்கிறீர்கள்‌” என்று கூறலாம்‌. நான்‌ அதை செய்ய எண்ணினேன்‌. நான்‌ அதை செய்ய விரும்பினேன்‌. நான்‌ இதைக்‌ கூறும்படியான. ஒரு நோக்கத்திற்காகவே நான்‌ இதைச்‌ செய்தேன்‌. நிச்சயமான எந்தக்‌ காரியமாவது உண்டா? ஆம் நிச்சயமான ஒரு காரியம்‌ உண்டு. ஓ. நீங்கள்‌ உங்களுடைய நம்பிக்கையை வைக்கக்கூடிய ஒரு காரியம்‌ உண்டு என்பதைக்‌ குறித்து நான்‌ மிகவும்‌ மகிழ்ச்சியடைகிறேன்‌. மேலும்‌ அது சரியானது என்பதை நிச்சயப்படுத்திக்‌ கொள்ளுங்கள்‌. ஓ. மற்ற ஒவ்வொரு காரியமும்‌ போய்‌ விடுகின்றபோதும்‌. இது நிற்கும்‌. நீங்கள்‌ பரிசுத்த மத்தேயு 24:35-ஐ வாசிப்பீர்களேயானால்‌. அவர்‌. “வானங்களும்‌ பூமியும்‌ ஒழிந்துபோம்‌. என்‌ வார்த்தையோ ஒழிந்து போவதில்லை” என்றார்‌. தேவன்‌ ஒரு நிச்சயமான அஸ்திபாரத்தை உடையராய்‌ இருக்கிறார்‌. ஒரு வயோதிக நபர்‌ தென்புறத்தில்‌ உள்ள ஒரு கருமை நிறத்தவர்‌. ஒரு சமயம்‌ கூறினார்‌. அவர்‌ ஒரு வேதாகமத்தைக்‌ கொண்டு செல்வார்‌. ஆனால்‌ அவரால்‌ படிக்க முடியாது. அப்பொழுது அவர்களோ. “சாம்‌ நீ ஏன்‌ அதை சுமந்து கொண்டு செல்கிறாய்‌?” என்று கேட்டனர்‌. 31அவர்‌ “அது—அது பரிசுத்த வேதாகமம்‌” என்றார்‌. மேலும்‌ “அதன்‌ மேல்‌ அவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது” என்றார்‌. அதன் பின்னர்‌ அவர்‌ “நான்‌ இதை முன்பக்க அட்டையிலிருந்து ஒரு எக்காளம்‌ விளங்காத சத்தமிடுகிறது பின்பக்க அட்டை வரை விசுவாசிக்கிறேன்‌. மேலும்‌ அந்த அட்டையில்‌ இருப்பதையும்‌ கூட நான்‌ விசுவாசிக்கிறேன்‌.” என்றும்‌ஏனென்றால்‌ அதில்‌ “பரிசுத்த வேதாகமம்‌' என்று அதன்‌ மேல்‌ எழுதப்பட்டிருக்கிறது என்றும்‌ கூறினார்‌. மேலும்‌ அவரிடத்தில்‌ பேசிக்கொண்டிருந்த அந்த நபர்‌. “அதில்‌ உள்ள எல்லாவற்றையும்‌ நீங்கள்‌ விசுவாசிக்கிறீர்கள்‌ அல்லவா?” என்று கேட்டார்‌. அதற்கு அவரோ “ஆம்‌ ஐயா நான்‌ நிச்சயம்‌ விசுவாசிக்கிறேன்‌” என்றார்‌. அப்பொழுது அவர்‌. “இப்பொழுது பார்‌ வேதாகமம்‌ செய்யும்படி கூறின எந்த காரியத்தையும்‌ நீர்‌ செய்வீர்‌ என்று நீர்‌ பொருட்படுத்தி கூறுகிறீரா?” என்று கேட்டார்‌. அதற்கு அவரோ “ஆம்‌ ஐயா” என்றார்‌. மேலும்‌. “அந்த வேதாகமம்‌ அங்கே உள்ள அந்தக்‌ கல்‌ சுவர்‌ வழியாக குதிக்க வேண்டும்‌ என்று கூறியிருந்தால்‌ என்னவாகும்‌? அப்பொழுது நீ என்ன செய்வாய்‌?” என்று கேட்டார்‌. அதற்கு அவரோ “நான்‌ குதிப்பேன்‌” என்றார்‌. அப்பொழுது இவரோ “சரி இப்பொழுது அங்கே ஒரு துவாரம்‌ இல்லாமல்‌ நீர்‌ எப்படி அந்த கல்‌ சுவரை கடந்து செல்வீர்‌?” என்று கேட்டார்‌. அதற்கு அவர்‌. “சாம்‌ குதிக்க வேண்டும்‌ என்று வேதாகமம்‌ கூறியிருந்தால்‌ சாம்‌ அங்கே செல்லும் போது அங்கே ஒரு துவாரம்‌ இருக்கும்‌” என்றார்‌. எனவே அது அதைக்‌ குறித்து சரிதான்‌. அங்கே ஒரு துவாரம்‌ இருக்கும்‌. நீங்கள்‌ செய்ய வேண்டிய ஒரே காரியம்‌ தேவனுடைய வார்த்தையின்‌ பேரில்‌ உங்களுடைய தீர்மானத்தை எடுக்க வேண்டும்‌ என்பதே. மேலும்‌ தேவன்‌ அதைக்‌ குறித்த மற்றதற்கான வழியை உண்டுபண்ணுவார்‌. ஓ அந்த மகத்தான அஸ்திபாரம்‌. 32லூக்காவில்‌ அவர்‌ கூறினார்‌ என்று நான்‌ நினைக்கிறேன்‌. அங்கே மலையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த போது என்று நான்‌ நினைக்கிறேன்‌. அவர்‌ சீஷர்களிடத்தில்‌ “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள்‌ யார்‌ என்று சொல்லுகிறார்கள்‌?” என்று கேட்டார்‌. மேலும் ஒருவர் எரேமியா என்றும் மற்றும் தீர்க்கதரிசிகள் போன்றவர் என்றும் கூறினர். அவர் “ஆனால் நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். அப்பொழுது தான் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்ற குறிப்பிட்ட அறிக்கையை வெளிப்படுத்தினார். 87.அவர்‌. “யோனாவின்‌ குமாரனாகிய. சீமோனே. நீ பாக்கியவான்‌. மாம்சமும்‌ இரத்தமும்‌ இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. ஆனால்‌ பரலோகத்திலிருக்கிற என்‌ பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்‌. இந்தக்‌ கல்லின்மேல்‌ என்‌ சபையைக்‌ கட்டுவேன்‌.பாதாளத்தின்‌ வாசல்கள்‌ அதை மேற்கொள்வதில்லை” என்று கூறினார்‌. 88.அப்படியானால்‌ அது என்ன? தேவனுடைய வார்த்தையின்‌ வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின்‌ மேல்‌. ஏனென்றால்‌. “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்‌.” அது தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருந்தது என்று பேதுருவிற்கு வெளிப்படுத்தப்பட்டது. ஆமென்‌. 89.அந்தக்‌ காரணத்தினால்தான்‌ அவரால்‌. “என்னிடத்தில்‌ பாவம்‌ உண்டென்று யார்‌ குற்றம்‌ சாட்ட முடியும்‌? யார்‌ என்னைக்‌ குற்றப்படுத்த முடியும்‌? வார்த்தை என்னை குறித்து எழுதியிருக்கிற ஒவ்வொரு காரியத்தையும்‌ நான்‌ நிறைவேற்றியிருக்கிறேன்‌” என்று கூற முடிந்தது. அவர்‌ வார்த்தையாய்‌ இருந்தார்‌ என்று தேவன்‌ அதை ரூபகாரப்படுத்தியிருந்தார்‌. ஓ. அதுதான்‌ அது. தேவன்‌ வெளிப்படுத்தியிருக்கிறார்‌. வார்த்தை அவ்வண்ணமாய்க்‌ கூறுகிறது. ஆகையால்‌ தேவன்‌ அதை உண்மையுள்ளதாக்கி. அதை நிறைவேற்றி. அதைக்‌ காண்பிக்கிறார்‌. 33அநேக ஆண்டுகளுக்கு முன்பு. அவர்கள்‌ சபையினிடத்தில்‌. “பரிசுத்தாவியின்‌ அபிஷேகம்‌ என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. அது ஜனங்கள்‌ தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட ஒரு உணர்ச்சி.” என்று கூறினபோது ஆனால்‌ அதைப்‌ பெற்றிருந்தவர்கள்‌. அது சத்தியமாய்‌ இருந்தது என்பதை அறிந்திருந்தனர்‌. தேவன்‌ உண்மையாகவே இருந்தார்‌ என்பதை அவர்கள்‌ அறிந்திருந்தனர்‌. மேலும்‌ அது இன்று வரை நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது தேவனுடைய பெந்தேகோஸ்தே அசைவு தேசங்களினூடாக. அவர்களில்‌ மற்றவர்கள்‌ யாவரும்‌ கொண்டிருந்ததைக்‌ காட்டிலும்‌ அதிகமாக கிறிஸ்துவுக்குள்ளாக கொண்டு வந்திருக்கிறது. 91.நம்முடைய ஞாயிறு வருகையாளர்‌ என்ற. கத்தோலிக்க நாளிதழ்‌. நீண்ட காலத்திற்கு முன்பே, கூறியது: கடந்த ஆண்டு அல்லது. கடந்த ஆண்டு. ஒன்றுக்கு. முந்தைய ஆண்டு என்று நான்‌ நம்புகிறேன்‌: அதாவது. “கத்தோலிக்க சபையானது ஐந்து லட்சம்‌ மதம்‌ மாறியவர்களை மாத்திரமே பதிவு செய்தது என்றது. அங்கே. பெந்தேகோஸ்தேக்கள்‌ பதினைந்து இலட்சம்‌ பேரை பதிவு செய்தனர்‌” என்றது. ஆமென்‌. 3492.இது என்ன? இது ஒரு வளருகின்ற காரியமாய்‌. தேவனுடைய வார்த்தையாய்‌. வெளிநாடுகளில்‌ பரவுகின்றதாயிருக்கிறது. நாம்‌ எவ்வளவு நன்றியுள்ளவர்களாய்‌ இருக்க வேண்டும்‌! இப்பொழுதும்‌ கூட எபிஸ்கோபலியன்கள்‌. பிரஸ்பிடேரியன்கள்‌. லூத்தரன்கள்‌. மற்றும்‌ யாவரும்‌ அதில்‌ சிலவற்றை பெற்றுக்கொள்ள வந்துகொண்டிருக்கும்‌ அளவிற்கு அது அவ்வளவு அதிகமானதாக இருக்கிறது. வர்த்தக புருஷருடைய கூட்டத்தில்‌ நீங்கள்‌ கவனிக்கிறீர்கள்‌. அவர்கள்‌ வெவ்வேறுபட்டவர்களைக்‌ குறித்து பேசுவதை நீங்கள்‌ கேட்கிறீர்கள்‌: எபிஸ்கோபாலியன்‌. லூத்தரன்‌. பிரஸ்பிடேரியன்‌. ஏன்‌. ஒரு பெந்தேகோஸ்தேக்காரர்‌ எதையாவது செய்வதைப்‌ பற்றி நீங்கள்‌ எப்போதுமே கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள்‌. அது உண்மை. இது மற்ற எல்லோருக்குமானதாய்‌ இருக்கிறது. காரணம்‌ ஏன்‌? அவர்கள்‌ தங்களுடைய கோட்பாடுகளின்‌ தங்களுடைய பலவீனத்தைக்‌ கண்டிருக்கிறார்கள்‌. மேலும்‌ அவர்கள்‌ வார்த்தைக்கு திரும்பிச்‌ சென்றனர்‌. நீங்கள்‌ ஓர்‌ அஸ்திபாரத்தை. அசைக்கப்பட முடியாத ஒரு காரியத்தை கண்டறிகிறீர்கள்‌. 93.பரிசுத்த ஆவியானவர்‌ தன்னுடைய ஜீவியத்தை மானிடர்களில்‌ ஜீவித்து. உலகத்திற்கு தம்மை வெளிப்படுத்துவதை கண்டறிகிறீர்கள்‌. மேலும்‌ அது அவருக்கான தாகத்தை மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது: அசைக்கமுடியாத மறுக்கமுடியாத. வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை மற்றும்‌ அவரைத்தாமே காட்டுகிறது வார்த்தைதாமே மானிட ஜீவியத்தினூடாக ஜீவிக்கப்படுகிறது. என்னே ஒரு அற்புதமான காரியம்‌! அதைக்‌ குறித்து நிச்சயமற்றது ஏதும்‌ இல்லை. தேவன்‌ ஒரு வாக்குத்தத்தம்‌ பண்ணினதை உங்களால்‌ காண முடியும்‌. மேலும்‌ இங்கே அது வெளிப்படுத்தப்படுகின்றது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள்‌ அதைக்‌ குறித்துப்‌ பேசினர்‌. மற்றும்‌ இங்கே அது நிறைவேறுகிறதை நாம்‌ காண்கிறோம்‌. 3594.எல்லா விமர்சனங்கள்‌ மூலமாகவும்‌. எல்லா வேறுபாடுகள்‌ மூலமாகவும்‌எல்லா கோட்பாடுகள்‌ மூலமாகவும்‌. அவர்கள்‌ எப்படி அந்த தேவனுடைய வார்த்தையை முறியடிக்க முயன்றுள்ளனர்‌! எப்படி அவர்கள்‌ கல்வியை மாற்றீடு செய்ய முயன்றனர்‌. அவர்கள்‌ மாற்றீடாக. ஸ்தாபனத்தை உருவாக்க முயன்றனர்‌. அவர்கள்‌ தங்களையே குழப்பிக்கொண்டுள்ளனர்‌. மேலும்‌ அவை எல்லாவற்றிலும்‌. தேவனுடைய வார்த்தையானது இன்னமும்‌ அது எப்போதும்‌ இருந்ததுபோல பிரகாசமாகவும்‌ பளபளப்பாகவும்‌ நிற்கிறது. அது என்ன? அதுவே நிச்சயமாய்‌ இருக்கின்ற அந்த காரியமாய்‌ இருக்கிறது. தேவன்‌. “வானங்களும்‌ பூமியும்‌ ஒழிந்துபோகும்‌. என்னுடைய வார்த்தையோ ஒழிந்து போவதில்லை” என்றார்‌. அப்படியானால்‌, அந்த ஒரு காரியம்‌ நிச்சயமானதாக இருக்கிறது. நீங்கள்‌ உங்களையே நங்கூரமிட விரும்பினால்‌. அந்த வார்த்தையை உங்களுடைய இருதயத்தில்‌ நங்கூரமிடுங்கள்‌. : 95.தாவீது பாவம்‌ செய்யாதபடிக்கு. அவனுடைய இருதயத்தில்‌ அதை மறைத்து வைத்ததாகக்‌ கூறினான்‌. அவன்‌ அவருடைய பிரமாணங்களை கட்டில்‌ கம்பத்தின்‌ மேல்‌ எழுதி. அவனுடைய கரங்களில்‌ கட்டி மற்றும்‌ எங்கும்‌. அவருடைய வார்த்தையை எப்பொழுதும்‌ அவனுக்கு முன்பாக வைத்தான்‌. அதுதான்‌ வழியாய்‌ இருக்கிறது. உங்களுடைய சிந்தையில்‌ தொடர்ந்து வைத்திருங்கள்‌... 3696.தேவன்‌ யோசுவாவினிடத்தில்‌. “அதிலிருந்து வலப்புறமாகவோ அல்லது இடப்புறமாகவோ விலகாதிருப்பாயாக, அப்பொழுது நீ உன்‌ வழிகளை வாய்க்கப்பண்ணுவாய்‌. அப்பொழுது நீ புக்திமானாய்‌ நடந்துகொள்வாய்‌” என்றார்‌. 97.சபை தாமே யாவற்றையும்‌ ஒன்று சேர்ந்து அதனுடைய கோட்பாடுகளிலிருந்து விலக்கிக்‌ கொண்டு, தேவனுடைய வார்த்தையின்‌ பேரில்‌ இணைத்துக்‌ கொள்ளும்போது. அப்பொழுது சபை புத்திமானாய்‌ நடந்துகொள்ளும்‌. அந்தக்‌ காரியமே கம்யூனிசத்தை முறியடிக்கும்‌. கம்யூனிசத்தை உருவாக்கினது...எது? நீங்கள்‌ நினைக்கிற “கம்யூனிசம்‌.” என்ற அதே காரியம்‌. அவர்கள்‌ தங்களுடைய பிரச்சாரத்தைப்‌ பரப்பும்‌ கோடிக்கணக்கானவர்கள்‌ மூலம்‌. வேகமாக. வளருகிறது. மேலும்‌ ஜனங்கள்‌ அதைக்‌ குறித்து பயப்படுகின்றனர்‌: அந்த கம்யூனிசம்‌ மங்கி. மரித்துவிடும்‌. அது மரிக்கத்தான்‌ வேண்டும்‌. கம்யூனிசம்‌. அவர்கள்‌ இதைச்‌ செய்யலாம்‌. அவர்கள்‌ அதைச்‌ செய்யலாம்‌. தேவன்‌ அதைப்‌ பயன்படுத்தப்‌ போகிறார்‌ என்று நான்‌ நம்புகிறேன்‌. ஆனால்‌. அது உண்மை. அவர்‌ நேபுகாத்நேச்சாரைப்‌ பயன்படுத்தியது போலவே. அவர்‌ அந்த—அந்த—அந்த...எல்லாக்‌ களைகளையும்‌. வெளியே. கம்யூனிசத்தோடு வெளியேற்றுவார்‌. ஆனால்‌, அது...இல்லை. அதற்காகத்தான்‌ இவ்வளவு காரியம்‌. ஆனால்‌, பாருங்கள்‌. ஆனால்‌ அந்த காரியம்‌. கம்யூனிசத்திற்கு. ஒரு முடிவு உண்டு. கம்யூனிசம்‌ அதனுடைய முடிவுக்கு வரும்‌. 3799.ஆனால்‌ தேவனுடைய வார்த்தைக்கு முடிவில்லை. ஏனென்றால்‌ அதற்கு தொடக்கமே இல்லாதிருந்தது. ஆமென்‌. அது தேவனோடு நித்தியமாய்‌ இருக்கிறது. மேலும்‌ நீங்கள்‌ நங்கூரமிடப்பட்டிருந்தால்‌ வார்த்தை உங்களுக்குள்‌ நங்கூரமிடப்பட்டிருந்தால்‌. நீங்கள்‌ அந்த வார்த்தையோடு நித்தியமாய்‌ இருக்கிறீர்கள்‌. ஆமென்‌. 100.அது அதனுடைய முடிவுக்கு வந்தாக வேண்டும்‌. அந்த எல்லாக்‌ காரியங்களுமே நடுங்கிக்‌ கொண்டிருக்கின்றன. அவர்கள்‌ எவ்வளவு பெரிய ஒரு தூணைக்‌ கட்டிக்கொண்டிருந்தாலும்‌ கவலைப்பட வேண்டியதில்லை. அது கீழே விழத்தான்‌ வேண்டும்‌. அந்த வார்த்தைக்கு எதிரான. வார்த்தையோடில்லாத. அல்லது அதற்கு முரணான. எல்லா காரியங்களும்‌ ஆட்டங்கண்டு ஒழிந்துபோக வேண்டும்‌. அது இடம்பெயர வேண்டும்‌. ஏனென்றால்‌ வார்த்தை வெற்றியோடு வந்துகொண்டிருக்கிறது. எதுவுமே அதைத்‌ தடுத்து நிறுத்த முடியாது. தேவன்‌ அவ்வண்ணமாய்க்‌ கூறியிருக்கிறார்‌. 101.அவர்‌ அதை உரைக்கிறபோது வானங்களும்‌ பூமியும்‌ ஒழிந்துபோம்‌. ஆனால்‌ அதுவோ ஒருபோதும்‌ ஒழிந்து போகாது.அந்த வார்த்தையை உங்களுடைய சிந்தையில்‌ மறைத்து வையுங்கள்‌. அந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டு. அதை வளரவிடுங்கள்‌. எப்பொழுதும்‌. அதை உங்களுடைய சிந்தையில்‌ வைத்திருங்கள்‌. ஏனென்றால்‌ அது ஒருபோதும்‌ தவறிப்போகாது. தேவனுடைய வார்த்தை ஒருபோதும்‌ தவறிப்போகாது. ஏனென்றால்‌ அது தவறாது என்று அவர்‌ கூறினார்‌. எனவே நாம்‌ அதன்பேரில்‌ அதைக்‌ காத்துக்கொள்ள வேண்டும்‌. 38102.இப்பொழுது. பவுல்‌ வேதவாக்கியங்களில்‌. ஒரு போர்‌ வீரனை. ஒரு சத்தத்திற்கு ஒரு போர்‌ வீரனை பயிற்றுவிப்பதுபோல கூறினான்‌. இப்பொழுது. ஒரு போர்‌ வீரன்‌ தன்னுடைய...எக்காளத்தை குறித்த இல்லை எக்காள சத்தங்களை கற்றறிந்திருக்க வேண்டும்‌. எக்காளம்‌ தொனிக்கையில்‌. முழங்குகையில்‌. அது தாக்குதலுக்கா அல்லது பின்வாங்குவதற்காக என்று அவன்‌ அறிந்திருக்கவில்லை. அவன்‌ அந்த வித்தியாசத்தை அறிந்திருக்கவில்லையென்றால்‌. நீங்கள்‌ எந்தவிதமான ஒரு குழப்பான இராணுவத்தைப்‌ பெற்றிருப்பீர்கள்‌? அந்தவிதமான சிறந்த பயிற்சி பெற்றிராத ஒரு கூட்ட போர்வீரர்களின்‌ மீது சத்துரு நிச்சயமாகவே ஜெயங்கொள்வான்‌. ஆமென்‌. 103.இன்றைக்கு நம்முடைய சபைகளோடுள்ள காரியம்‌ அதுதான்‌. நாம்‌ அவர்களை பிரமாணங்கள்‌ மீது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வேறுபடுத்திக்கொண்டு பயிற்சித்துக்‌ கொண்டிருக்கிறோம்‌. 104.நாம்‌ ஒன்றுபட்டிருக்க வேண்டும்‌. நாம்‌ ஒரு எக்காளத்தை அறிந்திருக்க வேண்டும்‌. “அப்படியானால்‌ எது எக்காளமாய்‌ இருக்கிறது?” என்று அவர்கள்‌ கேட்கிறார்கள்‌. சுவிசேஷ எக்காளம்‌. அதுதான்‌ இது. ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையே எக்காளமாயிருக்கிறது. அதனோடு எதையும்‌ கலக்காதீர்கள்‌. 105.யாரோ ஒரு பிரஞ்சு வீணையை வாசிக்க. மற்ற ஒருவர்‌ ஒரு எக்காளத்தை ஊத வேண்டாம்‌. என்ன செய்வதென்று எவருக்குமே தெரியாது. அது ஒரு குழப்பத்தையே கொண்டு வருகிறது. 106.மேலும்‌ பவுல்‌ ஒரு சத்தத்திற்கு பயிற்றுவித்துக்‌ கொண்டிருக்கிற, ஒரு மனிதனைக்‌ குறித்தே பேசிக்கொண்டிருந்தான்‌. அவன்‌ என்ன செய்ய வேண்டும்‌ என்பதை. சரியாக அந்த ஒலியினால்‌ அறிந்திருக்கிறான்‌. ஏனென்றால்‌ எக்காள முழக்கமிடுபவர்‌ தலைமை தளபதியினிடத்திலிருந்து. கட்டளைகளைப்‌ பெற்றிருக்கிறான்‌. மேலும்‌ அவன்‌ இந்த எக்காளத்தை ஊதுகிறபோது. இராணுவமானது. எங்கே முன்னேற வேண்டும்‌. எந்த இடத்தில்‌ முன்னேற வேண்டும்‌. பின்வாங்க வேண்டும்‌ என்பதையும்‌. மேலும்‌ வலது புறமா அல்லது இடது புறம்‌ திரும்ப வேண்டுமா. அல்லது எக்காளம்‌ முழக்கத்தினால்‌ என்ன செய்ய வேண்டும்‌ என்பதை சரியாக அறிந்திருக்கிறது. 39107.இப்பொழுது. இராணுவம்‌. யுத்தம்‌. அது எப்பொழுதுமே யுத்தமாக இருந்து வருகிறது. நாம்‌ ஒருபோதும்‌ சபையிலே சேரவில்லை. அல்லது சபைக்குள்‌. ஒரு வனபோஜனத்துக்கு வரும்படி வரவில்லை. நாம்‌ ஒரு யுத்த களத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம்‌ என்பதை நாம்‌ தெளிவாக உணர வேண்டும்‌. 108.ஜனங்கள்‌ என்‌ முதுகில்‌ தட்டி. “சகோதரன்‌ பிரான்ஹாம்‌. நீர்‌ ஒரு அற்புதமான நபர்‌” என்று கூறுவதற்காக. நான்‌ ஒருபோதும்‌ வரவில்லை. இல்லை. ஐயா. நான்‌ ஒரு கேடயத்துடன்‌ அங்கு வருகிறேன்‌. அதற்காக எனக்கு ஒரு பாதுகாப்பு தேவையில்லை. நான்‌ ஒரு தலைச்சீராவோடும்‌ ஆயுதத்தோடு வருகிறேன்‌. நான்‌ சண்டையிட. நிலத்தின்‌ ஒவ்வொரு அங்குலத்திற்கும்‌ சண்டையிட வருகிறேன்‌. 109.தேவன்‌ யோசுவாவிடம்‌. “உங்களுடைய காலடி மிதிக்கும்‌ ஒவ்வொரு இடத்தையும்‌ நான்‌ உங்களுக்குக்‌ கொடுக்கிறேன்‌” என்றார்‌. எனவே அடிச்சுவடுகள்‌ என்பது உடமையையே பொருட்படுத்தினது. 110.சபை ஒரு இடத்திற்கு வருகிறபோது. அது பிரமாணங்களோடு சமரசமாகிறது. மேலும்‌ வார்த்தையோடும்‌ சமரசமாகிகிறது. மற்றும்‌ உலகத்தோடும்‌ சமரசமாகிறது. அப்படியானால்‌ அது அஸ்திபாரத்தை இழந்து கொண்டிருக்கிறது என்றே நான்‌ பொருட்படுத்துகிறேன்‌. அது பின்னிட்டுச்‌ செல்கிறது. 40111.தேவன்‌ நிற்கும்படி சபைக்கு வாக்களித்த முழு சர்வாயுதவர்க்கத்தையும்‌இந்த வேதாகமத்தின்‌ ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும்‌ சுதந்தரிக்கும்படியான போர்வீரர்களே. இன்றிரவு நமக்கு தேவையாய்‌ உள்ளது. இதுவே நமக்கு தேவை போர்வீரர்கள்‌: ஒரு ஆடை அணிவகுப்பிற்கான ஒரு சீருடையை பெற்றிருக்காமல்‌. அது எப்பொழுதுமே வித்தியாசமாய்‌ இருக்கிறது. ஒரு மனிதன்‌... 112.எந்த தேசமும்‌. நாம்‌ ஒவ்வொரு தேசத்தினூடாகவும்‌ வேவுகாரர்களைப்‌ பெற்றுள்ளோம்‌. நாம்‌ இங்கே ஜெர்மானிய வேவுகாரர்களை பெற்றுள்ளோம்‌. நாம்‌ இங்கே ஆங்கில வேவுகாரர்களைப்‌ பெற்றுள்ளோம்‌. நாம்‌ வைத்துள்ளோம்‌— நாம்‌ இங்கிலாந்தில்‌ வேவுகாரர்களை வைத்துள்ளோம்‌. அவர்கள்‌ என்ன செய்ய முயற்சித்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌? மற்றவர்‌ எந்தவிதமான ஒரு பொருளை. எந்தவிதமான ஒரு அணுகுண்டை. வைத்திருக்கிறார்கள்‌ என்பதை கண்டறிய அவர்கள்‌ முயற்சித்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. புலன்‌ விசாரணை கூட்டாட்சி பணியகம்‌ ஒவ்வொரு தேசத்தையும்‌ நுணுக்கமாக கண்ணோட்டமிடுகிறது. அவைகளை கவனித்துப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. அப்படித்தான்‌ அவர்கள்‌ பிழைக்கிறார்கள்‌. மற்றவர்கள்‌ எந்த விதமான ஒரு அணுகுண்டை வைத்திருக்கிறார்கள்‌ என்பதை அவர்கள்‌ கவனித்துப்‌ பார்க்கிறார்கள்‌. அதன்பின்னர்‌ அவர்கள்‌ வந்து அதை சற்று சிறப்பாக்குகிறார்கள்‌. அல்லது அதை எதிர்க்க ஏதாவது ஒரு காரியத்தைச்‌ செய்கிறார்கள்‌. தேசங்களில்‌. அவர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ நம்புவதில்லை. ஏனென்றால்‌ தேசங்கள்‌ நடுங்கிக்‌ கொண்டிருக்கின்றன என்பதையே அது காண்பிக்கிறது. ஏன்‌. நாம்‌ இங்கிலாந்தின்‌ பாதையை கடந்தால்‌. ஒரு மணி நேரத்தில்‌. அவர்கள்‌ நம்மை வெடிக்கச்‌ செய்வார்கள்‌. அல்லது நாம்‌ அவர்களை வெடிக்கச்‌ செய்வோம்‌. அங்குள்ள காரியத்தின்‌ தலைமைக்கு யாரையாவதுசற்று பருக அல்லது மிகுதியாக பருக வைக்க. அல்லது ஏதோ ஒன்றோடு வம்பிட அழைத்துச்‌ செல்லுங்கள்‌. அப்பொழுது அது சம்பவிக்கும்‌. 41113.இங்கே அண்மையில்‌. யுத்த நேரத்தில்‌. ஒரு சிறிய துண்டு பொருட்கள்‌ கூட “ஜப்பானில்‌ தயாரிக்கப்பட்டது” என்று அவர்‌ கூறினால்‌. அவர்கள்‌ அதை தரையில்‌ எறிந்து விட்டு. தேசபக்தியோடு சுற்றித்‌ திரிவார்கள்‌. இப்பொழுது நீங்கள்‌ தேசத்திலே வாங்கும்‌ எதையும்‌ விட அதற்காக ஒரு பெரிய கிரயத்தை செலுத்துவீர்கள்‌. என்ன சம்பவித்தது? அது அங்கே மரித்த அந்த பையன்களின்‌ உயிர்களை திரும்பத்‌ தருமா? நிச்சயமாகத்‌ தராது. 114.அது... என்ன? நீங்கள்‌ பொருட்களின்‌ காரியங்களில்‌ எவ்வளவுதான்‌ சண்டையிட்டாலும்‌ எனக்குக்‌ கவலையில்லை. நீங்கள்‌ சண்டையிட்டுக்‌ கொண்டே போகிறீர்கள்‌. அது ஒரு காரியத்தையும்‌ பொருட்படுத்தாது. அது நிலை நிற்காது. ஆனால்‌ உங்களிடத்திலிருந்து ஒருபோதும்‌ பறிக்க முடியாத ஒரு சண்டையில்‌ நீங்கள்‌ ஈடுபட்டு வெற்றி பெறலாம்‌. அதுவே தேவனுடைய வார்த்தையின்‌ சுவிசேஷ எக்காள தொனியாய்‌ உள்ளது. மேலும்‌ அது சபைக்கு அவர்‌ அளித்துள்ள வாக்குத்தங்களையும்‌ வரங்களையும்‌ சுதந்தரித்துள்ளது. நிச்சயமாக அவ்வாறுள்ளது. இப்போது நாம்‌ கண்டறிகிறோம்‌—இந்த எக்காளம்‌ தொனிப்பதை நாம்‌ கண்டறிகிறோம்‌. 115.இப்போது. ஒவ்வொரு தேசமும்‌ தங்கள்‌ பையன்களுக்கு அவர்கள்‌ வைத்திருக்கக்கூடிய மிகச்‌ சிறந்த பாதுகாப்பைக்‌ கொடுக்க முயற்சிக்கிறது. இப்பொழுது. சில சமயங்களில்‌ இந்த ஆயுதங்களை சுமந்து செல்வது எளிதானதல்ல என்பதை. நான்‌ அறிவேன்‌. 42116.எனக்கு ஒரு சகோதரர்‌ இருந்தார்‌. “புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்‌.” இங்கிருந்து வெளியே செல்ல. அவர்கள்‌ அவரை அழைத்தனர்‌. மேலும்‌ இராணுவம்‌ அவருடைய முதுகில்‌ தொண்ணூறா பவுண்டு சுமையைக்‌ கொடுக்கிறது. அவருடைய சரீர எடையைப்‌ போன்றே கிட்டத்தட்ட உள்ளது. ஒரு குழியை தோண்டுவதற்கு. அவர்கள்‌ அவருக்கு ஒரு மண்வெட்டியை கொடுக்கிறார்கள்‌: ஒரு துப்பாக்கி. மற்றும்‌ ஒரு கொத்து கையெறிக்‌ குண்டுகள்‌. மேலும்‌. ஓ. அத்தகைய ஒரு சுமையை நான்‌ ஒருபோதும்‌ கண்டதில்லை! அந்தப்‌ பரிதாபமான சிறு நபரால்‌ அசையக்‌ கூட முடியவில்லை. அவர்கள்‌ அவரை ஐந்து மைல்‌ தூர நடை பயணத்திற்கு அழைத்துச்‌ சென்றனர்‌. அது அவரை கொல்வது போல்‌ இருந்தது. அவரோ. “எதற்கு இந்த முட்டாள்தனம்‌? இது மகத்தான பெரிய பண்டைய தலைச்சீரா எனக்கு என்னத்திற்கு தேவை?” என்று கேட்டார்‌. இப்பொழுது. பாருங்கள்‌. அவருக்கு சில சமயத்தில்‌ அது தேவைப்படப்‌ போகிறது என்பது இராணுவத்திற்குத்‌ தெரியும்‌. “இங்கே நெடுஞ்சாலையில்‌. நடக்கையில்‌ ஒரு மண்வெட்டியோடு நான்‌ என்ன செய்ய வேண்டும்‌?” அதைப்‌ பயன்படுத்தப்படுத்தப்‌ பழகுவது நல்லது. உங்களுக்கு அது தேவைப்படலாம்‌. 117.உங்களுக்குத்‌ தேவை என்று அறிந்திருந்தாலொழிய அரசாங்கம்‌ எந்த ஒரு காரியத்தையும்‌ வழங்கப்போவதில்லை...நீங்கள்‌ அதை உபயோகிக்க வேண்டியவர்களாயிருக்கப்‌ போகிறீர்கள்‌ என்பதை அவர்கள்‌ அறிவார்கள்‌. நீங்கள்‌ அதற்காக பயிற்சி எடுக்க வேண்டும்‌. உங்களைப்‌ பாதுகாக்கும்படி அவர்களால்‌ கண்டறிய முடிந்த மிகச்‌ சிறந்த காரியங்களை அவர்கள்‌கண்டறிகிறார்கள்‌. ஏனென்றால்‌ அவர்கள்‌ தேசத்தின்‌ மீது ஆர்வங்‌ கொண்டுள்ளனர்‌. தோட்டோக்களிலிருந்து விலக்கி முடிந்த அளவு உங்களை பலப்படுத்துவதில்‌ அவர்கள்‌ ஆர்வங்கொண்டுள்ளனர்‌. அது எப்பொழுதும்‌ அந்த விதமாகவே இருந்து வருகிறது. 118.அது ஏதேன்‌ தோட்டத்தில்‌ தொடங்கியது. தேவன்‌ தம்முடைய சபையை பயிற்றுவிக்கிறார்‌. மேலும்‌. 43119.நாம்‌ எப்பொழுதுமே மேம்பட வேண்டும்‌ என்பதை. நீங்கள்‌ அறிவீர்கள்‌. இப்பொழுது. முதலாம்‌ உலகப்‌ போரில்‌ நாம்‌ பயன்படுத்திய பழைய விமானங்களை: இரண்டாம்‌ உலகப்‌ போரில்‌. ஏன்‌. அவர்கள்‌ தங்களிடமிருந்த இந்த அருமையான பெரிய மிகச்‌ சிறந்த ஆகாய விமானங்களை பயன்படுத்திய போது அவர்கள்‌ முதலில்‌ பயன்படுத்திய விமானங்களை பயன்படுத்தாமல்‌ விட்டுவிட்டனர்‌. ஏன்‌. அவைகள்‌ ஒன்றுமில்லாததாயிருந்தன. மேலும்‌ இப்பொழுது. இந்தக்‌ கடைசி யுத்தத்தில்‌ அவர்கள்‌ பயன்படுத்தியவை இப்பொழுது அவைகள்‌ வழக்கற்றுப்‌ போய்விட்டன. அவர்களுக்கு அவைகள்‌ இனிமேல்‌ தேவையில்லை. அவர்கள்‌ ஜெட்‌ விமானங்களை வைத்திருந்தனர்‌. மேலும்‌. பாருங்கள்‌. நீங்கள்‌ பாதுகாப்பிற்காக ஒரு காரியத்தை மேம்படுத்த. மேம்படுத்தவே எப்பொழுது முயற்சித்துக்‌ கொண்டிருக்கிறீர்கள்‌. 120.ஆனால்‌ என்னவென்று உங்களுக்குத்‌ தெரியுமா? தேவன்‌ மேம்படுத்த வேண்டியதில்லை. தேவன்‌ தம்முடைய பிள்ளைகளுக்கு தம்முடைய போர்வீரர்களுக்கு அவர்களுக்கு கொடுக்கக்‌ கூடிய மிகச்‌ சிறந்த காரியத்தையே கொடுத்தார்‌. அவர்‌ அவர்களுக்குக்‌ கொடுக்கும்போது. அவர்‌ அவர்களுக்கு என்னக்‌ கொடுத்தார்‌? அவர்‌ அவர்களுக்குத்‌ தம்முடைய வார்த்தையை ஏதேன்‌ தோட்டத்தில்‌ கொடுத்தார்‌. மேலும்‌ மனிதன்‌ தேவனுடைய வார்த்தையின்‌ பின்னே தன்னை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்‌. அப்பொழுது எந்த பிசாசுமே அவனைப்‌ பிடிக்க முடியாது. வார்த்தையில்‌ தரித்திருங்கள்‌. 44121.இப்பொழுது வேவுக்காரனாகிய சத்துரு. சாத்தான்‌. அதை உடைக்க என்ன செய்ய முடியும்‌ என்று கண்டறிய முயற்சித்தான்‌. எனவே அவன்‌ வந்து அவளிடத்தில்‌ பொய்யுரைத்து ஏமாற்ற முடியாது என்பதை அவன்‌—அவன்‌ அறிந்திருந்தான்‌. அதனால்‌ அவனால்‌ செய்ய முடிந்த ஒரே காரியம்‌ அவளை தர்க்க அறிவை ஏற்றுக்கொள்ளும்படி செய்ததே. தம்முடைய சபையை பலப்படுத்த. அவருடைய வார்த்தையை. அதைத்தான்‌ தேவனும்‌ இன்றைக்கு பயன்படுத்துகிறார்‌. மேலும்‌ சாத்தான்‌ தர்க்க அறிவின்‌ வல்லமையோடு சுற்றி வருகிறான்‌. அது ஓட்டையாயிருந்ததென்று சாத்தான்‌ அறிந்திருந்தான்‌. ஜனங்களை எளிதாக முறியடிக்கும்‌ அந்த இடமே. தர்க்க அறிவாயிருந்தது. 122.நீங்களோ. “இப்பொழுது. நான்‌ உங்களோடு காரணம்‌ கண்டறியட்டும்‌. இப்பொழுது அது தேவையா?” என்று கூறுகிறீர்கள்‌. 123.அது அவசியமானது என்று தேவன்‌ கூறியிருந்தால்‌. நாம்‌ அழ வேண்டுமானாலும்‌. பூஹூ என கூறினாலும்‌. இதையெல்லாம்‌ செய்ய வேண்டுமானாலும்‌ அது அவசியமே. பரிசுத்த ஆவியின்‌ அபிஷேகம்‌ தேவை என்று தேவன்‌ கூறியிருந்தால்‌. அது எவ்வளவு பாரமாய்‌ இருந்தாலும்‌. நீங்கள்‌ எவ்வளவு தான்‌ உலகத்தை கைவிட வேண்டியிருந்தாலும்‌ எனக்கு கவலையில்லை. நீங்கள்‌ உயிரோடிருக்க. இந்நாட்களில்‌ ஒன்றில்‌. நீங்கள்‌ அதை உபயோகிக்க வேண்டியதாயிருக்கப் போகிறது. அதுவே உயிர்‌ வாழ்வதற்கான ஒரே வழி. 45124.“இப்பொழுது. நாம்‌ உலகத்தில்‌ மிகச்‌ சிறந்த மருத்துவர்களைப்‌ பெற்றிருக்கும்போது. நாம்‌ தெய்வீக சுகமளித்தலை செய்ய வேண்டுமா?” 125.தேவன்‌ உங்களுக்கு தெய்வீக சுகமளித்தலைக்‌ கொடுத்தார்‌. ஏனென்றால்‌ நீங்கள்‌ அதை உபயோகிக்க வேண்டும்‌ என்று அவர்‌ அறிந்திருந்தார்‌. அவர்‌ உங்களுக்கு ஆவியின்‌ வரங்களைக்‌ கொடுத்தார்‌. 126.சாத்தான்‌ ஏவாளைச்‌ சுற்றி வந்தவுடனே. அவன்‌ அவளோடு, தர்க்க அறிவை உபயோகிக்க ஆரம்பித்தான்‌. இப்பொழுது “நிச்சயமாகவே நிச்சயமாகவே தேவன்‌ அசைச்‌ செய்ய மாட்டார்‌.” இன்றைக்கு ஜனங்கள்‌. “நரகம்‌ என்ற அப்படிப்பட்ட ஒரு காரியம்‌ கிடையாது” என்று கூறுகின்றனர்‌. அவர்களில்‌ பலர்‌ அதை உங்களுக்குச்‌ செல்கிறார்கள்‌. பார்த்தீர்களா? “ஓ. நிச்சயமாகவே தேவன்‌ தம்முடைய பிள்ளைகளை சுட்டெரிக்க மாட்டார்‌.” 128.நிச்சயமாகவே, தேவன்‌ தம்முடைய பிள்ளைகளை சுட்டெரிக்கிறதில்லை. ஆனால்‌ பிசாசு அவனுடையதை சுட்டெரிப்பான்‌. நீங்கள்‌ யாருடைய பிள்ளை? அதுதான்‌ அடுத்தக்‌ காரியம்‌. நரகம்‌ பிசாசுக்காகவும்‌ அவனுடைய பிள்ளைகளுக்காகவும்‌ சிருஷ்டிக்கப்பட்டதேயன்றி. தேவனுடைய பிள்ளைகளுக்காக அல்ல. அவர்களில்‌ ஒருவர்‌ கூட அங்கே செல்வதில்லை. அது உண்மை. அது நீங்கள்‌ யாருடைய பிள்ளை என்பதை பொறுத்துதாயுள்ளது. 46129.இப்பொழுது. தேவன்‌ ஆதாம்‌ மற்றும்‌ ஏவாளுக்கு அவருடைய வார்த்தையைக்‌ கொடுத்தார்‌. அவர்‌ அதை ஒருபோதும்‌ மாற்றவில்லை. அவர்‌ எப்பொழுதுமே...கிறிஸ்தவனுக்கு. விசுவாசிக்கு அவனுடைய பாதுகாப்பு வார்த்தையாக இருக்கிறது. 130.வானங்களும்‌ பூமியும்‌ ஒழிந்துபோம்‌. ஒவ்வொரு பிரமாணமும்‌ ஒழிப்போம்‌. ஒவ்வொரு ஸ்தாபனமும்‌ தவறிப்‌ போகும்‌. ஒவ்வொரு தேசமும்‌ மூழ்கும்‌. ஆனால்‌ தேவனுடைய வார்த்தையோ. நித்தியமாக நிற்கும்‌. விடிவெள்ளி நட்சத்திரம்‌ ஒருபோதும்‌ பிரகாசிக்காத ஒரு நேரம்‌ வரும்‌. சூரியன்‌ பிரகாசிக்காத ஒரு நேரம்‌ வரும்‌. மற்றும்‌ சந்திரனும்‌ பிரகாசிக்காது. மேலும்‌ உலகம்‌ அதனுடைய சுற்றுப்பாதையில்‌ சுற்றாது. 131.ஆனால்‌ தேவனுடைய வார்த்தை என்றைக்கும்‌ மாறாததாயிருக்கும்‌, ஆம்‌. அது நீங்கள்‌ அசைக்கப்பட முடியாத ஒன்றாயும்‌. நீங்கள்‌ சார்ந்திருக்கக்‌ கூடிய ஒன்றாயுமுள்ளது. அது நிச்சயமானது. தேவன்‌ கூறுகிற எந்தக்‌ காரியமும்‌. அது நிச்சயமாக சம்பவிக்கும்‌. 132.ஏதேன்‌ தோட்டத்தில்‌. ஒரு மீட்பராக. அவர்‌ மேசியாவை அனுப்புவதாக அவர்‌ கூறியிருந்தாரனால்‌. அது நடப்பது நிச்சயமாயிருந்தது. நான்காயிரம்‌ வருடங்களாக அவர்கள்‌ காத்திருந்தபோதிலும்‌. அவர்‌ அங்கே வந்தார்‌. அவர்‌ வர வேண்டியதாக இருந்தது. ஏனென்றால்‌ அது ஒரு வாக்குத்த்தம்பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தையாக இருந்தது. 47133.தேவன்‌ அவரை மீண்டும்‌ அனுப்புவதாக வாக்குப்பண்ணினார்‌. அவர்‌ இங்கிருப்பார்‌. எத்தனை நாத்திகர்கள்‌ மற்றும்‌ சந்தேகக்கார்கள்‌ எழும்பினாலும்‌. அவர்கள்‌ என்ன செய்தாலும்‌. எவ்வளவுதான்‌ கம்யூனிசத்தை பரப்பினாலும்‌. எனக்கு கவலை இல்லை. இயேசு கிறிஸ்து வந்து. இரத்தத்தினால்‌ கழுவப்பட்ட ஒரு சபையைப்‌ பெற்றுக்கொண்டு. அதை ஆகாய-மார்க்கமாக பரலோகத்திற்கு கொண்டு செல்வார்‌. ஏன்‌? அது நிச்சயமாய்‌ இருக்கும்‌. தேவனுடைய வார்த்தை அவ்வண்ணமாய்க்‌ கூறினது. 134.“நீ விசுவாசிக்க கூடுமானால்‌. யாவும்‌ கூடும்‌.” அது நிச்சயம்‌. தேவன்‌ அவ்வண்ணமாய்க்‌ கூறினார்‌. அசைக்கப்படவே முடியாது. தேவன்‌ அவ்வண்ணமாய்க்‌ கூறினார்‌. நீங்கள்‌ அதனோடு தரித்திருந்தது (இப்பொழுது...) அதில்‌ விசுவாசம்‌ கொண்டிருந்து அதை விசுவாசியுங்கள்‌. 135.அது ஒரு விளங்காத சத்தமல்ல. தேவனால்‌ ஒரு விளங்காத சத்தத்தைக்‌ கொடுக்க முடியாது. பிரமாணங்கள்‌ ஒரு விளங்காத சத்தத்தைக்‌ கொடுக்க முடியும்‌. ஸ்தாபனங்கள்‌ ஒரு விளங்காத சத்தத்தைப்‌ பிரசங்கிக்க முடியும்‌. ஆனால்‌ தேவனால்‌ ஒரு விளங்காத சத்தத்தைக்‌ முழங்க முடியாது. மேலும்‌ இந்த வார்த்தை தேவனாயிருக்கிறது. அதைக்‌ குறித்து எந்த நிச்சயமின்மையுமே இல்லை. அதன்‌ ஒவ்வொரு துணுக்கும்‌ நிச்சயமாய்‌ இருக்கிறது. 48136.இப்பொழுது. மகத்தான சபையானது வார்த்தையால்‌ ஆயுதம்‌ தரிப்பிக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது. இயேசு வந்தபோது. அவர்‌ அந்த அதே ஆயுதத்தை பயன்படுத்தினாரா? அவர்‌ நிச்சயமாகவே பயன்படுத்தினார்‌. 137.சாத்தான்‌ அவரிடத்தில்‌. அவனுடைய முழு பெலத்தில்‌ வந்தபோது. அப்பொழுது அவன்‌. “நீர்‌... தேவனுடைய குமாரனேயானால்‌. இன்னின்ன இன்னின்ன காரியங்களைச்‌ செய்யும்‌” என்றான்‌. 138.அதற்கு அவரோ, “எழுதியிருக்கிறதே...” என்றார்‌. சரியாக வார்த்தைக்குத்‌ திரும்பி வந்தார்‌. சாத்தான்‌ அவரை சற்று அதிகமாக சோதித்தான்‌. ஆனால்‌. இயேசு. சரியாக வார்த்தைக்கு திரும்பி “எழுதியிருக்கிறதே...” என்றார்‌. 139.அவர்‌ அந்த வார்த்தையின்‌ பேரில்‌. தரித்திருந்து. நமக்கு ஒரு மாதிரியைக்‌ காண்பித்தார்‌. அவர்‌ முதலாம்‌ கொரிந்தியரில்‌ கூறினதுபோல. முதலாம்‌...பரிசுத்த யோவான்‌ 14:13-ல்‌. “நான்‌ உங்களுக்கு மாதிரியைக்‌ காண்பித்தேன்‌” என்றார்‌. நாம்‌ உறுதியாக இருக்க வேண்டும்‌ என்பதற்கும்‌. நாம்‌ தேவனுடைய வார்த்தையில்‌ பரிபூரணமாக நம்முடைய நம்பிக்கையை வைக்க வேண்டும்‌ என்பதற்கும்‌, அது ஒரு மாதிரியாய்‌ இருக்கிறது. மற்ற ஒவ்வொரு காரியமும்‌ ஒரு பொய்யாகவே இருக்கட்டும்‌. [ஒலிநாடாவில்‌ காலியிடம்‌—ஆசி.] 140.அந்த ஒரு காரியமே நிச்சயமாய்‌ இருக்கிறது. தேவன்‌ வாக்குப் பண்ணினார்‌. தேவன்‌ அந்த வாக்குத்தத்தத்தைக்‌ காத்துக்‌ கொள்ளபோகிறார்‌. அவர்களோ. “இந்தக்‌ காரியம்‌ எப்படி சம்பவிக்க முடியும்‌? எடுத்துக்கொள்ளப்படுதலுக்கேற்ற கிருபையோடு. மேலே செல்லும்படி. எப்படி ஒரு கூட்ட ஜனங்களை ஒன்றாக அவரால்‌ பெற்றுக்கொள்ள முடியும்‌?” என்று கேட்கிறார்கள்‌. அவர்‌ அதை எப்படி செய்வார்‌ என்று எனக்குத்‌ தெரியாது. அவர்‌ அதை எப்படி செய்வார்‌ என்று கேட்பது என்னுடைய வேலை அல்ல. அதற்காக ஆயத்தமாய்‌ இருப்பதே என்னுடைய வேலையாக இருக்கிறது. அவர்‌ வாக்குப்பண்ணினார்‌. அது சம்பவிக்கப்‌ போகிறது. அவருடைய சபையை வார்த்தையினால்‌ பலப்படுத்தினார்‌. 49141.மேலும்‌ முதல்‌ காரியமாக இருந்தது தர்க்க அறிவாகும்‌. இப்பொழுது அவர்கள்‌. “இப்பொழுது இது நியாயமானதல்லவா. நான்‌ இந்தச்‌ சபையைச்‌ சேர்ந்தவனாக இருந்தால்‌. அந்தச்‌ சபையைப்‌ போலவே அதுவும்‌ நல்லதல்லவா?” என்று கூறுகிறார்கள்‌. 142.நீங்கள்‌ சேர்ந்திருக்கக்கூடிய ஒரே ஒரு சபை மாத்திரமே உண்டு. நீங்கள்‌ அதில்‌ சேரமாட்டீர்கள்‌. நீங்கள்‌ விடுதியில்‌. மெதொடிஸ்ட்‌ விடுதியில்‌. ஒரு பிரஸ்பிடேரியன்‌ விடுதியில்‌. பாப்டிஸ்டு விடுதியில்‌. மற்றும்‌ பெந்தேகோஸ்தே விடுதியில்‌ சேரலாம்‌. ஆனால்‌ இயேசு கிறிஸ்துவின்‌ சபைக்குள்ளாகப்‌ பிறக்கின்றீர்கள்‌. எனவே அங்குதான்‌. சபையேயிருக்கிறது. 143.அவைகள்‌ விடுதிகளாய்‌ இருக்கின்றன. காகங்கள்‌ இந்தக்‌ கிளையில்‌ அமர்ந்திருப்பது போலவும்‌. புறாக்கள்‌ இந்தக்‌ கிளையில்‌ அமர்ந்திருப்பது போலவும்‌. மற்றும்‌—மற்றும்‌ அது போன்று ஜனங்கள்‌ அங்கே ஒன்று கூடுகின்றனர்‌. நீங்கள்‌ ஒரே ஆகாரத்தை பகிர்ந்துகொண்டிருக்கும்போது. அதுவே நீங்கள்‌ ஒன்று கூடுகின்ற உங்களுடைய ஐக்கியமாய்‌ இருக்கிறது. 50144.ஆனால்‌ அது இயேசு கிறிஸ்துவின்‌ சபைக்கு வருகின்றபோது அங்கே ஒரே ஒரு வழிதான்‌ இருக்கிறது. அது பிறப்பாயுள்ளது. பிறப்பே! 145.நான்‌ அநேக முறை கூறியிருக்கிறதுபோல. ஒரு கருப்பு பறவைகிளையின்‌ மேல்‌ அமர்ந்துகொண்டு. தன்னுடைய சிறகுகளில்‌ மயிலின்‌ இறகுகளை சொருகிக்கொண்டு. “நீங்கள்‌ பாருங்கள்‌. நான்‌ செருக்கு நடையுடைய ஒரு மையில்‌” என்று கூற முயற்சித்துக்‌ கொண்டிருக்கிற ஒரு நபரைப்‌ போன்றே அது உள்ளது. புரிகிறதா? அவன்தானே. அவைகளுடைய சிறகுகளை சொருகியிருக்கிறான்‌. அவன்‌ ஒரு அசலான மையிலாயிருந்திருந்தால்‌. அவனுடைய சுபாவம்‌ அந்த விதமான ஒரு சிறகை உண்டுபண்ணும்‌ 146.ஜீவனுள்ள தேவனுடைய சபை ஜீவனுள்ள தேவனுடைய சபையாகவே இருந்தால்‌, அது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்தும்‌. நீங்கள்‌ மயிலின்‌ சிறகுகளை இணைக்க வேண்டியதேயில்லை. மேலும்‌ அங்குள்ள ஒவ்வொரு சிறகும்‌ ஒரு மயிலுடன்‌ இணைக்கப்பட்டிருக்கும்‌. உங்களால்‌ அதை நம்ப முடியும்‌. மேலும்‌ தேவனுடைய சபைக்குள்‌ இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சிறகும்‌ தேவனுடைய வார்த்தையாக இருக்கும்‌. அவர்‌ வார்த்தையை தவிர மற்ற வேறு எந்த காரியத்தையும்‌ ஒருபோதும்‌ புகுத்தமாட்டார்‌. ஆமென்‌, காரணம்‌. ஆவியின்‌ சுபாவம்‌ வார்த்தையை மாத்திரமே வெளியிடுகிறது. ஆமென்‌. நான்‌ பக்திப்‌ பரவசமடைந்து கொண்டிருக்கிறேன்‌. உண்மையே. 51147.நீங்கள்‌ செய்ய முயற்சிக்கும்‌ எந்த காரியமும்‌ அல்ல. நீங்கள்‌ உற்பத்தி செய்யும்‌ எதுவும்‌ அல்ல. நீங்கள்‌ பக்தி-...உற்பத்தி செய்ய முடியாது. நீங்கள்‌ இரட்சிப்பை உற்பத்தி செய்ய முடியாது. நீங்கள்‌ வரங்களை உற்பத்தி செய்ய முடியாது. நீங்கள்‌ வரங்களோடு பிறக்க வேண்டும்‌. நிச்சயமாகவே. புரிகிறதா? அந்த—அந்த ஆடு உற்பத்தி செய்கிறதில்லை. அது உரோமத்தை உற்பத்தி செய்கிறதில்லை. அது ஒரு ஆடாயிருக்கிறபடியால்‌. அது உரோமத்தை உடையதாயிருக்கிறது. அது உரோமத்தைக்‌ கொடுக்கிறது. அந்த—அந்த—அந்த செர்ரி மரம்‌ செர்ரி பழங்களை உற்பத்தி செய்கிறதில்லை. அது செர்ரி பழங்களைக்‌ கொடுக்கிறது ஏனென்றால்‌ அதனுடைய ஜீவியம்‌ அந்த விதமாக உள்ளது. 148.ஜீவனுள்ள தேவனுடைய சபையானது ஏதோ ஒன்றைப்‌ போல தங்களை உருவாக்கிக்‌ கொள்ளும்படி முயற்சிக்க இதை உட்செலுத்துகிறதில்லை. தேவனுடைய கிருபையினால்‌. அவர்கள்‌இருக்கிறப்பிரகாரமாக. ஏற்கனவே இருக்கிறார்கள்‌. தேவனுடைய வார்த்தை அவர்களோடு இணைக்கப்பட்டுள்ளது. மேலும்‌ அவர்கள்‌ வார்த்தையோடு இணைக்கப்பட்டிருக்கின்றனர்‌. மாம்சத்தில்‌ வெளிப்பட்ட தேவனாகிய. இயேசு கிறிஸ்து என்ற. பரிபூரணமான ஒருவருக்குள்‌ வெளிப்பட்ட கிரியைகள்‌. மறுபடியும்‌ பிறந்த ஒவ்வொரு விசுவாசியினூடாக அதனை உற்பத்தி செய்யும்‌. அவர்‌ அவ்வண்ணமாய்‌ கூறினார்‌. ஆமென்‌. இப்பொழுது. அது நிச்சயமான ஒரு காரியமாய்‌ இருக்கிறது. 52149.இப்பொழுது. ஒரு மனிதன்‌ உண்மையான எக்காளத்தின்‌ சத்தத்தை அறிந்திராவிட்டால்‌. அது அவனுக்கு ஒரு சிறு சிறு குழப்பமாய்‌ இருக்கும்‌. இப்பொழுது. எக்காள சத்தத்திற்கு ஒருபோதும்‌ பயிற்றுவிக்கப்படாதிருக்கிற அந்த மனிதன்‌ மேலும்‌ அதை ஒருபோதும்‌ கேட்டிராதவன்‌. பாருங்கள்‌. அவன்‌ கேட்டுள்ளத்திலிருந்து வித்தியாசமான ஒரு சத்தத்தை அவன்‌ கேட்கிறபோது. அவன்‌ சிறிது குழப்பமடையலாம்‌. அவன்‌ எப்பொழுதுமே. “சபையில்‌ சேர்ந்துகொள்ளுங்கள்‌. உங்களுடைய கடிதங்களை இங்கு மற்றும்‌ இங்கு எடுத்துச்‌ செல்லுங்கள்‌” என்பதையே கேட்டு வந்துள்ளான்‌. அதெல்லாம்‌ சரியாக இருக்கலாம்‌. அவன்‌ அறிந்துள்ளது அவ்வளவுதான்‌. 150.ஆனால்‌ அதன்பின்னர்‌ நீங்கள்‌. பரிசுத்த ஆவியின்‌ அபிஷேகத்தை குறித்தும்‌. தேவனுடைய வல்லமை மற்றும்‌ அவர்‌ செய்கிற காரியங்களை குறித்தும்‌ பேசுவதற்கு திரும்பி வரும் போது: அது ஸ்திரீகளையும்‌ புருஷர்களையும்‌ எப்படி உருவாக்குகிறது இருவரையும்‌. ஒரு பாவ ஜீவியத்திலிருந்து எப்படி அவர்களை சுத்தம்‌ செய்துகொள்ளச்‌ செய்கிறது: அது எப்படி அவர்களை தேவபக்தியாய்‌. நேர்மையாய்‌ நடக்க வைக்கிறது. மேலும்‌ அது செய்கிற காரியங்கள்‌. ஞானஸ்நானம்‌. அந்நிய பாஷைகளில்‌ பேசுதல்‌. வியாதியஸ்தரை சுகமாக்குதல்‌. பிசாசுகளைத்‌ துரத்துதல்‌. தீர்க்கதரிசனமுரைத்தல்‌. வரங்கள்‌. ஓ. தரிசனங்கள்‌. சபையில்‌ உள்ள ஒவ்வொரு காரியத்தையும்‌ கொடுக்கிறது. அல்லேலூயா! அது உண்மை. அது நடைபெறும்போது. அப்பொழுது அந்த விதமான ஒரு எக்காளத்தை ஒருபோதும்‌ கேட்டிராதவர்களுக்கு அது ஒரு சிறு குழப்பமாகவே இருக்கிறது. 53151.“பாருங்கள்‌.” நீங்களோ. “என்னுடைய சபை அதைப்‌ போதிக்கிறதில்லை” என்று கூறலாம்‌. அப்படியானால்‌ அது சுவிசேஷ எக்காளத்தை ஊதுவதல்ல. மகிமை! சரி. 152.ஆனால்‌ பயிற்றுவிக்கப்பட்ட போர்வீரர்களாகிய அவர்களுக்கு. அல்லேலூயா. அவர்கள்‌ அந்த எக்காள சத்தத்தைக்‌ கேட்கும்போது அவர்கள்‌ எப்படி ஒழுங்காக நிற்க வேண்டும்‌ என்பதை அறிந்திருக்கிறார்கள்‌கிறிஸ்தவ போர்வீரரே. முன்னே செல்லுங்கள்‌! மகிமை! ஓ. அது நிச்சயம்‌! “அது நிச்சயம்‌ என்பதை நீங்கள்‌ எப்படி அறிவீர்கள்‌?” அது வார்த்தையில்‌ உள்ளது. “பாருங்கள்‌.” நீங்களோ. “எங்களுடைய சபை அதைப்‌ போதிக்கிறதில்லை” என்று கூறலாம்‌. 153.ஆனால்‌ எக்காளம்‌ அதை தொனிக்கிறது. நான்‌ ஒரு சபை பிரமாணத்திற்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்‌ என்று விரும்புகிறதில்லை. ஏனென்றால்‌ அது அசைந்து விழும்‌. ஆனால்‌ நீங்கள்‌ அந்த வார்த்தைக்கு பயிற்சிக்கப்பட்டிருந்தால்‌. வானங்களும்‌ பூமியும்‌ ஒழிந்து போகும்‌. இந்த வார்த்தையோ ஒரு போதும்‌ ஒழிந்துபோகாது. ஒவ்வொரு பிரமாணமும்‌. மற்றுமுள்ள ஒவ்வொரு காரியமும்‌. விழுந்து போகும்‌. ஆனால்‌ இந்த வார்த்தையோ ஒரு போதும்‌ தவறிப்போகாது. ஆமென்‌. அதுவே சத்தம்‌. அந்த சத்தத்தையே நான்‌ கேட்க விரும்புகிறேன்‌. ஆம்‌. ஐயா. “ஓ.” நீங்களோ. “எனக்கு எப்படித்‌ தெரியும்‌?” என்று கேட்கலாம்‌. 154.இயேசு. “என்‌ ஆடுகள்‌ என்‌ சத்தத்தைக்‌ கேட்கின்றன. அவைகள்‌ என்னுடைய எக்காளத்தை அறிந்திருக்கின்றன” என்றார்‌. அவர்‌. பரிசுத்த யோவான்‌. 14-ம்‌ அதிகாரம்‌ மற்றும்‌ 12-ம்‌ வசனத்தில்‌. “என்னை விசுவாசிக்கிறவன்‌ நான்‌ செய்கிற கிரியைகளைத்‌ தானும்‌ செய்வான்‌” என்றார்‌. இப்பொழுது. அவர்‌ அதைக்‌ கூறினார்‌. ஒரு மனிதன்‌. “அப்படியா” என்று கூறினால்‌ என்னவாகும்‌? 155.எபிரேயர்‌ 13:8. “இயேசு கிறிஸ்து நேற்றும்‌. இன்றும்‌. என்றும்‌ மாறாதவராயிருக்கிறார்‌” என்று கூறியுள்ளது.“ஓ.” அவர்களோ. “ஒரு குறிப்பிட்ட வழியில்‌” என்கிறார்கள்‌. 54156.இப்பொழுது. ஒரு உண்மையான ஆடோ. “ஹு-ஓ. ஓ. அதில்‌. ஏதோ கீச்சொலி சத்தம்‌ கேட்டது. அது சரியாகத்‌ தொனிக்கவில்லை. ஓ. அது ஒரு பிரஞ்சு ஊதுகொம்பாக இருக்கவேண்டும்‌. அது ஒரு எக்காளமாய்‌ இருந்திருக்காது. ஏனென்றால்‌ வேதம்‌ விளங்காத சத்தத்தைக்‌ கொடுக்கிறதில்லை” என்று கூறும்‌. 157.அது. “நீங்கள்‌ பரிசுத்த ஆவியைப்‌ பெற்றுக்கொள்வீர்கள்‌” என்று கூறுகிறது. “நீங்கள்‌ பெற்றுக்கொள்ளலாம்‌” என்று அல்ல. “நீங்கள்‌ ஒவ்வொருவரும்‌ பெறுவீர்கள்‌.” எவ்வளவு காலத்திற்கு? “உங்களுடைய பிள்ளைகளுக்கும்‌. உங்களுடைய பிள்ளைகளுடைய பிள்ளைகளுக்கும்‌. மற்றும்‌ தூரத்தில்‌ உள்ள யாவருக்கும்‌. நம்முடைய தேவனாகிய கர்த்தர்‌ வரவழைக்கும்‌ யாவருக்கும்‌.” அவர்‌ ஒவ்வொரு இனத்திலும்‌ மற்றும்‌ ஒவ்வொரு தலைமுறையிலும்‌ எக்காளத்தை ஊதுவார்‌. அவர்கள்‌ அவருடைய சத்தத்தைக்‌ கேட்பார்கள்‌. அவர்கள்‌ அதை விசுவாசிப்பார்கள்‌. அவர்கள்‌ ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள்‌. ஆமென்‌. அது சுவிசேஷ எக்காள சத்தம்‌ என்பதை அவர்கள்‌ அறிந்திருக்கிறபடியால்‌ அவர்கள்‌ அதை விசுவாசிப்பார்கள்‌. அது நிச்சயமற்றது அல்ல. எப்படி நிற்க வேண்டும்‌ என்பதை ஒவ்வொரு போர்வீரனும்‌ அறிந்திருக்கிறான்‌. 55158.இப்பொழுது. நீங்கள்‌ பேதுரு. யோவான்‌. யாக்கோபு மற்றும்‌ ஆதி சபை. இந்த வழியில்‌ முன்னோக்கிப்‌ பவனி சென்றதை கண்டீர்கள்‌. ஏனென்றால்‌ எக்காளம்‌. இயேசு. “நீங்கள்‌ உலகமெங்கும்‌ போய்‌ சுவிசேஷத்தைப்‌ பிரசங்கியுங்கள்‌” என்றார்‌. மாற்கு 16. பாருங்கள்‌. “விசுவாசிக்கிறவர்களால்‌ நடக்கும்‌ அடையாளங்களாவன.” பேதுரு. யாக்கோபு. யோவான்‌. மீதமுள்ளவர்களும்‌ வரிசையாக. அதற்கு அணிவகுத்துச்‌ செல்வதை நாம்‌ காண்கிறோம்‌. 159.மேலும்‌ நாம்‌ அதிலிருந்து விலகி. வேறு ஏதோ வழியாகத்‌ திரும்புகிறோமா? ஒன்று முன்னோக்கி செல்கிறது. மற்றொன்று பின்னோக்கி செல்கிறதா? ஒருவர்‌. “பாருங்கள்‌. அது மற்றொருவருக்கானதாய்‌ இருந்தது. அது. அந்த—அந்த சத்தம்‌, இன்னொருவருக்கானதாய்‌ இருந்தது” என்கிறார்‌. ஓ. இல்லை. அது அப்படி இருக்க முடியாது. 160.முழு கிறிஸ்தவ இராணுவமும்‌ எக்காளத்தைக்‌ கேட்கிறது. அது எக்காளம்‌ என்றே தேவன்‌ கூறினார்‌. அவரால்‌ அதை மாற்ற முடியாது. அந்த சத்தம்தான்‌ தொனிக்கும்‌ என்று அவர்‌ கூறினார்‌. “இதை எல்லா மனிதரும்‌ அறிந்து கொள்வார்கள்‌.” மற்றும்‌ அப்பொழுது சபையானது புறப்பட்டுச்‌ செல்கிறது. 56161.அவர்களில்‌ சிலர்‌ அவருடைய நேரடி வருகையை விசுவாசிக்கிறதில்லை. அவர்‌ வருவார்‌ என்று வேதம்‌ கூறியுள்ளது எனவே நாம்‌ அவருடைய வருகைக்காக எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம்‌. அவர்‌ இன்றிரவு இங்கில்லையென்றால்‌. நாம்‌ காலையில்‌ எதிர்நோக்கிக்‌ கொண்டிருப்போம்‌. அவர்‌ காலையில்‌ இங்கே இல்லையென்றால்‌. நாம்‌ அவருக்காக நாளை இரவு எதிர்நோக்கிக்‌ கொண்டிருப்போம்‌. நாம்‌ தொடர்ந்து எதிர்நோக்குவோம்‌. நாம்‌ நித்திரையடைந்தால்‌. நம்முடைய—நம்முடைய...நாம்‌ வீணாக மயக்கமுற்றிருக்கவில்லை. “ஏனெனில்‌ கடைசி எக்காளமான தேவ எக்காளம்‌ தொனிக்கும்‌ அப்பொழுது கிறிஸ்துவுக்குள்‌ மரித்தவர்கள்‌ எழுந்திருப்பார்கள்‌. பின்பு உயிரோடிருக்கும்‌ நாமும்‌ கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல்‌ அவர்களோடே கூட ஆகாயத்தில்‌ எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய்‌ எப்பொழுதும்‌ கர்த்தருடனே கூட இருப்போம்‌.” அதுவே எக்காளத்தின்‌ சத்தம்‌. நான்‌ உயிரோடிருந்தாலும்‌ அல்லது நான்‌ மரித்துவிட்டிருந்தாலும்‌ எந்த வித்தியாசத்தையும்‌ உண்டாக்குகிறதில்லை. நான்‌ அந்த சத்தத்தைக்‌ கேட்பேன்‌. நான்‌ எழும்புவேன்‌. தேவனுக்கு மகிமை! எழுப்புங்கள்‌! ஓ. ஆம்‌. ஆம்‌. 162.இயேசு. “என்‌ ஆடுகள்‌ என்‌ சத்தத்திற்கு செவி கொடுக்கிறது” என்று. கூறினார்‌. அவர்‌ வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாய்‌ இருந்தார்‌. எப்பொழுது அந்த...அப்படித்தான்‌ அவருடைய ஆடுகள்‌ அவரை அறிந்திருக்கின்றன. 57163.இப்பொழுது பரிசேயர்களையும்‌ மற்றும்‌ அந்த நாளில்‌ இருந்தவர்களையும்‌ நோக்கி பாருங்கள்‌. “ஓ.” அவர்கள்‌. “இந்த மனிதன்‌ பெயல்செபூல்‌” என்றனர்‌. கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்தீரியினிடத்தில்‌. அங்கே. அவளுடைய பாவங்களைக்‌ குறித்தும்‌. அவளுக்கு இருந்த அவளுடைய புருஷர்களைக்‌ குறித்தும்‌ கூறினபோது அவர்‌ நாத்தான்வேலினிடத்தில்‌ அவன்‌ எங்கிருந்தான்‌ என்றும்‌. பிலிப்பு அவனை அங்கே மரத்தின்‌ கீழே அழைக்கும் போது அத்தி மரத்தின்‌ கீழே. ஜெபித்துக்‌ கொண்டிருந்தபோது. ஏன்‌. அந்த நாளின்‌ அந்த ஆசிரியர்கள்‌ “இந்த மனிதன்‌ பெயல்செபூல்‌. அவர்‌ ஒரு பிசாசு. அவர்‌ ஒரு குறி சொல்பவர்‌” என்று கூறினர்‌. 164.ஆனால்‌ பேதுரு. யாக்கோபு. யோவான்‌. மீதமுள்ளோருக்கோ அது அப்படி இருக்கவில்லை. அவர்கள்‌ அதை அறிந்திருந்தனர்‌. ஏன்‌? மேசியா வரும்போது. ஆவியினாலே ஏவப்பட்டதான மோசேயின்‌ சத்தத்தின்‌ கீழ்‌. அவர்‌ ஒரு தீர்க்கதரிசி இருப்பார்‌ என்று தேவன்‌ கூறியதை அவர்கள்‌ அறிந்திருந்தனர்‌. மேலும்‌ அவர்‌ கூறின அந்தக்‌ காரியங்கள்‌ வெளிப்படுத்தப்பட்டு மற்றும்‌ பரிபூரணமாக்கப்பட்டதை அவர்கள்‌ கண்டபோது. அது ஆட்டின்‌ ஆகாரமாக இருந்தது என்பதை அவர்கள்‌ அறிந்திருந்தனர்‌. அது எக்காளமாய்‌ இருந்தது என்பதை அவர்கள்‌ அறிந்திருந்தனர்‌. மேலும்‌ அவர்கள்‌ அதை பின்பற்றத்‌ தொடங்கினர்‌. “என்‌ ஆடுகள்‌ அதை அறிந்திருக்கின்றன.” ஏனென்றால்‌ தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்பட்டதை அவைகள்‌ கண்டன. 58165.இப்பொழுது. இன்றைக்கு ஜனங்கள்‌. பரிசுத்த ஆவியின்‌அபிஷேகம்‌ என்ற அப்படிப்பட்ட ஒரு காரியம்‌ இருக்கிறது என்பதை அவர்கள்‌ விசுவாசிக்கிறதில்லை. இங்கோ அல்லது அவர்கள்‌ பரிசுத்த ஆவியை பெற்றிருக்கும்‌ எங்கோ ஒரு இடத்தில்‌ விடும்போது தேவனுடைய வாக்குத்தத்தம்‌ சரியாக நிறைவேற்றப்படுகின்றதை அவர்கள்‌ காண்கிறார்கள்‌. ஏன்‌. “என்‌ ஆடுகள்‌ என்‌ சத்தத்தைக்‌ கேட்கின்றன.” அது வேதமாக இருக்கின்றபடியால்‌ அந்தக்‌ எக்காளத்தின்‌ சத்தத்தை அவைகள்‌ அறிந்திருக்கின்றன. “இயேசு கிறிஸ்து நேற்றும்‌. இன்றும்‌. என்றும்‌ மாறாதவராயிருக்கிறார்‌.” அவர்‌ இன்னமும்‌ சரியாக. எபிரெயர்‌ 13:8-ஆக இருக்கிறார்‌. 166.எனக்கு கவலையில்லை. இப்பொழுது. எத்தனை சபை ஊதுகொம்புகள்‌ ஊதபட்டுக்‌ கொண்டிருந்தாலும்‌ அது எனக்கு ஒரு துளி வித்தியாசத்தையும்‌ உண்டாக்குகிறதில்லை. நாம்‌ ஏராளமான சபை ஊதுகொம்புகளின்‌ ஒலியைப்‌ பெற்றுள்ளோம்‌. ஒவ்வொரு காரியத்தை சுற்றிலும்‌ ஒலித்துக்கொண்டிருப்பததை. நீங்கள்‌ அறிவீர்கள்‌. “ஓ. அற்புதங்களின்‌ நாட்கள்‌ கடந்துவிட்டன. தெய்வீக சுகமளித்தல்‌ என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது”என்கின்றனர்‌. 59167.ஓ. உண்மையான ஆடுகள்‌ அதற்கு செவிகொடுக்கிறதில்லை. ஆனால்‌ அவர்கள்‌ அந்த எக்காளத்திற்காக. அந்த உறுதியானதற்கே செவிகொடுக்கிறார்கள்‌. 168.அந்த சபை ஊதுகொம்பு எந்தக்‌ காரியத்தையும்‌ தொனிக்கலாம்‌. நீங்கள்‌...சபை ஊதுகொம்புகள்‌. இன்றைக்கு அது என்ன பெற்றுள்ளது என்பதை நோக்கிப்‌ பாருங்கள்‌. ஒன்று இந்த வழியாக ஓடிக்கொண்டிருக்கிறது. மற்றும்‌ ஒன்று அந்த வழியாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிசாசு பின்னால்‌ அமர்ந்துகொண்டு “இதோ. அவர்கள்‌ ஒருவருக்கொருவர்‌ சண்டையிடுகிறார்கள்‌. அவ்வளவுதான்‌. நான்‌ என்னுடைய கரத்தை அசைக்கக்கூட வேண்டியதில்லை” என்கிறான்‌. 169.ஆனால்‌. சகோதரனே. அவர்கள்‌ யாவரும்‌ ஒருமுறை ஆயுதங்களண்டை வரட்டும்‌. பொதுப்படையான கட்டளைகளுக்கு திரும்பி வரட்டும்‌. ஓ. என்னே! அப்பொழுது நீங்கள்‌. “கிறிஸ்தவ போர்வீரர்கள்‌. முன்னோக்கி செல்வதை.” காணப்போகிறீர்கள்‌. சரியாக. ஊதுகொம்புகளண்டை கேட்பதற்கு அல்ல. ஆனால்‌ எக்காளத்திற்கு செவிகொடுப்பதற்கே. 60170.நாம்‌ ஒரு நிமிடம்‌, நிறுத்திவிட்டு. திரும்பிச்‌ சென்று இப்பொழுது ஒரு சிலவற்றை நோக்கிப்‌ பார்ப்போமாக. நான்‌ முடிக்க ஆயத்தமாகிக்‌ கொண்டிருக்கிறேன்‌. ஏனென்றால்‌ நான்‌ உங்களை இங்கே நீண்ட நேரம்‌ வைத்திருக்க விரும்பவில்லை.ஆனால்‌ நாம்‌ திரும்பிப்‌ போய்‌ இந்த சத்தத்தைக்‌ கேட்ட சிலரை நோக்கி பார்ப்போமாக. நாம்‌...எடுத்துக்‌ கொள்வோமாக. அவர்கள்‌ நிச்சயமுள்ளவர்களாக இருந்தனர்‌. இப்பொழுது. மற்ற ஒவ்வொரு காரியமும்‌ நிச்சயமற்றதாய்‌ இருக்கிறதை நான்‌ உங்களுக்கு காண்பித்திருக்கிறேன்‌. நாம்‌ ஒரு கணம்‌ பண்டைய குணாதிசயங்கொண்ட ஒருவரை எடுத்துக்‌ கொள்வோமாக. 61171.நாம்‌ தீர்க்கதரிசி யோபுவை எடுத்துக்‌ கொள்வோமாக. இப்பொழுது. அந்த மனிதன்‌ ஒரு சோதனையினூடாகச்‌ சென்றான்‌. ஆனால்‌ தேவனுக்கு ஒரு சர்வாங்க தகனபலி தேவைப்பட்டது என்பதை அவன்‌ அறிந்திருந்தான்‌. அதைத்தான்‌ தேவன்‌ 36 உரைக்கப்பட்ட வார்த்தை கேட்டார்‌. மேலும்‌ அவர்‌ கேட்டது அவ்வளவுதான்‌. மேலும்‌ அவனுடைய வீட்டில்‌ எவ்வளவு பேரழிவு நடந்திருந்தது என்பதைப்‌ பொருட்படுத்தவில்லை...தேவன்‌ எப்பொழுதுமே...கேட்கிறதில்லை. 172.ஒரு நபருக்கு ஏதாவது தவறு நடப்பதை நீங்கள்‌ காணும் போது அவர்‌ தேவனால்‌ சாட்டையால்‌ அடிக்கப்பட்டுக்‌ கொண்டிருக்கிறார்‌ என்பது அதன்‌ அர்த்தமல்ல, அவர்‌ தேவனுடைய சித்தத்திற்கு புறம்பே இல்லாமலிருக்கலாம்‌. அவர்‌ எக்காளத்துக்குச்‌ செவிகொடுத்துக்‌ கொண்டிருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை அவர்‌ தன்னுடைய இருதயத்தில்‌ அறிந்திருக்கிறார்‌. 173.தேவன்‌ இந்த சர்வாங்க தகனபலியைக்‌ கேட்டார்‌. மேலும்‌ யோபு சரியாக அதன்‌ பேரில்‌ நின்றான்‌. அவ்வளவுதான்‌. அவர்களோ. “யோபுவே. நீ ஒரு இரகசிய பாவி. நீ தவறான ஏதோ ஒரு காரியத்தை செய்து கொண்டிருக்கிறாய்‌” என்றனர்‌. அவனோ மேலாக அறிந்திருந்தான்‌. அவன்‌ அங்கேயே தரித்திருந்தான்‌. ஏனென்றால்‌ அவன்‌ அக்காலத்தின்‌ சத்தத்தைக்‌ கேட்டிருந்தான்‌. மேலும்‌ அவன்‌ அங்கே அதனோடு சரியாக தரித்திருந்தான்‌. 62174.மேலும்‌. முடிவிலே. கடைசி முடிவிலே. அவன்‌... பிசாசு அவன்‌ மேல்‌ அவிழ்த்துவிடப்பட்டிருந்தான்‌. மற்றும்‌ அவனுடைய குடும்பத்தை எடுத்துக்கொண்டான்‌. மேலும்‌ அவன்‌ அவனுடைய பிள்ளைகளையும்‌ எடுத்துக்கொண்டான்‌. அவனுடைய ஒட்டகங்களை எடுத்துக்கொண்டான்‌. மற்றும்‌ அவனுடைய செல்வம்‌ எல்லாவற்றையும்‌ எடுத்துக்‌ கொண்டான்‌. அவன்‌ தன்னுடைய சொந்த உடல்‌ நலத்தையும்‌ குலைத்துக்கொண்டான்‌. அவன்‌ சாம்பல்‌ குவியலின்‌ மேல்‌ உட்கார்ந்தான்‌. எல்லாமே போய்விட்டது போன்று காணப்பட்டது. ஆனால்‌ அவன்‌ இன்னும்‌. “என்‌ மீட்பர்‌ உயிரோடிருக்கிறார்‌ என்று நான்‌ அறிந்திருக்கிறேன்‌. கடைசி நாளில்‌ அவர்‌ பூமியின்மேல்‌ நிற்பார்‌. இந்த என்‌ தோல்‌ முதலானவை அழுகிப் போனபின்பு. நான்‌ என்‌ மாம்சத்தில்‌ இருந்து தேவனைப்‌ பார்ப்பேன்‌”என்றான்‌. அதைக்குறித்து நிச்சயமின்மையே இல்லை. அங்கே இருந்ததா? இல்லை. “அவர்‌ உயிரோடிருக்கிற விதத்தைக்‌ குறித்தே நான்‌—நான்‌—நான்‌—நான்‌ நினைக்கிறேன்‌.” அவன்‌. “அவர்‌ உயிரோடிருக்கிறார்‌ என்று நான்‌ அறிந்திருக்கிறேன்‌. மேலும்‌ அவர்‌ கடைசி நாளில்‌ பூமியின்‌ மேல்‌ நிற்பார்‌. இந்த என்‌ தோல்‌ முதலானவை அழுகிப்போனபின்பு. நான்‌ என்‌ மாம்சத்தில்‌ இருந்து தேவனைப்‌ பார்ப்பேன்‌” என்றான்‌. ஓ. என்னே! அது சம்பவித்தது. அவன்‌ மிகவும்‌ நிச்சயமுடையவனாய்‌ இருந்தான்‌. 63175.ஆபிரகாம்‌. ஒருநாள்‌ வயல்வெளியில்‌ நடந்து கொண்டிருந்தபோது. “ஆபிரகாமே. நான்‌...செய்யப்போகிறேன்‌”என்று தேவன்‌ கூறுவதைக்‌ கேட்டான்‌. அவர்‌ எழுதப்பட்ட வார்த்தைக்கு முன்பே ஆபிரகாமை சந்தித்தார்‌. மேலும்‌ அவர்‌.“ஆபிரகாமே. நான்‌ உன்னுடைய மனைவியாகிய. சாராளின்‌ மூலம்‌ உனக்கு ஒரு குமாரனைக்‌ கொடுக்கப்‌ போகிறேன்‌” என்றார்‌. மேலும்‌ அந்த நேரத்தில்‌ சாராள்‌ அறுபத்தைந்து வயதுடையவளாய்‌ இருந்தாள்‌. மற்றும்‌ ஆபிரகாம்‌ எழுபத்தைந்து வயதாயிருந்தான்‌. அவர்கள்‌ அதற்காக ஆயத்தம்‌ செய்தனர்‌. மற்றும்‌ அவன்‌ சாட்சிப்பகர வெட்கப்படவில்லை. அவன்‌ அந்தக்‌ குமாரனைப்‌ பெற்றுக்‌ கொள்ளப்போவதாயிருந்தான்‌ என்பதை அவன்‌ அறிந்திருந்தான்‌. 176.மேலும்‌ வேதம்‌. “அவன்‌ தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்‌ குறித்து விசுவாசமாய்‌ சந்தேகப்படாமல்‌. முழு நிச்சயமாய்‌ நம்பினான்‌” என்று கூறியுள்ளது. ஆமென்‌. முழு நிச்சயமாக நம்பினான்‌. அது அவன்‌ முடிவானவரை சந்தித்திருக்கிறான்‌ என்றே பொருள்படுகிறது. ஆமென்‌. அதுதான்‌ இது. முடிவானதே பாதையின்‌ இறுதியாக உள்ளது. இது கடைசி காரியம்‌. இதுவே—இதுவே அதைக்‌ குறித்த யாவுமாயுள்ளது. அவன்‌. “தேவன்‌ வாக்குத்தத்தம் பண்ணினதை. நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று நான்‌ நிச்சயமாக நம்புகிறேன்‌”என்றான்‌. 64177.நீங்கள்‌. இன்றிரவு. இது பரிசுத்த ஆவி என்று நீங்கள்‌ முழு நிச்சயமாய்‌ நம்புகிறீர்களா? இதுவே வழி என்று. நீங்கள்‌ முழு நிச்சயமாய்‌ நம்புகிறீர்களா? அவர்‌ ஒருவரே சுகமளிப்பவர்‌ என்று. நீங்கள்‌ முழு நிச்சயமாய்‌ நம்புகிறீர்களா? அவர்‌ மீண்டும்‌ வரப்போகிறார்‌ என்று நீங்கள்‌ முழு நிச்சயமாய்‌ நம்புகிறீர்களா? அவர்‌ நேற்றும்‌. இன்றும்‌. என்றும்‌ மாறாதவராயிருக்கிறார்‌ என்று நீங்கள்‌ முழு நிச்சயமாய்‌ நம்புகிறீர்களா? [ சபையோர்‌. “ஆமென்‌” என்கின்றனர்‌.—ஆசி.] ஆமென்‌. ழும நிச்சயமாக நம்பப்படுதல்‌! ஆம்‌. 178.அங்கே மலைமேல்‌ நின்று கொண்டிருந்த. எலியா என்ற மற்றொருவரை நாம்‌ தொடர்ந்து பார்ப்போம்‌. அவன்‌ யேசபேல்‌மற்றும்‌ அவளுடைய வண்ணம்‌ தீட்டப்பட்ட முகத்தோடு சண்டையிட்டிருந்தான்‌. அவன்‌ அதைக்‌ குறித்து ஒருவிதமாக களைப்புற்றுப்போய்விட்டான்‌. கிட்டத்தட்ட எல்லா ஸ்திர்களும்‌ அந்த முதல்‌ பெண்மணியை மாதிரியாக பின்பற்றி, சிகை அலங்காரங்கள்‌ மற்றும்‌ அந்த நாளில்‌ அவர்கள்‌ என்னவெல்லாம்‌ செய்திருந்தார்களோ அதை செய்தார்கள்‌. அது—அது கிட்டத்தட்ட அவனை வீழ்த்துமளவிற்கு அவன்‌ அதனோடு சண்டையிட்டிருந்தான்‌. 179.நேரடியாக. தேவன்‌ அவனிடத்தில்‌. “அங்கே போ, உனக்குத்‌ தெரியும்‌. ஒரு வாரத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று நாட்கள்‌. இங்கே சுற்றி மழை பெய்கிறது. ஆனால்‌ நீ ஆகாபினிடத்தில்‌ நின்று. நீ அவனிடத்தில்‌. கர்த்தர்‌ உரைக்கிறதாவது. நான்‌ பனியை அழைக்கும்‌ வரை அது வானத்திலிருந்து பெய்யாது' என்று சொல்லு” என்றார்‌. ஓ. என்னே! 180.அவன்‌. “இப்பொழுது. ஆகாபே. ஒருவேளை. அது இந்த வழியில்‌ கிரியை செய்யலாம்‌” என்று கூறவில்லை. ஓ. இல்லை. அவன்‌ முழு நிச்சயமாய்‌ நம்பினான்‌. நிச்சயமின்மையே இல்லை. “நான்‌ அதை அழைக்கும்‌ வரை. பனியும்‌ பெய்யாது. மழையும்‌ வராது.” ஆமென்‌. மகிமை! ஓ. ஏன்‌? அவன்‌ எக்காளத்தைக்‌ கேட்டிருந்தான்‌. அது நிச்சயமானதாய்‌ இருந்தது. அவன்‌ தன்னுடைய தேவனை அறிந்திருந்தான்‌. தேவன்‌ அந்த வார்த்தையை உரைத்தபோது. அது—அது நடைபெறும்‌ வரை எல்லா வானங்களும்‌ பூமியும்‌ ஒழிந்து போனாலும்‌. நிச்சயமாக இது நடக்கும்‌ என்று அவன்‌ அறிந்திருந்தான்‌. அது நடக்க வேண்டும்‌. அவன்‌ நிச்சயமாகவே முழு நிச்சயமாய்‌ நம்பியிருந்தான்‌. 65181.இப்பொழுது. அவர்‌. “எலியா. தேசத்திலுள்ள வறண்ட இடத்திலிருந்து எழுந்திருந்து. நீரூற்றுகள்‌ இல்லாத மலையின்‌ மேல்‌ செல்ல வேண்டும்‌ என்று நான்‌ விரும்புகிறேன்‌. ஆனால்‌ நான்‌ அங்கே உனக்காக ஒன்றை வைத்திருக்கிறேன்‌” என்றார்‌. 182.அவன்‌ முழு நிச்சயமாய்‌ நம்பினான்‌. அவன்‌ மலையின்‌ மேல்‌ ஏறிச்‌ சென்று கேரீத்‌ ஆற்றண்டையிலே அமர்ந்தான்‌. “மேலும்‌ இப்பொழுது நான்‌ இங்கே மேலே என்ன செய்யப்போகிறேன்‌?” “நான்‌ உன்னை போஷிக்கும்படிக்கு காகங்களுக்கு ஏற்கனவே கட்டளையிட்டிருக்கிறேன்‌” 183.“இப்பொழுது. எப்படி அந்தக்‌ காகங்கள்‌...இப்பொழுது. ஒரு நிமிடம்‌ பொறும்‌. கர்த்தாவே”? இல்லை. இல்லை. எக்காளம்‌ முழங்கினது. அது போதுமானது. “அது எப்படி சம்பவிக்கப்‌ போகிறது? எனக்குத்‌ தெரியாது. எனக்குக்‌ கவலையில்லை. புரிகிறதா? அதைக்‌ குறித்து கவலைப்படுவது நானல்ல. அது தேவனுடைய வேலை. அவர்‌ காகங்களுக்கு கட்டளையிட்டதாக அவர்‌ கூறினார்‌.” 184.“சரி, கர்த்தாவே. நீர்‌ அதை தயவுசெய்து எனக்கு விளக்கிக்‌ கூறுவீரா. மற்றும்‌ எங்கே அவைகள்‌...எபிரெய மொழியைப்‌ பேசும்படி கற்றுக்கொள்ள அந்த காகங்கள்‌ எந்தப்‌ பள்ளிக்குச்‌ சென்றன என்று எனக்கு சொல்லுவீரா? என்ன வகையான ஓரு... அவைகள்‌ எரிவாயு அடுப்புகளில்‌ சமைக்கின்றனவா. அல்லது அவைகள்‌ விறகில்‌ நெருப்பு மூட்டி சமைக்கின்றனவா. அல்லது அவைகள்‌ அதை எப்படி செய்கின்றன? மேலும்‌ அவைகள்‌ எங்கே...எந்த விதமான ஒரு மிருகத்தை அவைகள்‌ கொல்லும்‌? அவைகளே சிறிய பறவைகளாக இருக்கின்றன. ஒரு மாட்டிறைச்சி கலந்த ரொட்டியை எனக்கு கொண்டு வரும்படி, அவைகள்‌ எனக்காக ஒரு மாட்டை எப்படி கொல்லப்‌ போகின்றன?” பார்த்தீர்களா? பார்த்தீர்களா? அந்தக்‌ கேள்வி கேட்கப்படவில்லை. 66185.தேவன்‌. அந்த—அந்த தேவ எக்காளம்‌. அவருடைய சத்தம்‌ தொனித்து மற்றும்‌ “என்னிடம்‌ உள்ளதே!” என்று கூறிற்று. (“எலியா. நான்‌ அதைச்‌ செய்யலாம்‌” என்றல்ல.) “நான்‌ அதை செய்துவிட்டேன்‌.” (“நான்‌ அதை செய்வேன்‌.”) “நான்‌ அதை ஏற்கனவே செய்து விட்டேன்‌.” ஆமென்‌. 186.இன்றிரவு. அதுவே நம்முடைய தேவனாகும்‌. “அவர்‌ அதை செய்வார்‌.” என்றல்ல. அவர்‌ அதை ஏற்கனவே செய்துவிட்டார்‌. ஆமென்‌. அவர்‌ அதை ஏற்கனவே செய்துவிட்டார்‌. ஆமென்‌.“அவர்‌ செய்வார்‌: அவர்‌ செய்யலாம்‌: அநேகமாக அவர்‌ செய்வார்‌.” என்றல்ல. அவர்‌ அதை ஏற்கனவே செய்துவிட்டார்‌. “நான்‌ காகங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்‌.” 67187.அவர்‌ தம்முடைய ஆவியை எல்லா மனிதர்களுக்கும்‌ பரிந்துரைத்தார்‌. அவர்‌ தம்முடைய ஆசீர்வாதங்களை பரிந்துரைத்தார்‌. அவர்‌ உன்னதத்துக்கு ஏறி மனுஷருக்கு வரங்களை அளித்தார்‌. யாரோ அதைப்‌ பெற்றுக்கொள்ளப்‌ போகிறார்கள்‌. யாரோ அதை புறக்கணிப்பார்கள்‌. அது எப்படி வருகிறது என்பது என்னுடைய வேலை அல்ல, அது அப்படியே அங்கே வருகிறதாயிருக்கிறது. அது அவ்வண்ணமாய்‌ இருக்கும்‌ என்று தேவன்‌ கூறினார்‌. மற்றும்‌ அது அவ்வண்ணமாகவே இருக்கிறது. பெந்தேகோஸ்தே நாளிலே. பேதுரு. “நீங்கள்‌ மனந்திரும்பி ஒவ்வொருவரும்‌ பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின்‌ நாமத்தினாலே ஞானஸ்நானம்‌ பெற்றுக்கொள்ளுங்கள்‌. அப்பொழுது பரிசுத்த ஆவியின்‌ வரத்தைப்‌ பெறுவீர்கள்‌” என்றான்‌. அது எப்படி வரப்போகின்றது? எனக்குத்‌ தெரியாது. “அந்த—அந்த வாக்குத்தத்தமானது உங்களுக்கும்‌. உங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌. நம்முடைய தேவனாகிய கர்த்தர்‌ வரவழைக்கும்‌ தூரத்திலுள்ள யாவருக்கும்‌ உண்டாயிருக்கிறது.” இப்பொழுது. நீங்கள்‌ அதை விளக்கிக்‌ கூற முடியாது. எக்காளம்‌ ஒலித்துள்ளது. மேலும்‌ நான்‌ அதை விசுவாசிக்கிறேன்‌. நான்‌ அதற்கு கீழ்ப்படிந்தேன்‌ மற்றும்‌ அதைப்‌ பெற்றுக்‌ கொண்டேன்‌. ஆமென்‌. இப்பொழுது அதைக்‌ குறித்து ஒருமுறை என்னிடத்தில்‌ வாதிட முயற்சியுங்கள்‌. ஆமென்‌. ஓ. நான்‌ பரிபூரணமானவன்‌ அல்ல. இல்லை. 68188.அன்றிரவு. அந்த வயோதிக கருப்பு நிற சகோதரி கூறினதுபோல. அவள்‌. “மூப்பரே. நான்‌ ஒரு சாட்சியைக்‌ கொடுக்கலாமா?” என்றாள்‌. “சரி. அம்மா.” 189.அவள்‌. “இந்த ஒரு காரியத்தை நான்‌ கூற விரும்புகிறேன்‌” என்றாள்‌. அவள்‌. “நான்‌—நான்‌—நான்‌ என்னவாக இருக்க விரும்புக்றேனோ அதுவாக இல்லை” என்றாள்‌. மேலும்‌ அவள்‌. “நான்‌ இருக்க வேண்டியபிரகாரமாகவும்‌ நான்‌ இருக்கவில்லை. ஆனால்‌. நான்‌ ஒரு காரியத்தை அறிவேன்‌. நான்‌ முன்பு இருந்ததைப்போல இல்லை” என்றாள்‌. 190.எனவே. அதாவது. அந்த விதமாகத்தான்‌ நாம்‌ அதைக்‌ குறித்து இப்பொழுது உணருகிறோம்‌. நாம்‌ முன்பிருந்ததுபோல இல்லை. ஏனென்றால்‌ நான்‌ இன்றிரவு இரட்சிக்கப்பட்டிருக்கிறேன்‌. தேவனுடைய கிருபையினால்‌. மேலும்‌ கட்டளையின்‌ பேரில்‌. பரிசுத்த ஆவியின்‌ அபிஷேகத்தைப்‌ பெற்றுவிட்டேன்‌. கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமாக. பெந்தேகோஸ்தே நாளிலே அது அங்கே ஊற்றப்பட்டது. மற்றும்‌ நான்‌ அதை விசுவாசித்தேன்‌. நிச்சயமின்மையே இல்லை. நான்‌ அந்த சத்தத்தைக்‌ கேட்டேன்‌.நான்‌ அதற்கு கீழ்ப்படிந்தேன்‌. மற்றும்‌ அதுதான்‌ இது என்று நான்‌ நிச்சயமுடையவனாய்‌ இருக்கிறேன்‌. நிச்சயமாக. இதை நான்‌அறிவேன்‌. நிச்சயமாக. 69191.சிமியோன்‌. சுமார்‌ எண்பது வயது நிரம்பிய வயோதிக ஞானி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பூமியின்மேல்‌ ஒரு தீர்க்கதரிசி கூட இல்லாமலிருந்தும்‌. ஆனால்‌ இவர்‌ ஒரு மகத்தான நற்பெயருடன்‌ வலம்‌ வந்தவர்‌. பரிசுத்த ஆவியானவர்‌ அவரிடத்தில்‌ ஒருநாள்‌ பேசினார்‌. “சிமியோனே. நீ கர்த்தருடைய இரட்சணியத்தைக்‌ காணும்‌ மட்டும்‌ நீ மரிக்கப்போவதில்லை” என்றார்‌. மகிமை! 192.ஒருவேளை பிரதான ஆசாரியன்‌. தன்னுடைய தாடியை ஒரு சில முறைகள்‌ தடவிவிட்டு. “சிமியோனே. நீ உன்னுடைய மனநிலையை சரிப்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌” என்று கூறியிருப்பான்‌. அதற்கு அவன்‌. “அது எந்த ஒரு வித்தியாசத்தையும்‌ உண்டாக்கவில்லை” என்றான்‌. “நீ... சரியாக இருக்கிறாய்‌ என்பதை நீ எப்படி அறிந்துகொள்ளுகிறாய்‌?” “பரிசுத்த ஆவியானவர்‌ என்னிடத்தில்‌ அவ்வண்ணமாய்க்‌ கூறினார்‌. நான்‌ மரிக்கமாட்டேன்‌.” 193.“ஏன்‌. சிமியோனே. ஏன்‌. நீ...ஏன்‌. நீ இப்பொழுதே மரிக்க ஆயத்தமாய்‌ இருக்கிறாய்‌.” 194.“ஓ. நீ என்னக்‌ கூறினாலும்‌ எனக்குக்‌ கவலையில்லை. ஆனால்‌ நான்‌ அவருடைய இரட்சணியத்தைக்‌ காணும்‌ மட்டும்‌ நான்‌ மரணத்தை காணமாட்டேன்‌ என்று தேவன்‌ என்னிடத்தில்‌ கூறினார்‌. நிச்சயமின்மையே இல்லை. நான்‌ மரிக்கமாட்டேன்‌. நான்‌ அவரைக்‌ காணும்‌ வரை நான்‌ மரணத்தைக்‌ காணமுடியாது.” ஆமென்‌. அதுவே இதுவாகும்‌. “சிமியோனே. நீ அதை எப்படி செய்யப்‌ போகிறாய்‌?” “நான்‌. அது என்னுடைய வேலை அல்ல.” “சிமியோனே. அவர்‌ எங்கே இருக்கிறார்‌?” “எனக்குத்‌ தெரியாது.”“நீ அவரைக்‌ காணப்போகிறாய்‌ என்று எப்படி உனக்குத்‌ தெரியும்‌? 195.“தேவன அவ்வண்ணமாய்‌ கூறினார்‌. அதுவே இதுவாகும்‌. இது வார்த்தையாகும்‌. நான்‌ அவரைக்‌ காணும்‌ வரை நான்‌ மரணத்தைக்‌ காணப்போவதில்லை.” ஓ. என்னே! “ஓ. வயதான ஏழை நபர்‌. நிச்சயமாகவே. அவன்‌ தன்னுடைய புத்தி சுயாதீனத்தில்‌ இல்லை. உங்களுக்குத்‌ தெரியும்‌. எனவே அவனை தனியாக விட்டுவிடுங்கள்‌.” 197.ஆனால்‌ எப்படியும்‌. அவன்‌ அவரைக்‌ கண்டான்‌. ஆம்‌. ஐயா. அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்‌ ஜனங்களுக்காக தேவன்‌ ஒரு வழியை உண்டுபண்ணுகிறார்‌. 198.இயேசு. அவர்‌ பூமியின்‌ மேல்‌ இங்கே இருந்தபோது. அவர்‌ அங்கே லாசருவின்‌ கல்லறையில்‌ நின்றுகொண்டிருந்தார்‌. 70199.இல்லை. அதற்கு முன்னே. அவர்‌ ஜனங்களோடு—அவர்‌ எப்படிப்பட்டவர்‌ என்பதைக்‌ குறித்த பேசின. உரையாடலில்‌ இருந்தபோது. இன்னும்‌ ஐம்பது வயது கூட ஆகவில்லை. மேலும்‌ அவர்‌ ஆபிரகாமைக்‌ கண்டேன்‌ என்று கூறினாரே என்றனர்‌. அவர்‌ எவ்வளவு உறுதியாக இருந்தார்‌ என்பதை நீங்கள்‌ கவனிக்கிறீர்களா? அவர்‌. “ஆபிரகாம்‌ இருந்ததற்கு முன்னமே. நான்‌ இருக்கிறேன்‌. நான்‌ இருக்கிறேன்‌” என்றார்‌. “நான்‌ இருந்தேன்‌. அல்லது நான்‌ இருப்பேன்‌ என்றல்ல.” ஆனால்‌, “நான்‌ இருக்கிறேன்‌. நான்‌ உறுதியாக இருக்கிறேன்‌.” 200.அதன்பின்னர்‌. அவர்‌ லாசருவின்‌ கல்லறையிலே கூறினார்‌. அவர்‌ அங்கே செல்வதற்கு முன்னர்‌. அவர்‌ மார்த்தாளிடம்‌ கூறினார்‌. அவர்‌. “நானே உயிர்த்தெழுதலும்‌. ஜீவனுமாயிருக்கிறேன்‌” என்றார்‌. “நான்‌ இருக்க வேண்டும்‌. அல்லது நான்‌ இருப்பேன்‌. என்றல்ல.” ஆனால்‌.“நான்‌ இருக்கிறேன்‌.” ஆமென்‌. 201.“நீர்‌ இங்கே இருந்திருந்தால்‌. என்‌ சகோதரன்‌. மரித்திருந்திருக்க மாட்டான்‌. ஆனால்‌ இப்பொழுதும்‌ கூட. ஆண்டவரே. நீர்‌ தேவனிடத்தில்‌ கேட்டுக்கொள்வதெதுவோ. தேவன்‌ அதை உமக்குத்‌ தந்தருளுவார்‌.” அப்பொழுது அவர்‌. “உன்‌ சகோதரன்‌ உயிர்த்தெழுந்திருப்பான்‌”என்றார்‌. “ஓ. அவன்‌ கடைசி நாட்களில்‌ பொதுவான உயிர்த்தெழுதலில்‌ உயிர்த்தெழுந்திருப்பான்‌. அவன்‌ ஒரு நல்ல பையனாக இருந்தான்‌. ஆம்‌. அவன்‌ உயிர்த்தெழுவான்‌ என்று நான்‌ விசுவாசிக்கிறேன்‌.” 203.ஆனால்‌ இயேசு தம்மை. சற்று. திடப்படுத்திக்கொண்டு. “ஆனால்‌ நானே உயிர்த்தெழுதலும்‌ ஜீவனுமாயிருக்கிறேன்‌” என்றார்‌. “நான்‌ இருப்பேன்‌: நான்‌ இருக்க வேண்டும்‌.” அல்லது அது போன்று அல்ல. “நான்‌ இருக்கிறேன்‌” அங்கு எதுவும்‌ இல்லை. அதைக்‌ குறித்த நிலையற்ற. நடுக்கமானது ஒன்றுமில்லை. நிச்சயமின்மையே இல்லை. அது உறுதியாயிருந்தது. 204.“நானே உயிர்த்தெழுதலும்‌ ஜீவனுமாயிருக்கிறேன்‌. என்னை விசுவாசிக்கிறவன்‌ மரித்தாலும்‌ பிழைப்பான்‌. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும்‌ என்றென்றைக்கும்‌ மரியாமலும்‌ இருப்பான்‌.” “அவர்கள்‌ அவ்வாறில்லாமல்‌ இருக்கலாம்‌. அவர்கள்‌ ஒருவேளை அவ்வாறிருக்கமாட்டார்கள்‌” என்றல்ல—அல்ல. “அவர்கள்‌ அவ்வாறிருக்க மாட்டார்கள்‌. அது குறித்த நிச்சயமின்மையே இல்லை—இல்லை. அவர்கள்‌மரிக்கமாட்டார்கள்‌.” 205.“என்‌ வார்த்தைகளைக்‌ கேட்டு. என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன்‌ உண்டு அவன்‌ ஆக்கினைத்‌ தீர்ப்புக்குட்படாமல்‌ மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருகிறான்‌.”. 206.“அவர்கள்‌ ஆக்கினைத்‌ தீர்ப்புக்குட்பட வேண்டியதில்லையா”? அவர்கள்‌ ஆக்கினைத்‌ தீர்ப்புக்குட்படமாட்டார்கள்‌. ஆமென்‌. அவர்‌ என்னுடைய ஆக்கினைத்தீர்ப்பை எடுத்துக்கொண்டார்‌. அங்கு வேறெந்த வேலையும்‌ இல்லை. ஆமென்‌. அங்குதான்‌ உங்கள்‌ காரியமே உள்ளது. “மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்‌.” ஓ! 71207,இப்பொழுது அவள்‌ அதை விசுவாசிப்பதாகக்‌ கூறினாள்‌. இப்பொழுது. இயேசு. “பாருங்கள்‌. உங்களுக்குத்‌ தெரியும்‌. நீங்கள்‌ அதை விசுவாசிக்கிறீர்கள்‌. மேலும்‌ நான்‌ வார்த்தையாயிருக்கிறேன்‌ என்பதை நீங்கள்‌ அறிவீர்கள்‌. மேலும்‌—மேலும்‌ நான்‌— நான்‌... வரவிருந்தவர்‌ நான்தான்‌ என்பதை நீங்கள்‌ அறிவீர்கள்‌. நீங்கள்‌ அதை அறிக்கை செய்திருக்கிறீர்கள்‌. நீங்கள்‌ அதை விசுவாசிக்கிறீர்கள்‌. நாம்‌ என்ன செய்யலாம்‌ என்பதை நான்‌ உங்களுக்கு சொல்லுவேன்‌. நாம்‌ அதைக்‌ குறித்து எதையாவது செய்ய முடியுமா என்று பார்க்கும்படி நாம்‌ பெரியவர்களை ஒன்று சேர்த்து கூட்டிக் கொண்டு செல்வோம்‌” என்று ஒருபோதும்‌ கூறவேயில்லை. இல்லை. இல்லை. அவர்‌. “நான்‌...” என்றார்‌. “போய்‌. என்னால்‌ அவனை எழுப்ப முடியுமா என்று பார்ப்பேன்‌” என்றல்ல. “நான்‌ போய்‌ அவன்‌ எழுப்புவேன்‌.” ஆமென்‌. “நான்‌—நான்‌ முயற்சிப்பேன்‌” என்றல்ல.“நான்‌ எழுப்புவேன்‌.” நிச்சயமின்மையே இல்லை. அவர்‌. “நான்‌ எழுப்புவேன்‌. நான்‌ எழுப்புவேன்‌” என்று கூறினபோது. அது விளங்காத சத்தமாயிருக்கவில்லை. 72208.மேலும்‌. “நான்‌ எழுப்புவேன்‌.” என்று கூறின அதே ஒருவர்‌. உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை அளித்தார்‌. அல்லேலூயா! ஓ. என்னே! ஆமென்‌. “நான்‌ போய்‌ அவனை எழுப்புவேன்‌.” 209.அவர்‌ மீண்டும்‌. “இந்த ஆலயத்தை இடித்துப்‌ போடுங்கள்‌. நான்‌ அதைக்‌ குறித்து என்ன செய்ய முடியும்‌ என்று பார்ப்பேன்‌”? என்று கூறினார்‌. “நீங்கள்‌ இந்த ஆலயத்தை இடித்துப்‌ போடுங்கள்‌. நான்‌ அதை மூன்று நாளைக்குள்ளே மீண்டும்‌ எழுப்புவேன்‌.” நிச்சயமின்மையே இல்லை. “இப்பொழுது நான்‌ முயற்சிப்பேன்‌. என்னால்‌ அதை செய்ய முடியுமா அல்லது இல்லையா என்று நீங்கள்‌ எல்லோரும்‌ சுற்றி நின்று பார்க்கலாமென்றா”? ஹா. இல்லை. “நான்‌ அதை எழுப்புவேன்‌.” நிச்சயமின்மையே இல்லை. “நான்‌ அதை எழுப்புவேன்‌. நீங்கள்‌—நீங்கள்‌ அதை இடித்துப்‌ போடுங்கள்‌: நான்‌ அதை எழுப்புவேன்‌.” ஓ. என்னே! 210.ஏன்‌? வேதாகமத்தில்‌ தாவீது பேசியிருந்த அந்த நபர்‌ அவர்தான்‌ என்பதை அவர்‌ அறிந்திருந்தார்‌. “என்‌ ஆத்துமாவைப்‌ பாதாளத்தில்‌ விடீர்‌, உம்முடைய பரிசுத்தர்‌ அழிவைக்‌ காணவொட்டிர்‌,” மேலும்‌ அவர்‌ அந்த வேதாகம வாக்குத்தத்தத்தில்‌ சேர்க்கப்பட்டார்‌ என்பதை அவர்‌ அறிந்திருந்தார்‌. எனவே அவர்‌ உறுதியாக இருந்தார்‌. 73211.இப்பொழுது. நாம்‌ அதில்‌ உறுதியாக இருக்க முடியாதா? நாம்‌ அவரை மற்ற காரியங்களுக்காக மாதிரியாக எடுத்துக்‌ கொள்கிறோம்‌. தேவனுடைய வார்த்தை அதைக்‌ கூறியிருக்கும்‌ வரை. அவர்‌ அதைக்‌ குறித்து இருந்தது போலவே அந்த வார்த்தையைக்‌ குறித்து நம்மால்‌ உறுதியாக இருக்க முடியாதா? 212.“நானே உயிர்த்தெழுதலும்‌ ஜீவனுமாயிருக்கிறேன்‌.” “நான்‌அதை மீண்டும்‌ எழுப்புவேன்‌.” ஆமென்‌. ஏன்‌? அதைக்குறித்து வார்த்தை உரைத்திருந்ததை அவர்‌ அறிந்திருந்தார்‌. அவர்‌ நிச்சயமாக வருவதாயிருந்தார்‌. 213.யோவான்‌ 5:24-ல்‌ உள்ள அந்த நபர்‌ அங்கே நானாக இருந்தால்‌. “என்‌ வசனத்தைக்‌ கேட்டு. என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன்‌ உண்டு. நான்‌ அவனைக்‌ கடைசி நாட்களில்‌ எழுப்புவேன்‌. அவன்‌ ஆக்கினைத்‌ தீர்ப்புக்குட்படாமல்‌ மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்‌.” அதுதான்‌— அதுதான்‌ நாம்‌. மேலும்‌ நாம்‌ எதைக்‌ குறித்துப்‌ பயந்தோம்‌? காரியம்‌ என்ன? 214.நீங்கள்‌ எந்த தரவகையை அணிந்து கொண்டிருந்தாலும்‌ அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது? நீங்கள்‌ உங்களை இந்த ஒரு. அந்த, அல்லது மற்றவை என அழைக்கிறீர்கள்‌. நாம்‌ தேவனுடைய கிருபையினால்‌. தேவனுடைய பிள்ளைகளாய்‌ இருக்கிறோம்‌. நாம்‌ தேவனுடைய கிருபையினால்‌. பரிசுத்த ஆவியினால்‌ நிரப்பப்பட்டிருக்கிறோம்‌. அவர்‌ ஒரு பிரஸ்பிடேரியனாய்‌. மெத்தோடிஸ்ட்டாய்‌. பாப்டிஸ்டாயிருந்தாலும்‌. இந்த ஒன்றுதான்‌ அது அல்லது மற்றது என்பதைக்‌ குறித்து அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? அவர்‌ பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டிருந்தால்‌. அவர்‌ உயிர்த்தெழுதலின்‌ ஜீவனை தனக்குள்‌ கொண்டிருக்கிறார்‌. ஆமென்‌. ஆம்‌. இப்பொழுது. பெந்தேகோஸ்தே நாளிலே... 74215.இயேசு அவர்களிடத்தில்‌. லூக்கா 24:49-ல்‌, “இதோ நான்‌ ஒரு வாக்குத்தத்தத்தை அனுப்புகிறேன்‌” என்றார்‌. “நான்‌ அதை அனுப்பலாம்‌. அதைக்குறித்து என்னால்‌ என்ன செய்ய முடியும்‌ என்று நான்‌ பார்ப்பேன்‌” என்றல்ல. “என்‌ பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை நான்‌ உங்களுக்கு அனுப்புகிறேன்‌. ஆனால்‌ நீங்களோ உன்னதத்திலிருந்து வரும்‌ பெலனால்‌ தரிப்பிக்கப்படும்‌ வரைக்கும்‌ அங்கே எருசலேம்‌ நகரத்துக்குப்‌ போய்‌ காத்திருங்கள்‌.” 216.இப்பொழுது அவர்கள்‌ தொடர்ந்து காத்திருந்தால்‌ என்ன. ஓ. ஆறு நாட்கள்‌. என்கின்றனர்‌. அவர்கள்‌. “நாம்‌ எதற்காக காத்துக்‌ கொண்டிருக்கிறோம்‌? நாம்‌ விசுவாசத்தினால்‌ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்‌ என்று நான்‌ விசுவாசிக்கிறேன்‌. நீங்கள்‌ அவ்வாறு நினைக்கவில்லையா?” என்கின்றனர்‌. 217.யாக்கோபு. ஒன்பதாம்‌ நாளில்‌. “சீமோனே. ஒரு நிமிடம்‌ இங்கே வா. உனக்கு தெரியுமா. அன்றொரு நாள்‌ எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வு இருந்தது. புரிகிறதா? மேலும்‌ நான்‌ எதை விசுவாசிக்கிறேன்‌ என்று உனக்குத்‌ தெரியுமா? நாம்‌ இங்கே காத்திருப்பதை அவர்‌ விரும்பவில்லை என்று நான்‌—நான்‌—நான்‌ நினைக்கிறேன்‌. நாம்‌—நாம்‌ அதை ஏற்கனவே பெற்றுக்கொண்டோம்‌ என்று நான்‌ நினைக்கிறேன்‌. நீ அவ்வாறு நினைக்கவில்லையா? நாம்‌ நம்முடைய ஊழியத்திற்கு செல்வோம்‌. நம்முடைய ஊழியத்தை தொடருவோமே” என்று கூறி இருந்தால்‌ எப்படியிருக்கும்‌? ஓ. அது ஒருபோதும்‌ சம்பவித்திருக்காது. 75218.ஏன்‌? தீர்க்கதரிசி கூறினதை அவர்கள்‌ அறிந்திருந்தனர்‌. இப்பொழுது கவனியுங்கள்‌. தீர்க்கதரிசி. “கற்பனையின்‌ மேல்‌ கற்பனையும்‌. பிரமாணத்தின்‌ மேல்‌ பிரமாணமும்‌. பிரமாணமும்‌: இங்கே கொஞ்சமும்‌ அங்கே கொஞ்சமுமாம்‌ என்கிறார்கள்‌” என்றான்‌. “நலமானதைப்‌ பிடித்துக்‌ கொள்ளுங்கள்‌.” “பரியாச உதடுகளினாலும்‌ அந்நிய பாஷையினாலும்‌ நான்‌ இந்த 'ஜனத்தோடே பேசுவேன்‌. இதுவே இளைப்பாறுதல்‌. ஓய்வு” என்றான்‌. அது வரும்போது ஏதோக்‌ காரியம்‌ சம்பவிக்க வேண்டியதாக இருந்தது என்பதை அவர்கள்‌ அறிந்திருந்தனர்‌. 219.“கடைசி நாளில்‌ நான்‌ என்னுடைய ஆவியை ஊற்றுவேன்‌.” யோவேல்‌ 2:28. “கடைசி நாட்களில்‌ நான்‌ மாம்சமான யாவர்மேலும்‌ என்‌ ஆவியை ஊற்றுவேன்‌ என்று தேவன்‌ உரைக்கிறார்‌. உங்கள்‌ குமாரரும்‌ குமாரத்திகளும்‌ தீர்க்கதரிசனஞ்‌ சொல்லுவார்கள்‌. என்னுடைய ஊழியக்காரிகள்‌ மேலும்‌ ஊழியக்காரர்‌ மேலும்‌ நான்‌ என்னுடைய ஆவியை. அந்நாளிலே ஊற்றுவேன்‌. உயரே வானத்திலே அடையாளங்களையும்‌ மற்றும்‌—மற்றும்‌ தாழ பூமியிலே. இரத்தம்‌. புகையை. மற்றும்‌ நீராவியைக்‌ காட்டுவேன்‌.” 76220.பரிசுத்த பரிசுத்த ஆவியின்‌ வருகையோடு சில அனுபவம்‌ இருக்க வேண்டும்‌ என்பதை அவர்கள்‌ அறிந்திருந்தனர்‌. அவர்கள்‌ விளங்காத சத்தத்தை ஏற்றுக்‌ கொண்டிருக்கவில்லை. ஆனால்‌ ஏதோ காரியம்‌ அசைவதை அவர்கள்‌ உணரந்த போது. அதனோடு வேதாகம அத்தாட்சி அசைவதைக்‌ கண்டபோது. அவர்கள்‌ நிச்சயமற்றவர்களாக இருக்கவில்லை. அவர்கள்‌ தெருக்களுக்கு சென்றனர்‌. என்னை மன்னிக்கவும்‌. ஓ. என்னே! அது பரிசுத்த ஆவியாய்‌ இருந்தது என்று அவர்கள்‌ உறுதியாக இருந்தனர்‌. 221.அவர்கள்‌ எப்படி உறுதியாக இருந்தார்கள்‌ என்று உங்களுக்குத்‌ தெரியுமா? பேதுரு. அந்த எளிய படிப்பறியாத நபர்‌. ஒரு மரத்‌ துண்டின்‌ மேல்‌ அல்லது ஒரு பெட்டியின்‌ மேல்‌. அல்லது எங்கோ குதித்து நின்று. “யூதேயாவின்‌ மனிதரே.” ஒரு சேவலைப் போல மார்பை முன்‌ தள்ளிக்கொண்டு. அவன்‌. “யூதேயாவின்‌ மனிதரே.எருசலேமில்‌ வாசம்பண்ணுகிற ஜனங்களே! சற்று முன்னர்‌: நான்‌ உங்களை குறித்துப்‌ பயமடைந்தேன்‌. ஆனால்‌ நான்‌ இப்பொழுது பயமடையவில்லை, இது உங்களுக்குத்‌ தெரிந்திருப்பதாக. என்‌ வார்த்தைகளுக்கு செவி கொடுங்கள்‌. நீங்கள்‌ நினைக்கிறபடி இவர்கள்‌ வெறி கொண்டவர்களல்ல. ஆனால்‌ இதுவே அதுவாக உள்ளது.” “இதுதான்‌ அது என்று நாம்‌ நம்புகிறோமா”? “இதுதான்‌ அது என்று நாம்‌ விசுவாசிக்கிறோமா”? அவன்‌. “தீர்க்கதரிசியாகிய யோவேலினால்‌ உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது” என்றான்‌. அல்லேலூயா! அதைக்‌ குறித்த நிச்சயமின்மையே இல்லை. “தீர்க்கதரிசியாகிய யோவேலினால்‌ உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.” ஓ. என்னே! 77222.இயேசு. மாற்கு 16-ல்‌. “நீங்கள்‌ உலகமெங்கும்‌ போய்‌ சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்‌” என்று தம்முடைய சபைக்கு. கட்டளையிட்டுக்‌ கூறினார்‌. “இந்த அடையாளங்கள்‌ ஒருவேளை இருக்க வேண்டும்‌: அவைகள்‌ எப்போதாவது ஒருமுறை அநேகமாக இருக்குமா”? “விசுவாசிக்கிறவர்களை அவைகள்‌ பின்தொடரும்‌. விசுவாசிக்கிறவர்களால்‌ நடக்கும்‌ அடையாளங்களாவன. என்‌ நாமத்தினாலே பிசாசுகளைத்‌ துரத்துவார்கள்‌. நவமான பாஷைகளைப்‌ பேசுவார்கள்‌. அவர்கள்‌ சர்ப்பங்களை எடுத்தாலோ அல்லது சாவுக்கேதுவான யாதொன்றைக்‌ குடித்தாலும்‌. அது அவர்களைச்‌ சேதப்படுத்தாது. அவர்கள்‌ தங்களுடைய கரங்களை வியாதியஸ்தர்‌ மேல்‌ வைத்தால்‌. அப்பொழுது அவர்கள்‌ சொஸ்தமாவார்கள்‌.” “சொஸ்தமாகலாம்‌.” என்றல்ல.“அவர்கள்‌ சொஸ்தமாவார்கள்‌. விசுவாசிக்கிறவர்களால்‌ நடக்கும்‌ அடையாளங்களாவன,.” 78223.அடுத்த சில நிமிடங்களில்‌. இதைக்‌ கூறுகையில்‌, சகோதரனே. சகோதரியே. நான்‌ இதை சுருக்கமாக சொல்லட்டும்‌. நான்‌ இதை விசுவாசிக்கிறேன்‌. மற்ற ஒவ்வொரு காரியமும்‌. அதற்கு முரணாக இருக்கிற எந்த காரியமும்‌. சரியானதல்ல என்று நான்‌ விசுவாசிக்கிறேன்‌. அதற்கு எதிராக இருக்கிற ஒவ்வொரு காரியமும்‌ விழுந்துபோகும்‌ என்றே. நான்‌ விசுவாசிக்கிறேன்‌. எத்தனை பொதுவுடைமைக்‌ கொள்கைகள்‌ இருந்தாலும்‌. அல்லது இந்தக்‌ கொள்கைகள்‌ மற்றும்‌ அந்தக்‌ கொள்கை. சபைக்கொள்கை மற்றும்‌ ரோமானியக்‌ கொள்கை. மேலும்‌ மற்ற யாவும்‌. அமெரிக்க கொள்கைகளாயிருந்தாலும்‌ எனக்கு கவலையில்லை. மற்ற ஒவ்வொரு காரியமும்‌ விழுந்துபோகும்‌. 224.ஆனால்‌ அந்த வார்த்தை நித்தியமாக இருக்கும்‌. ஏனென்றால்‌ அது ஒரு வார்த்தையாக இருக்கிறது. மேலும்‌ அது ஒரு வார்த்தையாய்‌ இருந்ததற்கு முன்பே. அது ஒரு சிந்தனையாக இருக்க வேண்டும்‌. வெளிப்படுத்தப்பட்ட ஒரு சிந்தனையே ஒரு வார்த்தையாகும்‌. தேவனுக்கு. நித்தியத்தில்‌, அது அவருடைய சிந்தைக்குள்‌ வருகிறது. அவர்‌ தம்முடைய சிந்தனைகளை வெளிப்படுத்தினார்‌. அது ஒரு வார்த்தையானது. மேலும்‌ அந்த வார்த்தை வெளிப்படுத்தப்பட வேண்டும்‌. 79225.அந்தக்‌ காரணத்தினால்தான்‌. அவர்‌ மேசியாவைக்‌ குறித்து பேசியபோது. ஒரு மேசியா வர வேண்டியதாயிருந்தது. கரைதிரையற்ற ஒரு சபை. கடைசி நாட்களில்‌ இருக்கும்‌ என்று அவர்‌ உரைத்தார்‌: அங்கே ஒரு சபை இருக்கும்‌. அல்லேலூயா! அவர்‌ அதைக்‌ கூறினார்‌. நான்‌ அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்கிறேன்‌. நான்‌ அதை விசுவாசிக்கிறேன்‌. விசுவாசிக்கும்‌ ஒவ்வொரு விசுவாசிக்கும்‌ அவர்‌ பரிசுத்த ஆவியை வாக்குதத்தம்‌ பண்ணினார்‌ என்று நான்‌ விசுவாசிக்கிறேன்‌. பெந்தேகோஸ்தே நாளிலே. பேதுரு அந்த குறிப்பிடத்தக்க பிரசங்கத்தை பிரசங்கித்தபோது. அவர்களில்‌ எல்லாரிடத்திலும்‌ மனந்திரும்பி ஞானஸ்நானம்‌ பெற்றுக்கொள்ளுங்கள்‌. அதாவது இந்த அடையாளங்கள்‌ வரும்‌ என்றும்‌. மற்றும்‌ இதைக்‌ குறித்தும்‌ கூறினார்‌ என்று நான்‌ நினைக்கிறேன்‌. “கர்த்தருடைய நாமத்தைத்‌ தொழுதுகொள்ளுகிற எவனும்‌ இரட்சிக்கப்படுவான்‌.” அது சத்தியம்‌ என்று நான்‌ விசுவாசிக்கிறேன்‌: அதன்பேரில்‌ நான்‌ நின்றேன்‌. அது வெளிப்பட்டதை நான்‌ கண்டிருக்கிறேன்‌. 80227.நான்‌ அதற்கு போராடிக்‌ கொண்டிருக்கிறேன்‌ என்பதை நான்‌ அறிவேன்‌. மேலும்‌ நான்‌ ஒரு அடிச்சுவட்டை உருவாக்க முயற்சித்துக்‌ கொண்டிருக்கிறேன்‌ என்பதை நான்‌ அறிவேன்‌. நான்‌ ஒரு அடிச்சுவட்டை உருவாக்குவதற்கு முன்னே. நான்‌ ஒவ்வொரு சிக்கலையும்‌. தொற்றிச்‌ செல்லும்‌ செடியையும்‌. மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும்‌ வெட்டி. அதை வழியிலிருந்து அகற்றிவிட வேண்டும்‌. ஆனால்‌ ஒவ்வொரு முறையும்‌ நீங்கள்‌ ஒரு அடி எடுத்து வைக்கும்போது. நீங்கள்‌ முன்னேறி சென்று கொண்டிருக்கிறீர்கள்‌. ஆமென்‌. கத்தியை எடுத்து அதை வெட்டிவிடுங்கள்‌. 81228.மிகவும்‌ விலையேறப்பெற்ற நண்பர்‌. பால்‌ ரேடாரை உங்களில்‌ அநேகருக்கு நினைவிருக்கும்‌. அப்பொழுது நான்‌ ஒரு இளம்‌ பிரசங்கியாராய்‌. இளைஞனாயிருந்தேன்‌. நான்‌ வழக்கமாக, அவர்‌ பேசுவதைக்‌ கேட்க. ஃபோர்ட்‌ வெய்னில்‌ உள்ள. ரெடிகர்‌ கூடாரத்துக்குச்‌ செல்வேன்‌. மிகப்‌ பெரிய உருவம்‌ கொண்ட நபர்‌! அவர்‌ பின்னால்‌ சென்று. தன்னுடைய கால்‌ சட்டைகளை மேலே இழுத்துவிட்டு. தன்னுடைய கரத்தை மேலே உயர்த்தி ஒரு கரடியை போல உறுமுவார்‌. மேலும்‌ பிரசங்கப்‌ பீடத்தினூடாக அவர்‌ குதிக்கப்போகிறார்‌ என்று நான்‌ நினைப்பேன்‌. அவர்‌...அவர்‌ ஆதியாகமத்தில்‌ உள்ள ஒரு பாடப்‌ பொருளோடு தொடங்கி. ஆம்‌. வெளிப்படுத்தின விசேஷம்‌ வரை முன்னும்‌ பின்னுமாக முழுவதும்‌ சுற்றி வருவார்‌. பால்‌ ஒரு முழு நிறைவான மனிதனாய்‌ இருந்தார்‌. 229.ஒருநாள்‌ பேசிக்கொண்டிருக்கையில்‌. அவர்‌. “நான்‌ ஓரிகானில்‌ முன்பெல்லாம்‌ ஒரு மரம்‌ வெட்டுபவனாயிருந்தேன்‌” என்றார்‌. அவர்‌ அங்கிருந்து வந்தவர்‌. “ஒருநாள்‌ உங்களுக்குத்‌ தெரியுமா” என்று கூறி. மேலும்‌ அவர்‌. “நான்‌—நான்‌ ஊழியக்‌ களத்தில்‌. எங்கோ தூரத்திலிருந்தேன்‌” என்று கூறினார்‌. அது எங்கே என்று இப்பொழுதும்‌ நான்‌ மறந்துவிட்டேன்‌. அவர்‌ மிஷனரி ஊழியத்தை செய்துகொண்டிருந்தார்‌. 82230.அவர்‌ தேவனில்‌ விசுவாசம்‌ கொண்டிருந்தார்‌. தெய்வீக சுகமளித்தலில்‌ விசுவாசம்‌ கொண்டிருந்தார்‌. மேலும்‌ பால்‌. இங்கே சரியாக இன்றைக்கு உலக சபை நிற்கிற இடத்திலே என்று கூறினார்‌. அவர்‌. “நான்‌ இங்கே உங்களுடைய கூட்டதோரோடு செய்ததை செய்துள்ளதற்கு பதிலாக. நான்‌ என்னுடைய கிருபையின்‌ செய்தியை அசலான பெந்தேகோஸ்தேயினருக்கு விற்றுப்‌ போட்டிருந்தால்‌ நலமாயிருக்கும்‌” என்றார்‌. “மேலும்‌ அது என்னைக்‌ கவலையடையச்‌ செய்தது. இலட்சக்கணக்கான டாலர்கள்‌ கடன்‌ உள்ள ஒரு இடத்துக்கு அழைக்கப்பட்டேன்‌. ஒரு புற்றுநோய்‌ என்னை பிடிக்கும்‌ அளவிற்கு நான்‌ தானே கவலையடைந்து இப்போது மரித்துக்‌ கொண்டிருக்கிறேன்‌. நான்‌ என்னுடைய கிருபையின்‌ செய்தியை அசலான பெந்தேகோஸ்தேயினருக்கு விற்றுப்‌ போட்டிருந்தால்‌. தேவன்‌ அதற்காக என்னை அபரிமிதமாக ஆசீர்வதித்திருந்திருப்பார்‌.” உண்மையே. 231.அவர்‌ அங்கே அந்த—அந்த காடுகளில்‌ இருந்ததாக அவர்‌ கூறினார்‌. மேலும்‌ அவருக்கு வாந்தியும்‌ இரத்தம்‌ கலந்த சிறுநீரோடு கூடிய காய்ச்சல்‌ அல்லது அதைப்போன்றது வந்துவிட்டது. அது பயங்கரமாக இருந்தது. அவர்‌ காடுகளில்‌ தூரமாக இருந்தார்‌. மேலும்‌ தெய்வீக சுகமளித்தலில்‌ ஒரு உறுதியான விசுவாசியாயிருந்தார்‌. அவர்‌ சுகவீனமடைந்து. சுகவீனமடைந்து கொண்டே இருந்ததாகக்‌ கூறினார்‌. அவர்‌ ஜெபித்தார்‌. ஜெபித்துக்கொண்டே இருந்தார்‌. மிஷினரிமார்களில்‌ சிலர்‌ ஒரு படகில்‌ சென்று ஒரு மருத்துவரை அழைத்து வரப்போவதாக இருந்ததைக்‌ கூறினர்‌. ஏன்‌. அவர்கள்‌ ஒரு மருத்துவரை அழைத்து வர சில நாட்கள்‌ ஆகும்‌. மேலும்‌ அவர்‌. “நான்‌—நான்‌...அதை செய்ய வேண்டாம்‌.அப்படியே விட்டுவிடுங்கள்‌” என்றார்‌. மேலும்‌. “தேவன்‌ என்னை சுகப்படுத்தாவிட்டால்‌. அப்பொழுது நான்‌ பரம வீட்டுக்கு வருவேன்‌” என்றார்‌. 232.எனவே அவர்‌ தன்னுடைய மனைவியோடு அறையில்‌ தங்கியிருந்ததாகக்‌ கூறினார்‌. அது இருட்டாகிக்‌ கொண்டே மற்றும்‌ இருட்டாகிக்கொண்டே இருந்ததாம்‌. அவர்‌ தன்னுடைய மனைவியை அழைத்து. “தேனே. என்னுடைய கரத்தைப்‌ பற்றிப்‌ பிடி” என்றாராம்‌. மேலும்‌. “எனக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொண்டேயிரு. இப்பொழுது இருட்டாகிக்‌ கொண்டேயிருக்கிறது.” என்றாராம்‌.தொடர்ந்து “நிழல்கள்‌ என்னைச்‌ சுற்றிலும்‌ விழுந்து கொண்டிருக்கின்றன என்று நான்‌—நான்‌ நினைக்கிறேன்‌” என்றாராம்‌. அவர்‌. “நான்‌ மரிக்கும்போது. என்னுடைய கரத்தைப்‌ பிடித்து... பற்றிப்‌ பிடித்து ஜெபி” என்றாராம்‌. அவர்‌ தாமே. தேவனை சந்திக்கத்‌ துணிந்துவிட்டார்‌. 233.அவர்‌ ஒருவிதமாக ஞானதிருஷ்டி அடைந்தார்‌. அப்போது அவர்‌ மீண்டும்‌ அங்கே ஓரிகானில்‌. ஒரு வாலிப மனிதனாக. மரங்களை வெட்டுவதாக அவர்‌ சொப்பனம்‌ கண்டதாகக்‌ கூறினார்‌. மேலும்‌ அந்த முகாமின்‌ முதலாளி. “பால்‌. மலையின்‌ ஒரு குறிப்பிட்ட பக்கத்தில்‌ இங்கே மேலே போ. குறிப்பிட்ட அளவுள்ள. ஒரு குறிப்பிட்ட மரம்‌ விழுந்து விட்டது” என்று கூறினாராம்‌. 83அவர்‌ தன்னுடைய இளமையான கால்களால்‌ மலையின்‌ மேல்‌ ஓடினதாகக்‌ கூறினார்‌. மேலும்‌ மரத்தை இடித்துத்‌ தள்ளி. அதை வெட்டி. கோடாரியை அதிலேயே குத்தி வைத்தராம்‌. அவருடைய கூர்மையான. பெரிய. இருபுறமும்‌ வெட்டும்‌ கோடாரியானது எவ்வாறு அந்த மிருதுவான பைன்‌. மிக மென்மையான பைன்‌ மரத்துக்குள்‌ பதிந்தது என்று கூறினார்‌. மேலும்‌ அவர்‌ அதைப்‌ பற்றி பிடித்துக்கொண்டு. “சரி. நான்‌ மலைக்கு கீழே இதை சுமந்து செல்வேன்‌” என்று எண்ணினதாகக்‌ கூறினார்‌. 235.நல்ல. வலிமையான மனிதன்‌. மேலும்‌ “என்னுடைய முழங்கால்களை எப்படி ஒன்றாக வைத்து. ஒரு மனிதனின்‌ மிகப்பெரிய பாகமான. என்னுடைய முதுகில்‌ அதை எப்படி தூக்குவது என்று நான்‌ முன்பு பயிற்சி பெற்றிருந்தேன்‌” என்றார்‌. அவருடைய முதுகு மற்றும்‌ தோள்கள்‌. அவருடைய கால்களின்‌ பின்பகுதியிலும்‌ அவரது தசைகள்‌ உறுதியாக இருந்தன. “நான்‌ ஒரு பெரிய மரக்கட்டையை தூக்கி.” அதை தன்னுடைய தோளின்‌ மீது வைத்து நடந்து செல்வேன்‌ என்று கூறினார்‌. ஆனால்‌. “அது ஒரு சாதாரண மரக்கட்டையாக இருந்தது. ஆனாலும்‌” என்று கூறி. “நான்‌ வெறுமன...” என்றார்‌. [சகோதரன்‌ பிரான்ஹாம்‌ ஒலிபெருக்கியை அழுத்துகிறார்‌—ஆசி.] நான்‌ வருந்துகிறேன்‌. “என்னால்‌ அந்தப்‌ மரக்கட்டையை வெறுமனே அசைக்கக்கூட முடியவில்லையே” என்றார்‌. நான்‌ வருந்துகிறேன்‌. 236.அவர்‌. “என்னால்‌ அந்த மரக்கட்டையை வெறுமனே அசைக்கக்கூட முடியவில்லை” என்றார்‌. அவர்‌ தொடர்ந்து “நான்‌ சண்டையிட்டேன்‌. மேலும்‌ நான்‌ சண்டையிட்டேன்‌ மற்றும்‌ நான்‌ அதை எடுக்க முயற்சித்தேன்‌. என்னால்‌ அதை எடுக்க முடியவில்லை” என்றார்‌. அவர்‌. “என்னிடத்தில்‌ இருந்த எல்லா பெலத்தையும்‌ நான்‌ பயன்படுத்தினேன்‌” என்றார்‌. அவர்‌. “என்னால்‌ அந்த மரக்கட்டையை நகர்த்த முடியவில்லை” என்றார்‌. மேலும்‌ அவர்‌. “முடிவிலே. நான்‌ மிகவும்‌ பலவீனமாகிவிட்டேன்‌. எனவே நான்‌ மரத்தின்‌ மீது சாய்ந்தவாறு அமர்ந்து வியர்வையைத்‌ துடைக்க ஆரம்பித்தேன்‌. நான்‌ முற்றிலும்‌ களைப்புற்றுப்‌ போய்விட்டேன்‌”என்றார்‌. 237.மேலும்‌. “சிறிது நேரம்‌ கழித்து. நான்‌ என்னுடைய முதலாளியினுடைய சத்தத்தைக்‌ கேட்டேன்‌” என்றார்‌. ஆனால்‌. “நான்‌ எப்போதும்‌ கேட்டிருந்ததிலேயே இனிமையான சத்தமாக அது இருந்தது” என்றார்‌. மேலும்‌. “நான்‌ சுற்றித்‌ திரும்பினபோது அந்த சத்தம்‌ என்னிடத்தில்‌. ”பால்‌' என்று கூப்பிட்டது“ என்றார்‌. அப்பொழுது நான்‌. ஆம்‌. முதலாளி. இது என்ன?' என்றேன்‌. ”நீ எதற்காக அதை இழுத்துக்‌ கொண்டு இருக்கிறாய்‌?“ என்றார்‌. அவர்‌. '”பாருங்கள்‌. இதை முகாமுக்கு கீழே கொண்டுவரும்படி நீர்‌ எனக்கு கட்டளையிட்டீர்‌. நான்‌ தானே இதனால்‌. சோர்வடைந்து போய்விட்டேன்‌. என்னால்‌—-என்னால்‌ அதைச்‌ செய்ய முடியவில்லை. முதலாளியே' என்றாராம்‌. அப்பொழுது அவரோ. “பால்‌. அந்த நீரோடை அங்கே ஓடுவதை நீ பார்க்கவில்லையா?” என்றாராம்‌. இவரோ. “ஆம்‌' என்றாராம்‌. அதற்கு அவரோ. ”அந்த நீரோடை நேராக கீழே முகாமிற்கு வருகிறது. நீயே ஏன்‌ அதை தண்ணீரில்‌ எறிந்துவிட்டு. அதன்‌ மேல்‌ குதித்து, சவாரி செய்து முகாமிற்கு செல்லக்கூடாது?“ என்றாராம்‌. அதற்கு அவரோ. ”நான்‌ அதைக்‌ குறித்து ஒருபோதும்‌ நினைக்கவேயில்லை'“ என்றாராம்‌. 84238.எனவே அவர்‌ அதை தண்ணீரில்‌ உருட்டித்‌ தள்ளி. அதன்‌ மேல்‌ குதித்து. “ஓ. என்னே!” என்றாராம்‌. அவர்‌ சிற்றலைகளுக்கு மேல்‌ செல்லும்‌ போது. மற்றும்‌ தண்ணீரினூடாக கீழே. தண்ணீர்‌ தெறிக்க. குதிக்க. இந்த மரக்கட்டையின்‌ மீது சவாரி செய்துகொண்டே. ஒவ்வொரு காரியத்தைக்‌ குறித்தும்‌. தன்னுடைய உச்ச குரலில்‌ கூச்சலிடத்‌ தொடங்கி. கீழே போய்க்கொண்டே. “நான்‌ அதன்மேல்‌ சவாரி செய்து கொண்டிருக்கிறேன்‌! அதன்‌ மேல்‌ சவாரி செய்து கொண்டிருக்கிறேன்‌!” என்று கூச்சலிட்டுக்‌ கொண்டிருந்தார்‌. 239.அவர்‌ கூறினார்‌. முதலாவது காரியம்‌ அவர்‌ சுய நினைவையடைந்தபோது. அவர்‌ தரையின்‌ நடுவில்‌ இருந்தாராம்‌. மற்றும்‌ அவருடைய மனைவி அவரோடு சத்தமிட்டுக்‌ கொண்டிருந்தாராம்‌. அவர்‌. “நான்‌. அதன்மேல்‌ சவாரி செய்து கொண்டிருக்கிறேன்‌! நான்‌ அதன்மேல்‌ சவாரி செய்து கொண்டிருக்கிறேன்‌! நான்‌ அதன்மேல்‌ சவாரி செய்து கொண்டிருக்கிறேன்‌!” என்று சத்தமிட்டாராம்‌. சகோதரர்களே! தேசங்கள்‌ உடைந்து கொண்டிருக்கின்றன.இஸ்ரவேல்‌ விழித்தெழுகிறாள்‌. வேதாகமம்‌ முன்னுரைத்த அடையாளங்கள்‌: புற ஜாதியாரின்‌ நாட்கள்‌ எண்ணப்பட்டு. பயங்களால்‌ சூழப்பட்டுள்ளன.“ஓ. சிதறப்பட்டரே. உங்களுடைய சொந்த இடத்துக்கு. திரும்புங்கள்‌.” 85240.தேவனுடைய வார்த்தையின்‌ இந்த செய்தி சத்தியமாய்‌ இருக்கிறது. ஜீவித்தாலும்‌ அல்லது மரித்தாலும்‌. நான்‌ அதன்மேல்‌ சவாரி செய்து கொண்டிருக்கிறேன்‌. நான்‌...நான்‌ அதனோடு சண்டையிட்டுக்‌ கொண்டிருக்கவில்லை. நான்‌ அதைக்குறித்து சண்டையிட முயற்சித்துக்‌ கொண்டிருக்கவில்லை. நான்‌ அதை அப்படியே எடுத்துக்கொண்டு. நான்‌ அதன்மேல்‌ சவாரி செய்து கொண்டிருக்கிறேன்‌. விமர்சகர்கள்‌ எழும்பட்டும்‌. நான்‌ ஒவ்வொரு நீரோடை சுழலையும்‌ பாய்ந்து செல்வேன்‌. இந்நாட்களில்‌ ஒன்றில்‌. தேவனுடைய வார்த்தையின்‌ மேல்‌ சவாரி செய்து. நான்‌ முகாமிற்கு வந்துகொண்டிருக்கிறேன்‌. ஆமென்‌. நான்‌ அங்கே சென்றடைய நிச்சயமுடையவனாய்‌ இருக்கிறேன்‌. நாம்‌ ஜெபம்‌ செய்வோமாக. 86241.நீங்கள்‌ உங்களுடைய பாவ சுமையோடு அலைய விரும்புகிறீர்களா? நீங்கள்‌ இந்த நிலைமையிலிருந்து. நீங்கள்‌ எங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்‌ என்பதை அறியாதிருந்து. ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஏன்‌ ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்‌? நீங்களே ஏன்‌ அதைத்‌ துடைத்தெறிந்துவிட்டு. சிலுவையின்‌ மேல்‌. இன்றிரவு. வார்த்தையின்‌ மேல்‌ சவாரி செய்யக்கூடாது? நீங்கள்‌ ஏன்‌ இன்றிரவு தேவனுடைய வாக்குதத்தத்தத்தை ஏற்றுக்கொண்டு. குழப்பத்திலிருந்து வெளியேறி பெரிய நீலநிற. அந்தவிதமாக பரந்த ஆகாயத்தினூடாக சவாரி செய்யக்‌ கூடாது? அதனோடு சண்டையிட வேண்டாம்‌. அதைக்‌ குறித்துக்‌ கவலைப்பட வேண்டாம்‌. அதை அப்படியே விசுவாசித்து அதை ஏற்றுக்‌ கொள்ளுங்கள்‌. இது ஒரு அசைக்கப்பட முடியாத இராஜ்ஜியமாய்‌ இருக்கிறது. அதன்‌ மேல்‌ சவாரி செய்யுங்கள்‌. 242.இன்றிரவு நீங்கள்‌ சுகவீனமாயிருந்தால்‌. உன்‌ நோய்களையெல்லாம்‌ குணமாக்குகிற கர்த்தர்‌ நானே“ என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்‌. “சகோதரன்‌ பிரான்ஹாமே. நான்‌ எப்படி குணமடையப்‌ போகிறேன்‌? எனக்கு இருதய கோளாறு உள்ளது. எனக்கு புற்றுநோய்‌ உள்ளது என்று மருத்துவர்‌ கூறுகிறார்‌. எனக்கு இது, அது, எதுவாக இருந்தாலும்‌ சரி. நான்‌ செவிடாய்‌. ஊமையாய்‌ இருக்கிறேன்‌. நான்‌ குருடாயிருக்கிறேன்‌.” என்ன. அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? அப்படியே தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொண்டு. அதன்‌ மேல்‌ சவாரி செய்யுங்கள்‌. 244.நாம்‌ ஒரு மிகப்‌ பெரிய கோலை எடுத்து. அதை இங்கே கீழே நட்டு வைத்து. அதனுடைய உச்சியின்‌ மேல்‌ எழுதுவோமாக. “விசுவாசமுள்ள ஜெபம்‌ இன்றிரவு ஜெபிக்கப்பட்டுள்ளது: நான்‌ அதன்‌ மேல்‌ சவாரி செய்யப்‌ போகிறேன்‌. வேதம்‌. ”விசுவாசமுள்ள ஜெபம்‌ பிணியாளியை இரட்சிக்கும்‌. தேவன்‌ அவனை எழுப்புவார்‌. அவன்‌ பாவம்‌ செய்திருந்தாலும்‌. அது அவனுக்கு மன்னிக்கப்படும்‌' என்று கூறியுள்ளது. நான்‌ அதன்மேல்‌ சவாரி செய்து கொண்டிருக்கிறேன்‌. நான்‌ அதை விசுவாசிக்கிறேன்‌.“ 87245.நீங்கள்‌ தவறு செய்திருந்தால்‌. நீங்கள்‌ இன்றிரவு வழிதவறியிருந்தால்‌ “தன்‌ பாவத்தை மறைக்கிறவன்‌ வாழ்வடையமாட்டான்‌. ஆனால்‌ தன்‌ பாவத்தை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம்‌ பெறுவான்‌.” ஏன்‌ அதை அறிக்கை செய்யக்கூடாது? “பாருங்கள்‌. சகோதரன்‌ பிரான்ஹாம்‌. நான்‌ என்ன செய்ய வேண்டும்?” 246.அதை அறிக்கை செய்யுங்கள்‌. அதன்பின்னர்‌ அதன்‌ மேல்‌ சவாரி செய்யுங்கள்‌, தேவன்‌ அவ்வண்ணமாய்க்‌ கூறினார்‌. அது உங்களுடைய பாவத்திலிருந்து உங்களைக்‌ கொண்டு செல்லும்‌. 247.அந்த நபர்‌ இன்றிரவு இங்கே இருக்கிறாரா. உங்களுடைய ஆத்தும இரட்சிப்பிற்காக தங்களுடைய உண்மையான நம்பிக்கையை தேவனில்‌ ஒருபோதும்‌ வைக்காதிருந்தால்‌. நாம்‌ முடிக்கையில்‌ நீங்கள்‌ ஜெபத்தில்‌ நினைவுகூரப்பட வேண்டும்‌ என்று விரும்புகிறீர்களா? நீங்கள்‌ உங்களுடைய கரத்தை உயர்த்தி “சகோதரன்‌ பிரான்ஹாம்‌. எனக்காக ஜெபியுங்கள்‌. நான்‌ என்னுடைய கவலைகளை எறிந்து விட விரும்புகிறேன்‌” என்று கூறுங்கள்‌. தேவன்‌ உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன்‌ உங்களை ஆசீர்வதிப்பாராக. “நான்‌ எறிந்துவிட...விரும்புகிறேன்‌.” பெண்மணியே. தேவன்‌ உங்களை ஆசீர்வதிப்பாராக. “நான்‌ என்னுடைய கவலைகளை எறிந்துவிட விரும்புகிறேன்‌.” சகோதரனே. தேவன்‌ உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. அங்கே பின்னாலுள்ள உம்மை தேவன்‌ ஆசீர்வதிப்பாராக. வாலிபப்‌ பெண்மணியே. தேவன்‌ உம்மை ஆசீர்வதிப்பாராக. சரி. அது சரி. தேவன்‌ உம்மை ஆசீர்வதிப்பாராக. “நான்‌ என்னுடைய கவலைகளை அவர்‌ மேல்‌ வைத்துவிட்டு இப்பொழுது அவருடைய வாக்குத்தத்தத்தின்‌ மேல்‌ சவாரி செய்ய விரும்புகிறேன்‌. ”என்னிடத்தில்‌ வருகிறவனை நான்‌ புறம்பே தள்ளுவதில்லை'“ என்று அவர்‌ வாக்களித்தார்‌ என்று நான்‌ விசுவாசிக்கிறேன்‌. 88248.“நான்‌ எப்படி உணர்கிறேன்‌ என்பது அல்ல. ”சகோதரன்‌ பிரான்ஹாம்‌. கடந்த இரவு எனக்கு ஜெபிக்கப்பட்டது: நான்‌ நலமாக உணரவில்லை.“ அதற்கு இதனோடு எந்த ஒரு சம்பந்தமுமில்லை. நான்‌ என்னுடைய உணர்வுகளின்‌ மேல்‌ சவாரி செய்து கொண்டிருக்கவில்லை. நான்‌ அவருடைய வார்த்தையின்‌ மேல்‌ சவாரி செய்து கொண்டிருக்கிறேன்‌. அது அவருடைய வாக்குத்தத்தமாய்‌ இருக்கிறது. 249.“சகோதரன்‌ பிரான்ஹாம்‌. நான்‌ பரிசுத்த ஆவியைப்‌ பெற்றுக்கொள்ள முயற்சித்து. நான்கு அல்லது ஐந்து முறைகள்‌ பீடத்தண்டைச்‌ சென்று வந்திருக்கிறேன்‌. நான்‌ அதை ஒருபோதும்‌ பெற்றுக்‌ கொள்ளவேயில்லை.” 250.அது ஒரு காரியத்தையும்‌ பொருட்படுத்துகிறதில்லை. அப்படியே அந்த மரக்கட்டையின்‌ மீது தரித்திருங்கள்‌. அது உங்களை நேராக அந்த முகாமிற்கு. முதற்பேறானவர்களின்‌ முகாமிற்கு. பரிசுத்தவான்‌௧களின்‌ முகாமிற்கு கொண்டு வரும்‌. நீங்கள்‌ அங்கே வந்து சேருவீர்கள்‌. உங்களுடைய மரக்கட்டையின்‌ மேல்‌ அப்படியே தரித்திருந்தது. உங்களால்‌ முடிந்தளவு சத்தமிட்டு தேவனுடைய துதிகளை ஆரவாரமிடுங்கள்‌. அதுவே அதை செய்வதற்கான வழியாய்‌ உள்ளது. 251.நாம்‌ நம்முடைய தலைகளை வணங்கியவாறு இருக்கையில்‌. நீங்கள்‌. உண்மையாகவே அதன்‌ மேல்‌ சவாரி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால்‌, உங்களுடைய இருதயத்திலே உணர்த்திடும்‌ அந்த சிறிய காரியம்‌. நீங்கள்‌ இங்கு வந்து பீடத்துக்கு முன்னால்‌ ஒரு நிமிடம்‌ நிற்க. நாம்‌ ஜெபித்து உங்கள்‌ மீது கரங்களை வைக்க நீங்கள்‌ விரும்புகிறீர்களா? நங்கள்‌ வருவதற்காக நாங்கள்‌ மகிழ்ச்சியடைவோம்‌. 252.இன்றிரவு உங்களுடைய இருதயத்தை சுற்றியிருக்கிற அந்த ஒரு சிறு காரியத்தை நாம்‌ ஏற்றுக்கொண்டு. “நீங்கள்‌ தவறாக இருக்கிறீர்கள்‌ என்பதை. நீங்கள்‌ அறிவீர்கள்‌. இப்பொழுது உங்களுடைய கரத்தை உயர்த்திக்‌” கூறுங்கள்‌. சரி. 89253.அந்த மரத்தில்‌. வெட்டப்பட்ட சிலுவையில்‌: நீங்கள்‌ அந்த மரத்தின்‌ மேல்‌. அவருடைய வாக்குத்தத்தத்தின்‌ மரத்தின்‌ மேல்‌ அடி எடுத்து வைத்தீர்கள்‌. உங்களுடைய கரங்களை இப்பொழுது இந்த சிலுவையை சுற்றிப்‌ போட்டுக்கொள்ளுங்கள்‌. இங்கே நடந்து வந்து “இப்பொழுது நான்‌ அதன்‌ மேல்‌ சவாரி செய்துகொண்டிருக்கிறேன்‌. நான்‌ இப்பொழுதே அதை விசுவாசிக்கப்‌ போகிறேன்‌. நான்‌ அதை ஏற்றுக்கொள்ளப்‌ போகிறேன்‌. நான்‌ அதை விசுவாசிக்கிறேன்‌. நான்‌ ஒருபோதும்‌ மாறவேமாட்டேன்‌. அந்த ஒன்று உறுதிப்படும்‌ வரை. நான்‌ அந்த வார்த்தையோடு தரித்திருக்கப்போகிறேன்‌. அதன் பின்னரே அந்த ஒன்று ஒஉறுதிப்படுத்தப்படுகிறது. நான்‌ வலப்புறமாகச்‌ சென்று மற்றொன்றில்‌ ஏறி. சவாரி செய்யப்‌ தொடங்கப்போகிறேன்‌” என்று கூறுங்கள்‌. புரிகிறதா? 254.வார்த்தைக்கு வார்த்தை. படிப்படியாக. தேவன்‌ உங்களுக்கு வாக்களித்த ஒவ்வொரு காரியத்தையும்‌ நீங்கள்‌ சுதந்தரித்துக்‌ கொள்வீர்கள்‌. அதன்மேல்‌ சவாரி செய்பவனுக்கு. “யாவும்‌ கைகூடும்‌.” அவருடைய வாக்குத்தத்தத்தின்‌ மேல்‌ சவாரி செய்யுங்கள்‌. ஏனென்றால்‌ அது உங்களை முகாமிற்கு கொண்டு வருவது நிச்சயம்‌. அது உங்களை தேவனுடைய சமூகத்திற்கு கொண்டுவரும்‌. 255.நாம்‌ நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில்‌ இப்பொழுது நீங்கள்‌ வருவீர்களா? ஒரு நிமிடம்‌ பீடத்தண்டை ஜெபத்திற்காக நிற்க விரும்பும்‌ எவருக்காகவும்‌ வேண்டிக்கொள்ளுங்கள்‌. 256.“கர்த்தாவே நான்‌ அதன்மேல்‌ சவாரி செய்து கொண்டிருக்கிறேன்‌. கர்த்தாவே. நான்‌ விசுவாசிக்கிறேன்‌. என்னுடைய எல்லா சந்தேகங்களும்‌ ஊற்றில்‌ அடக்கம்பண்ணப்பட்டன. கர்த்தாவே நான்‌ வந்து கொண்டிருக்கிறேன்‌. நான்‌ அதை விசுவாசிக்கிறேன்‌. நான்‌ சரியாக வார்த்தையின்‌ மேல்‌ இன்றிரவு அடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன்‌. மேலும்‌ நான்‌ அதை என்னுடைய முழு இதயத்தோடு விசுவாசிக்கப்போகிறேன்‌. நான்‌ உம்முடைய வார்த்தையில்‌ உம்மை ஏற்றுக்‌ கொண்டிருக்கிறேன்‌.” 90257.ஒரு விலையேறப்பெற்ற ஸ்தீரி உறுதியாக தீர்மானங்கொண்டிருப்பதை ரூபகாரப்படுத்த அவள்‌ இங்கே பீடத்தண்டை நிற்கிறாள்‌. உங்களுடைய தலைகள்‌ வணங்கியிருப்பதோடு. உங்களுடைய கரங்கள்‌ உயர்த்தப்பட்டிருக்க. ஜெபத்தில்‌ நினைவுகூரப்பட வேண்டும்‌ என்று விரும்பின. நீங்கள்‌ வர மாட்டீர்களா? நீங்கள்‌ இங்கே நடந்து வருவீர்களா? தேவன்‌ உங்களை ஆசீர்வதிப்பாராக. அப்படியே மேலே வாருங்கள்‌. அதுதான்‌. மேலே வந்து இங்கே நில்லுங்கள்‌. “நான்‌ அதன்‌ மேல்‌ சவாரி செய்யப்போகிறேன்‌. தேவனே. நீர்‌ வாக்குத்தத்தத்தை அளித்தீர்‌. ஏதோ ஒன்று என்‌ இருதயத்தைத்‌ தட்டினது. நான்‌ அதன்மேல்‌ சவாரி செய்ய இப்பொழுதே வந்து கொண்டிருக்கிறேன்‌. அது என்னை முகாமிற்கு கொண்டு வரும்‌ வரையில்‌ நான்‌ அதன்பேரில்‌ தரித்திருக்கப்‌ போகிறேன்‌. நான்‌ உன்னதமானவரின்‌ பரிசுத்தவான்௧ளின்‌ முகாமிற்கு வந்துகொண்டிருக்கிறேன்‌” என்று கூறுங்கள்‌. தேவன்‌ உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. அதன்‌ மேல்‌ சவாரி செய்ய விரும்புகிற நீங்கள்‌. இப்பொழுதே வாருங்கள்‌. அப்படியே நீங்கள்‌ இருக்கிற விதமாகவே. “எந்த ஒரு வேண்டுகோளும்‌ இல்லாமல்‌. நான்‌ அப்படியே இருக்கிற விதமாக இருக்கிறேன்‌.” 258.நினைவிருக்கட்டும்‌. நீங்களோ. “அது ஒரு மரமா?” என்று கேட்கலாம்‌. ஆம்‌. ஒருமுறை ஒரு மரம்‌ வெட்டப்பட்டு. அது மீண்டும்‌ கல்வாரியில்‌ மீட்டமைக்கப்பட்டது. தேவனுடைய வாக்குத்தத்தங்களோடும்‌. அந்த மரத்தில்‌ தொங்கிக்கொண்டிருந்த வார்த்தையோடும்‌. இன்றிரவு அந்த மரத்தின்‌ மேல்‌ குதியுங்கள்‌. 91259.நான்‌ அதன்மேல்‌ சவாரி செய்து கொண்டிருக்கிறேன்‌. என்‌ முழு இருதயத்தோடு. நான்‌ அதை விசுவாசிக்கப்போகிறேன்‌. நான்‌ முடிந்தளவிற்கு இங்கு வந்து என்னுடைய சகோதரர்களின்‌ கரங்களைக்‌ குலுக்க விரும்புகிறேன்‌. 260.உங்களுடைய தீரமான நிலைபாட்டிற்காக தேவன்‌ உங்களை ஆசீர்வதிப்பாராக. நாங்கள்‌ ஜெபிக்கையில்‌, ஒரு நிமிடம்‌ நீங்கள்‌ இங்கே நிற்க வேண்டும்‌ என்று நான்‌ விரும்புகிறேன்‌. என்‌ சகோதரனே. தேவன்‌ உங்களை ஆசீர்வதிப்பாராக. என்‌ விலையேறப்பெற்ற சகோதரியே. தேவன்‌ உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசு...?...என்‌ சகோதரனே. தேவன்‌ உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே. தேவன்‌ உங்களை ஆசீர்வதிப்பாராக. “என்னை வழிநடத்தும்‌.” ஆற்றின்‌ மேல்‌ உங்களை வழிநடத்துவார்‌. 261.கிறிஸ்துவின்‌ ஒரு ஊழியக்காரன்‌ என்ற முறையில்‌. வார்த்தையின்‌ பிரசங்கத்திற்காக நான்‌ உத்தரவாதமுள்ளவனாக இருக்கிறேன்‌ என்பது. நினைவிருக்கட்டும்‌. என்னுடைய சாட்சிக்கு நான்‌ உத்தரவாதமுள்ளவனாக இருக்கிறேன்‌. மேலும்‌ நான்‌ இன்றிரவு இங்கே நிற்க... 92262.ஐம்பத்தைந்து வயதுடைய ஒரு மனிதன்‌. இல்லை ஐம்பத்தி மூன்று வயது. ஏப்ரலில்‌ ஐம்பத்து நான்கு வயது. இங்கே நின்று இந்தக்‌ கடைசி தரிசனமும்‌ கூட. அது பூமியின்‌ மேல்‌ என்னுடைய கடைசி சில நாட்களாக இருக்கலாம்‌ என்பதை நான்‌ அறிவேன்‌. நான்‌—நான்‌ இன்னும்‌ ஒரு சில நாட்களில்‌ உங்களை விட்டுப்‌ போய்விடலாம்‌. அதனுடைய அர்த்தம்‌ என்னவென்று எனக்குத்‌ தெரியவில்லை. ஒலி நாடாவைக்‌ கேட்டு உங்களுடைய சொந்த முடிவுக்கு வாருங்கள்‌. அது எதைப்‌ பொருட்படுத்துகிறது என்பது எனக்குத்‌ தெரியவில்லை. பீனிக்ஸில்‌ இங்கே. இது நான்‌ பிரசங்கித்துக்‌ கொண்டிருக்கும்‌ என்னுடைய கடைசி செய்திகளாக இருக்கலாம்‌ என்று. அரைவழியாக விசுவாசித்து. மேலும்‌ தவறாயிருந்த ஏதோ ஒரு காரியத்தைக்‌ கூறி. என்னுடைய பயண இலக்கு அப்பால்‌ உள்ளது என்றும்‌. நான்‌ என்னுடைய வார்த்தைகளினால்‌ நியாயந்தீர்க்கப்படுவேன்‌ என்றும்‌ அறிந்து. நான்‌ இங்கே நிற்க விரும்புவேனா? 263.என்‌ சகோதரரே. என்‌ சகோதரிகளே. நான்‌ இதை உங்களுக்குக்‌ கூறட்டும்‌. நீங்கள்‌ கூட்டங்களில்‌ இருந்திருக்கிறீர்கள்‌. பகுத்தறிதல்‌ மற்றுமுள்ள காரியங்கள்‌. என்னவென்று உங்களுக்குத்‌ தெரியும்‌. கர்த்தருடைய நாமத்தில்‌ நான்‌ உங்களிடத்தில்‌ எப்போதாவது கூறியிருக்கிற காரியம்‌. நிறைவேறாமல்‌ இருந்திருக்கிறதா? நான்‌ எவரையும்‌ கேட்பேன்‌. அப்படியில்லை. ஐயா. உலகம்‌ முழுவதும்‌. ஆயிரக்கணக்கான தரிசனங்கள்‌. ஒருபோதும்‌ நிறைவேறாமல்‌ இருந்ததில்லை. மேலும்‌ இன்றிரவு நான்‌ உங்களுக்கு உண்மையைச்‌சொல்லுகிறேன்‌. இயேசு கிறிஸ்துவின்‌ இரத்தம்‌ ஒவ்வொரு கறையையும்‌ துடைப்பதற்கு போதுமானதாய்‌ இருக்கிறது. மேலும்‌ அது அவ்வாறே இருக்கும்‌. இரத்தத்தால்‌ நிரப்பப்பட்ட ஒரு ஊற்று உண்டு. நீங்கள்‌ அதிலே இப்போது நின்று கொண்டிருக்கிறீர்கள்‌. இம்மானுவேலின்‌ நரம்புகளிலிருந்து எடுக்கப்பட்டது பூமியின்‌ மேல்‌ விடப்பட்டுள்ள நிச்சயமான ஒரே காரியம்‌. அங்கே பாவிகள்‌ அந்த வெள்ளத்தில்‌ மூழ்கி தங்களுடைய எல்லாப்‌ பாவக்‌ கறைகளையும்‌ போக்குகின்றனர்‌. 93264.நான்‌ இப்பொழுது இந்த ஊழியக்காரர்களை. சகோதரர்களை. நீங்கள்‌ இங்கிருந்து ஜனங்களுக்கு மத்தியிலேயே நடந்து செல்வீர்களா என்று கேட்கப்‌ போகிறேன்‌. யாராவது எப்போதாவது... அந்த விதமாக, நீங்கள்‌ ஜனங்களோடு ஜெபிக்கும்படி ஊழியர்களை அழைக்கிறீர்களா? அப்படியானால்‌, ஆத்துமாக்கள்‌ இரட்சிக்கப்படுவதைக்‌ காண்பதில்‌ ஆர்வம் கொண்டுள்ள. அதை விரும்புகிற இங்குள்ள ஊழியக்காரர்‌ யாவரும்‌. இங்கு வந்து ஒரு ஜெப குழுவாக நிற்கவும்‌. நாம்‌ அங்கே நம்மை ஒன்றாக இணைத்து. மற்ற ஒவ்வொரு காரியத்திலிருந்தும்‌ விலகி. நம்மை பிரித்துக் கொள்ள முடியும்‌. இயேசு கிறிஸ்துவின்‌ இரத்தத்தினால்‌. இன்றிரவு, தங்கசுடைய பயண இலக்கை முத்தரித்துக்‌ கொண்டிருக்கிற புருஷரும்‌ ஸ்திரீ்களுமான இவர்கள்‌. அவருடைய வார்த்தையின்படி அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய வார்த்தையின்‌ மேல்‌. அவருடைய பிரசன்னத்திற்குள்‌ சவாரி செய்து “கர்த்தாவே. இதோ நான்‌ இருக்கிறேன்‌. என்னிடத்தில்‌ என்னைத் தவிர அளிப்பதற்கு வேறொன்றுமில்லை. என்னை ஏற்றுக்கொள்ளும்‌”என்று கூறுகிறார்கள்‌. நீங்கள்‌ விரும்பினால்‌. நீங்கள்‌ வந்து அவர்களோடு நிற்பீர்களா? வர விரும்புகிற எவரும்‌. வந்து நில்லுங்கள்‌. என்‌ சகோதரரே. தேவன்‌ உங்களை ஆசீர்வதிப்பாராக. அது மிகவும்‌ அருமையாக இருக்கிறது. ஆத்துமாக்களில்‌ ஆர்வம்‌ கொண்டு. தீரமுள்ளவர்களாயிருக்கிற புருஷர்களை நான்‌ காண விரும்புகிறேன்‌. என்‌ சகோதரரே. அது அருமையாக இருக்கிறது என்று. நாம்‌ யூகிக்கிறேன்‌. வலப்புறமாக சுற்றி வாருங்கள்‌. அது நல்லது. சுற்றி நில்லுங்கள்‌. நாம்‌ இப்பொழுது... 94265.இசைப்‌ பேழையை இசைப்பவர்‌ இசையை இசைப்பாரனால்‌. அவள்‌ இசைத்தால்‌. நாம்‌ இந்தப்‌ பாட்டை இப்பொழுது இனிமையாக. நல்லமைதியோடு. பயபக்தியுடன்‌ பாடுவோமாக. 266.நாம்‌ ஏதோ ஒரு கற்பனையான காரியத்துக்கு வரவில்லை. நாம்‌ ஏதோ ஒரு—ஒரு—ஒரு பாவனை விசுவாசத்துக்கு வரவில்லை. ஆனால்‌ நாம்‌ தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக. சர்வ வல்லமையுள்ள யெகோவா தேவனின்‌ பிரசன்னத்திற்குள்ளாக வந்து கொண்டிருக்கிறோம்‌. “இரண்டுபேராவது மூன்று பேராவது என்‌ நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ. அங்கே அவர்கள்‌ நடுவிலே இருக்கிறேன்‌” என்று வாக்களித்தவர்‌. நீங்கள்‌ உங்களுடைய நண்பரைப்‌ போலவே அவரிடத்தில்‌ பேசுங்கள்‌. “கர்த்தாவே. நான்‌ வருந்துகிறேன்‌. நான்‌ பாவம்‌ செய்திருக்கிறேன்‌” என்று கூறுங்கள்‌. மேலும்‌ நாம்‌ பாடப்போகிறோம்‌. இரத்தத்தால்‌ நிரப்பப்பட்ட ஒரு ஊற்று உண்டு இம்மானுவேலினுடைய நரம்புகளிலிருந்து எடுக்கப்பட்டது பாவிகள்‌ அந்த வெள்ளத்தில்‌ அங்கேயே மூழ்கி தங்களுடைய எல்லாப்‌ பாவக்‌ கறையையும்‌ போக்குகின்றனர்‌. அந்த மரித்துக்கொண்டிருந்த கள்ளன்‌ அவனுடைய நாளில்‌ அந்த ஊற்றைக்‌ கண்டு களிகூர்ந்தான்‌: நான்‌. அவனைப்போன்ற இழிவானவனாக இருந்தாலும்‌ . . . என்னுடைய எல்லா பாவங்களையும்‌ கழுவுகிறேன்‌. உம்முடைய காயங்களிலிருந்து ஓடும்‌ அந்த ஓடையை விசுவாசத்தினால்‌ நான்‌ கண்டது முதற்கொண்டு மீட்பின்‌ அன்பே என்னுடைய கருப்பொருளாய்‌ இருந்து வருகிறது நான்‌ மரிக்கும்‌ வரை அவ்வாறே இருக்கும்‌. 267.இப்பொழுது உண்மையாகவே எளிமையாயிருங்கள்‌. நீங்கள்‌ ஒன்றுமில்லை. நம்மில்‌ யாருமே ஒன்றுமில்லை. இப்பொழுது அப்படியே உத்தமமாக. உங்களுடைய முழு இருதயத்தோடு. கட்டிட முழுவதிலும்‌. எங்கும்‌. உங்களுடைய இருதயங்களையும்‌ மற்றும்‌ தலைகளையும்‌ அப்படியே வணங்குங்கள்‌. 95268.எங்களுடைய பரலோகப்‌ பிதாவே. உம்முடைய வார்த்தைகள்‌ அவ்வளவு உண்மையானவை என்பதை நான்‌ அறிந்திருக்கிறேன்‌. அவைகள்‌ தவறிப்போக முடியாது. அவைகள்‌ தேவனுடைய வார்த்தையாயிருக்கின்றன. _ அவைகள்‌ தேவனாயிருக்கின்றன. மேலும்‌ நீர்‌ “என்னிடத்தில்‌ வருகிறவனை. நான்‌ புறம்பே தள்ளுவதில்லை” என்று கூறினீர்‌. இந்த புருஷரும்‌ ஸ்திரீகளும்‌ நம்பிக்கையோடு. அவர்கள்‌ சரியில்லை என்பதை அறிந்து அவர்கள்‌ தவறாக இருக்கிறார்கள்‌ என்பதை அறிக்கையிட. கர்த்தாவே. இன்றிரவு அவர்கள்‌ முன்னோக்கி நடந்து வந்துள்ளனர்‌. அவர்கள்‌ ஊற்றண்டை வர வேண்டும்‌ என்று கூறின அந்த—அந்த ஏதோவொரு உள்ளார்ந்த அசைவினால்‌ துடிக்கப்பட்டனர்‌ என்பதை அறிந்திருக்கிறார்கள்‌. தேவனால்‌ வாக்களிக்கப்பட்டிருக்கிற ஜீவத்‌ தண்ணீரை. இலவசமாக பருகுவதற்கு. தலைகளும்‌ இதயங்களும்‌ வணங்கியிருப்பதோடு இங்கே அவர்கள்‌ நிற்கிறார்கள்‌. பிதாவே உம்முடைய இராஜ்ஜியத்திற்குள்ளாக அவர்களை ஏற்றுக்கொள்ளும்‌. அவர்கள்‌ உம்முடையவர்களாய்‌ இருக்கிறார்கள்‌. 269.நீர்‌, “என்‌ பிதா ஒருவனை முதலில்‌ இழுத்துக்கொள்ளாவிட்டால்‌ அவன்‌ என்னிடத்தில்‌ வரமாட்டான்‌. பிதாவானவர்‌ எனக்குக்‌ கொடுக்கிற யாவும்‌ என்னிடத்தில்‌ வரும்‌” என்று கூறினீர்‌. தேவன்‌ இவர்களை கிறிஸ்துவுக்கு. ஒரு அன்பின்‌ வெகுமதியாக அளித்துள்ளார்‌ என்பதையே அது காண்பிக்கிறது. கர்த்தாவே இதோ அவர்கள்‌ நிற்கிறார்கள்‌. “ ”ஒருவனும்‌ : அவர்களை என்னுடைய கரத்திலிருந்து பறித்துக்கொள்ள முடியாது.“ தேவனே. நீர்‌ இன்றிரவு அவர்களை பாதுகாத்து, அவர்கள்‌ இங்கே நிற்கும்போதே. அவர்கள்‌ இங்கே பீடத்தண்டை இருக்கையிலே. பரிசுத்த ஆவியின்‌ அபிஷேகத்தை அவர்களுக்கு தாரும்‌ என்று. நான்‌ ஜெபிக்கிறேன்‌. 270.கிறிஸ்துவின்‌ மகத்தான வல்லமை இப்பொழுதே அவர்களுடைய ஜீவியங்களை அவ்வளவாய்‌ நிரப்புவதாக! அவர்கள்‌ தங்களுடைய அறிக்கையை செய்துவிட்டனர்‌. அவர்கள்‌ முன்னோக்கி வந்துள்ளனர்‌. நீர்‌. “மனுஷர்‌ முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன்‌ எவனோ. அவனை நானும்‌ என்‌ பிதாவுக்கு முன்பாகவும்‌ பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும்‌அறிக்கைபண்ணுவேன்‌” என்று கூறினீர்‌. அந்த வேலை முடிந்துவிட்டது என்பதை நாங்கள்‌ அறிவோம்‌. 96271.இப்பொழுதும்‌ கர்த்தாவே பரிசுத்த ஆவியினால்‌. வாக்குத்தத்தத்தின்‌ இராஜ்ஜியத்திற்குள்ளாக அவர்களை முத்திரையிடும்‌. கர்த்தாவே. இதை அருளும்‌. உம்முடைய ஆவியை அவர்கள்‌ மேல்‌ ஊற்றும்‌. அவர்களுடைய ஜீவிய நாட்களெல்லாம்‌ தேவனுடைய இராஜ்யத்திற்கு. ஜீவனுள்ள சாட்சிகளாக அவர்கள்‌ இருக்கும்படி. ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினால்‌ அவர்களை நிரப்பும்‌. 272.இப்பொழுது கூட்டத்தார்‌ எழும்பி நிற்கட்டும்‌. இப்பொழுது ஒவ்வொருவரும்‌ ஜெபத்தில்‌ இருங்கள்‌. நாம்‌ இவர்களுக்காக... ஜெபிக்கப்‌ போகிறோம்‌. 273.இப்பொழுது. நீங்கள்‌ உங்களுடைய இருதயத்தில்‌ பாவத்தை உடையவர்களாக இருப்பதை உணர்ந்து. இன்றிரவு இங்கே வருகிற நீங்கள்‌ ஒவ்வொருவரும்‌. இப்பொழுது நீங்கள்‌ அதை விசுவாசிப்பதைத்‌ தவிர வேறொன்றும்‌ செய்ய முடியாது. பரிசுத்த...நீங்கள்‌ விசுவாசத்தினால்‌ இதை ஏற்றுக்கொள்கிறீர்கள்‌.இது விசுவாசம்‌. அதை நீங்கள்‌ ஏற்றுக்கொள்கிறீர்கள்‌. இயேசு“என்‌ பிதா ஒருவனை முதலில்‌ இழுத்துக்கொள்ளாவிட்டால்‌ அவன்‌ என்னிடத்தில்‌ வரமாட்டான்‌. என்னிடத்தில்‌ வருகிற யாவரையும்‌.” என்று கூறி. அவர்‌ அதை ஏற்றுக்கொள்வார்‌ என்றார்‌. அவரால்‌ வேறு எதையும்‌ செய்ய முடியாது. ஏனென்றால்‌ அவர்‌ அதை வாக்குப்பண்ணினார்‌. புரிகிறதா? இப்பொழுது ஒரு உணர்ச்சிவசப்படுதலின்‌ பேரில்‌ சார்ந்திருக்க வேண்டாம்‌. அவருடைய வார்த்தையின்‌ பேரில்‌ சார்ந்திருங்கள்‌. புரிகிறதா? வார்த்தை அவ்வண்ணமாய்க்‌ கூறினது. 97274.“என்‌ வசனத்தைக்‌ கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு.” நிகழ்காலம்‌. “நித்தியஜீவன்‌ உண்டு அவன்‌ ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல்‌ மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்‌.” பரிசுத்த ஆவி என்பது ஊழியத்திற்காக வல்லமையோடு நிரப்பப்பட்ட ஒரு அனுபவமாக இருக்கிறது. ஆனால்‌ அறிக்கை செய்தலும்‌ மற்றும்‌ கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுதலும்‌ விசுவாசத்தைக்‌ கொண்டிருப்பதாயும்‌ மற்றும்‌ உங்களுடைய அறிக்கையை செய்தலும்‌. தேவன்‌ உங்களுடைய பாவங்களை உங்களுக்கு மன்னித்திருக்கிறார்‌ என்பதும்‌ சுயாதீனமாக உணர்வதாக இருக்கிறது. 275.அவருடைய வார்த்தையின்‌ அடிப்படையின்‌ பேரில்‌. அவர்‌.“என்‌ பிதா ஒருவனை முதலில்‌ இழுத்துக்‌ கொள்ளாவிட்டால்‌ அவன்‌ என்னிடத்தில்‌ வரமாட்டான்‌” என்றார்‌. புரிகிறதா? இப்பொழுது தேவன்‌ உங்களை முதலில்‌ இழுக்க வேண்டும்‌. “என்னிடத்தில்‌ வருபவனை. நான்‌ அவனை புறம்பே தள்ளுவதில்லை.” புரிகிறதா? பார்த்தீர்களா? நீங்கள்‌—நீங்கள்‌ அதை ஏற்றுக்‌ கொண்டிருக்கிறீர்கள்‌. ஒரே காரியம்‌ நீங்கள்‌ பெற்றுள்ள... 98276.அவர்‌—அவர்‌ உங்களுக்காக மரித்தார்‌. ஆயிரத்து தொள்ளாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பே உங்களுடைய பாவங்கள்‌ மன்னிக்கப்பட்டன. அவர்‌ உங்களுக்காக என்ன செய்தார்‌ என்பதை நீங்கள்‌ ஏற்றுக்கொள்ள இப்பொழுது வந்திருக்கிறீர்கள்‌. புரிகிறதா? அவர்‌ உங்களுடைய பாவங்களுக்காக மரித்தார்‌ என்பதை நீங்கள்‌ விசுவாசிக்கிறீர்களா? நீங்கள்‌ அவரை உங்களுடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலியாக ஏற்றுக்கொள்வீர்களா? வேறு வார்த்தைகளில்‌ கூறினால்‌. அவர்‌ உங்களுடைய பாவங்களை ஏற்றுக்கொண்டபடியினால்‌. நீங்கள்‌ அவரை ஏற்றுக்கொள்கிறீர்கள்‌. 277.உங்களுடைய பாவங்களை ஏற்றுக்‌ கொண்டதற்காக நீங்கள்‌ மகிழுந்து அவருக்கு நன்றி செலுத்துவீர்களா? அவர்‌ அதை செய்தார்‌ என்று நீங்கள்‌ விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால்‌ உங்கள்‌ கரங்களை அப்படியே உயர்த்தி. “அவர்‌ என்‌ பாவங்களை ஏற்றுக்கொள்கிறார்‌ என்றும்‌.” ஆமென்‌. “என்‌ பாவத்தை ஏற்றுக்கொள்கிறார்‌ என்றும்‌ நான்‌ விசுவாசிக்கிறேன்‌” என்று கூறுங்கள்‌. சரி. 278.இப்பொழுது. நீங்கள்‌ இப்பொழுது பரிசுத்த ஆவியின்‌ அபிஷேகத்திற்கான ஒரு விண்ணப்பதாரராய்‌ இருக்கிறீர்கள்‌. 279.நீங்கள்‌ கிறிஸ்தவ ஞானஸ்நானம்‌ பெற்றிருக்கவில்லையென்றால்‌. நீங்கள்‌ கிறிஸ்தவ ஞானஸ்நானம்‌ பெற்றுக்‌ கொள்ளும்படியாக. இந்த மனிதர்களில்‌ ஒருவர்‌ அதை பார்த்துக்கொள்வார்‌. 280.“ஆனால்‌ இப்பொழுது அவர்கள்‌ ஞானஸ்நானம்‌ பண்ணப்படுவதற்கு முன்னே. பேதுரு இந்த வார்த்தைகளை இன்னும்‌ பேசுகையில்‌: பேதுரு இந்த வார்த்தைகளைப்‌ பேசுகையில்‌. பரிசுத்த ஆவியானவர்‌ அவர்கள்‌ மேல்‌ இறங்கினார்‌.” ஏன்‌? அவர்கள்‌ எல்லோரும்‌ எதிர்பார்ப்பின்‌ கீழ்‌ இருந்தனர்‌. இப்பொழுது நீங்கள்‌ எதிர்பார்ப்பின்‌ கீழ்‌ இருக்கிறீர்கள்‌. உங்களுக்கு உண்மையாக இருக்கும்‌ ஏதோ ஒரு காரியம்‌. தேவனுடைய இராஜ்யத்திற்குள்ளாக உங்களை முத்தரிக்கும்‌—அந்த ஏதோ ஒரு காரியம்‌ இப்போது உங்களுக்கு வேண்டும்‌. நீங்கள்‌ மறு— வேண்டும்‌. நீங்கள்‌ ஒவ்வொருவரும்‌ பரிசுத்த ஆவியைப்‌ பெற்றுக்கொள்ள விரும்பவில்லையா? உங்களுக்கு அது வேண்டியதில்லையா? நிச்சயமாக. நீங்கள்‌ விரும்புகிறீர்கள்‌. அதுவே உங்களுடைய காத்துக்கொள்ளும்‌ வல்லமையாய்‌ இருக்கிறது. புரிகிறதா? அவர்கள்‌ மேலறையில்‌ கூட்டப்பட்டிருந்தனர்‌. அவருடைய நாமத்தில்‌ ஜெபித்துக்‌ கொண்டிருந்தனர்‌. அந்த... பரிசுத்த ஆவியினால்‌ அபிஷேகிக்கப்பட்டனர்‌. அப்பொழுது ஊழியத்திற்கான வல்லமை வந்தது. 99281.பார்த்தீர்களா? ஓ. அதுதான்‌ இப்பொழுது உங்களுக்கு வேண்டும்‌. நீங்கள்‌ அதை இப்பொழுதே. பெற்றுக்கொள்ள முடியும்‌. அது இப்பொழுதே. உங்களுக்கானதாய்‌ இருக்கிறது. 282.இப்பொழுது. சகோதரரே. மேலே நடந்து வாருங்கள்‌. இப்பொழுது. நாம்‌ ஒவ்வொருவரும்‌. நம்முடைய கரங்களை இந்த சகோதரர்‌ மீது வைத்து. அவர்கள்‌ பரிசுத்த ஆவியைப்‌ பெற்றுக்கொள்ள ஜெபிப்போமாக. சகோதரர்களே. மேலே நடந்து வாருங்கள்‌. மேலே நடந்து வாருங்கள்‌. 283.இப்பொழுது. முழு சபையோரும்‌. இப்பொழுது உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள்‌. ஒவ்வொருவருமே!...?... 284.எங்களுடைய பரலோக பிதாவே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்‌ நாமத்தில்‌. இங்குள்ள ஒவ்வொரு இருதயத்தையும்‌ பரிசுத்த ஆவியின்‌ அபிஷேகத்தினால்‌ நிரப்பும்‌. 285.பரிசுத்த ஆவியைப்‌ பெற்றுக்கொள்ளுங்கள்‌, தங்களுடைய ஜீவியங்களில்‌ தேவனுடைய வல்லமையும்‌ மற்றும்‌ தேவனுடைய பிரசன்னமும்‌ நிறைந்து வழியும்படியாய்‌ இங்கே நின்று கொண்டு காத்துக்‌ கொண்டிருக்கிற இந்த ஜனங்கள்‌ பரிசுத்த ஆவியைப்‌ பெற்றுக்கொள்ளட்டும்‌.